dinamalar telegram
Advertisement

நடவடிக்கை எடுப்பது யார்? அரசியல் கட்சி வாகனங்களில் புல் பார்கோர்ட் உத்தரவு காற்றில் பறக்குது பார்!

Share
Tamil News
கோவை:'ஐகோர்ட்' உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, அரசியல் கட்சியினரின் நான்கு சக்கர வாகனங்கள், 'புல் பார்' பம்பர்களை அகற்றாமல் வலம் வருகின்றன. தினமும் கண் முன் இதை கண்டும், காணாதது போல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.
மத்திய அரசு அறிவுறுத்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், கடந்தாண்டு நவ., மாதம் நான்கு சக்கர வாகனங்களில், 'புல் பார்' உள்ளிட்ட 'எக்ஸ்டிரா பிட்டிங்'களை அகற்ற, 'ஐகோர்ட்' உத்தரவிட்டது.வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது, 'புல் பார்' பம்பரால், 'ஏர் பேக்' விரிவதில் சிக்கல் ஏற்பட்டு உயிரிழப்புக்கு வழிவகுக்கின்றன.
இதையடுத்து, இந்த விஷயத்தில் விதிமீறும் வாகனங்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை, போக்குவரத்து துறையினர், போலீசார் தீவிரப்படுத்தினர்.வி.ஐ.பி., மற்றும் வி.வி.ஐ.பி., வாகனங்கள் உட்பட, அனைத்து வாகனங்களிலும் 'புல் பார்' உள்ளிட்டவற்றை அகற்றுமாறு, தலைமைச் செயலர் அறிவுறுத்தியும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வாகனங்களில், இவை பெரும்பாலும் அகற்றப்படவில்லை.
தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்யவும், பணிகளை வேகப்படுத்தவும், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு முதல்வர், அமைச்சர்கள் சமீபத்தில் வருகை புரிந்தனர்.அப்போது, 'புல் பார்' அகற்றாத கட்சியினரின் வாகனங்கள், வரிசையாக வலம் வந்தன.
தற்போதும், 'ஐகோர்ட்' உத்தரவை மதிக்காத கட்சியினரின் வாகனங்கள், கோவையில் வலம் வருகின்றன.ஊரடங்கு தளர்வு காரணமாக, வாகனங்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இச்சூழலில் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமான, கோர்ட் உத்தரவை பாரபட்சமின்றி நிறைவேற்றுவதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'நேர்மையான ஆட்சியை தருவோம்' என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு அரசு அதிகாரிகளின் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மட்டுமின்றி, அரசியல் கட்சியினரின் ஒத்துழைப்பும் அவசியம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Siva Kumar - chennai,இந்தியா

    கோர்ட் உத்தரவு எப்போதும் மக்களுக்கு மட்டுமே. திராவிஷ கட்சியினருக்கு இந்த கோர்ட் உத்தரவு எல்லாம் செல்லாது. கோர்ட்டுக்கே உத்தரவாள போடுகிறவர்கள் எங்கள் திராவிஷ கட்சி தலைவர்க.

  • Raj - Chennai ,இந்தியா

    இவனே கேக்குறான் பேனரூம் வைக்கிறான் . ஆட்டோக்காரனை தண்டிக்க முடிந்த சட்டத்தால் ஒரு லாயரை தண்டிக்க முடியலை . வெட்கம் வெட்கம்

  • Ram - ottawa,கனடா

    அதிகரிகள்தானே காலெக்ஷனை மந்திரிகளிடும் கொண்டு சேர்க்கிறார்கள் …. அவர்களை அடக்கமுடியுமா

Advertisement