dinamalar telegram
Advertisement

நடவடிக்கை! என்று குறையும் கொரோனா இறப்புகள் : மதுரை உட்பட தென் மாவட்டத்தில் 50 பேர் பலி ....பாதிப்பு, இறப்பு விகிதத்தையும் குறைக்க அரசு தீவிரம்

Share
Tamil News
மதுரை, : தமிழகத்தில் கொரோனா தொற்று பாதியாக குறைந்த நிலையில் இறப்பு மட்டும் குறையாமல் தொடர்கிறது.

நேற்று மட்டும் 374 பேர் பலியாகினர். தென்மாவட்டங்களில் மொத்த பலி 50.மதுரையில் நேற்று 279 பேர் பாதிக்கப்பட்டனர். 1420 பேர் குணமடைந்தனர். 69 ஆயிரத்து 880 பாதிக்கப்பட்டதில் 62 ஆயிரத்து 937 பேர் குணமடைந்தனர். மொத்த பலி 1022. நேற்று பலி 6. தற்போது 5921 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3386 ஆக்சிஜன் படுக்கைகளில் 1185, 1554 சாதாரண படுக்கைகளில் 456 பேர், 672 ஐ.சி.யு.,வில் 463 பேர் கோவிட் கேர் சென்டர்களில் 454 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மதுரைக்கு மட்டும் 14 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

வியாபாரிகள், தனியார் நிறுவன தொழிலாளர்கள், டாக்ஸி டிரைவர்கள், மார்க்கெட் தொழிலாளர்கள், வியாபாரிகள் போன்ற முன்னுரிமை அமைப்பினருக்கு முகாம் மூலம் தடுப்பூசி போடப்படுகிறது. மற்றவர்களுக்கு அடுத்தடுத்து வரும் போது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படும்.திண்டுக்கல்லில் 196 பேருக்கு புதிய தொற்று. 246 பேர் குணமடைந்தனர். 21 பேர் இறந்தனர். 30 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டதில் 27 ஆயிரத்து 840 பேர் குணமடைந்தனர். மொத்தம் 512 பேர் இறந்தனர். 1800 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

904 ஆக்சிஜன் படுக்கைகளில் 608, 1230 சாதாரண வார்டில் 501, 149 ஐ.சி.யு.,வில் 88 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.தேனியில் 219 பேர் பாதிக்கப்பட்டனர். 762 பேர் குணமடைந்தனர். 12 பேர் இறந்தனர். 40ஆயிரத்து 543 பேர் பாதிக்கப்பட்டதில் 37 ஆயிரத்து 980 பேர் குணமடைந்தனர். 456 பேர் மொத்த பலி. 2107 பேர் சிகிச்சையில் உள்ளனர். 631 ஆக்சிஜன் படுக்கையில் 123, 381 சாதாரண படுக்கைகளில் 104, 66 ஐ.சி.யு.,வில் 36 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.ராமநாதபுரத்தில் 115 பேர் பாதிக்கப்பட்டனர். 371 பேர் குணமடைந்தனர். ஒருவர் பலி. 18ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டதில் 17ஆயிரத்து 285 பேர் குணமடைந்தனர். 301 பேர் இறந்தனர். 1096 பேர் சிகிச்சையில் உள்ளனர். 581 ஆக்சிஜன் படுக்கைகளில் 171, 918 சாதாரண படுக்கைகளில் 75, 106 ஐ.சி.யு.,வில் 16 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.சிவகங்கையில் 145 பேர் பாதிக்கப்பட்டனர். 181 பேர் குணமடைந்தனர். இருவர் பலி. 16ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டு 14ஆயிரத்து 627 பேர் குணமடைந்தனர். 181 பேர் இறந்தனர். 1383 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1162 ஆக்சிஜன் படுக்கைகளில் 434, 797 சாதாரண படுக்கைகளில் 252, 178 ஐ.சி.யு.,வில் 126 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.விருதுநகரில் 273 பேருக்கு புதிய தொற்று. 444 பேர் குணமடைந்தனர். 8 பேர் பலி. 42ஆயிரத்து 426 பேர் பாதிக்கப்பட்டதில் 38ஆயிரத்து 897 பேர் குணமடைந்தனர். 487 பேர் பலி. 3042 பேர் சிகிச்சையில் உள்ளனர். 707 ஆக்சிஜன் படுக்கைகளில் 415, 598 சாதாரண படுக்கைகளில் 270, 143 ஐ.சி.யு.,வில் 80 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இறப்புகள் குறையாத நிலையில் ஜூன் 15 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு மாதம் கழித்து கடைகள் திறக்கப்பட உள்ளதால் எல்லோருமே மது கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிடுவது நிச்சயம். இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு என்ன செய்யப் போகிறதென தெரியவில்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை இப்போது அவசர கதியில் திறக்க வேண்டிய அவசியம் இல்லை என மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • navasathishkumar - MADURAI,இந்தியா

    வீடு தேடி ரேசன்.இன்று மிகவும் எளிது ஒரு ஒ டி பி ,பயோமெட் ரிக் அதே போல் ஊசிகள் வந்தவுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடன் மருத்துவ குழுக்கள் ஊசி போட வேண்டும்..இன்றும் கொரோனா பரிசோதனை விருப்ப பாடமாகவே உள்ளது..வீட்டில் இருந்தபடியே அதெல்லாம் இங்கே யாரும் இல்லை என்று சொல்லும் பலரை காண முடிகின்றது இதற்கு மாற்று வழி முதியோர் என்றால் பென்சனை கட் பண்ண வேண்டும்..மற்றவர் என்றால் ரேசன் கட் பண்ண வேண்டும் தன்னால் ஓடி வருவார்கள்.. சுகாதார பணி யாளர்கள் வந்தால் டெய்லி கூலிக்கு வந்து கணக்கு மட்டுமே காட்டுவார்கள் தேவையா தெண்ட செலவு?

    • Manian - Chennai,ஈரான்

      "பகுத்தறிவாளி" போலிகளை எப்படி மாற்ற முடியும்? 69% கோட்டா போலி ஓபீசுகளை யார் திருத்த முடியும்?

  • venkates - ngr,இந்தியா

    விடியல் அரசு சொல்வது ஒன்று,,செய்வது ஒன்று? மக்கள் அழிக்கிறார்கள்

  • Manian - Chennai,ஈரான்

    இந்த துயர் தீர்க்க அறிவுள்ள, உண்மையான புள்ளி விவரம் தெரிந்த பரவலாக லாஜிஸ்டிக்கு தெரிந்த, கம்பியூட்டர் மென்பொருள் மூலம் அதிக பலன்-குறைந்த உழைப்பு தரும் விஞ்ஞானிகள் தேவை. ஆனால் இட ஒதுக்கீட்டில் போலி ஓபீசிகள் 95% அரசாங்க அதிகாரிகளாக மாமூல் மூலம் பதவியில் அமர்ந்திருக்கிறார்களே அதை விரும்பியவர், ஆதரித்த மக்கள் சாவதை தடுக்க முடியுமா? 11% உள்ளொதுக்கீடு பெற்ற வன்னிய திலகம் அண்ணல் ராமதாசுக்கு எத்தினி சதம் இதில் பங்கு? பகுத்தறிவாளர்கள் பங்கு எவ்ளோவு. அவினுகதான் இப்ப அதிகமா சாவறனுக

Advertisement