dinamalar telegram
Advertisement

கறுப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு: ஆக்ஸிஜன், ஆம்புலன்சுக்கு வரிக்குறைப்பு

Share
புதுடில்லி: கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டதுடன், ஆம்புலன்ஸ், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, ரெம்டெசிவிர் மருந்துகள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.


ஜிஎஸ்டி கவுன்சிலின் 44வது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.




பின்னர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஆம்போடெரிசின்-பி மருந்து மீதான ஜிஎஸ்டி நீக்கப்படுகிறது. கோவிட் சிகிச்சைக்கு தேவையான பெரும்பாலான பொருட்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் மீதான ஜிஎஸ்டி 28 %ல் இருந்து 12 % ஆகவும், மருத்துவ ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன்செறிவூட்டிகள், வென்டிலேட்டர், வென்டிலேட்டர் மாஸ்க், கோவிட் பரிசோதனை கருவிகள், பல்சி ஆக்சிமீட்டர், வெப்பநிலை பரிசோதனை கருவிகள், ரெம்டெசிவிர் மீதான ஜிஎஸ்டி 12%ல் இருந்த 5 % ஆகவும், சானிடைசர் மீதான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 5 % ஆகவும், குறைக்கப்படுகிறது. தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக தொடரும்.


மருந்துகள், ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் 4 வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • THOMAS LEO - TRICHY,இந்தியா

    இது நல்ல பிள்ளைக்கு அடையாளம். (அடுத்த வருட மாநில அரசு தேர்தலுக்கு அச்சாரமோ)

  • ravi chandran -

    கொரோனாவில் செத்த பிணத்திற்கு ஜிஎஸ்டி போடும் ஒரே நல்ல அரசாங்கம்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    தமிழக நிதி அமைச்சருக்கு நன்றி. அவரது ஆலோசனை தான் இது.

  • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

    உங்கள் ஊரில் மோடி அவர்கள் ரொம்ப சிறிய முதலீட்டில் தொழில் தொடங்க வாய்ப்பு :: தினமும் 1000 ரூ வரை , ஒவொரு நாளும் PETROL வாங்கி திருப்பி அடுத்தவாரம் விற்கவும் , எப்படி மோடியா கொக்கா , பாருங்கள் எவ்வளுவு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்போகிறார் பாருங்கள்

  • S. Narayanan - Chennai,இந்தியா

    இவ்வளவு நாள் இந்த மருந்துகளுக்கு அதிக தேவை இருக்க வில்லை. மக்கள் அதிகம் உபயோகிக்கும் போது தான் அதன் முக்கியத்துவம் உணர்ந்து அரசு செயல் படும்.

Advertisement