dinamalar telegram
Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 6,900 டோஸ் கோவிஷீல்டு வருகை

Share
Tamil News
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 6,900 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி நேற்று முன்தினம் இரவு வந்ததையடுத்து, பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த 3ம் தேதி நிலவரப்படி 83 ஆயிரத்து 153 பேருக்கு முதல் டோஸ், 21 ஆயிரத்து 218 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தது.தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக முகாம்கள் நடைபெறவில்லை. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென நேற்று முன்தினம் காலை 500 டோஸ் கோவாக்சினும், மாலை 6,900 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்தன. உடன் அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் தடுப்பூசி பிரித்து அனுப்பபட்டு, அனைத்து பகுதிகளிலும் முகாம் நேற்று நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement