dinamalar telegram
Advertisement

கெக்கே பிக்கே என உளறுகிறாரா திக் விஜய் திங் : டுவிட்டரில் டிரெண்டிங்

Share
புதுடில்லி : ‛‛நாங்கள் ஆட்சி வந்தால் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ‛ஆர்டிக்கிள் 370'ஐ கொண்டு வருவது பற்றி பரிசீலிப்போம்'' என பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டமான ஆர்டிக்கிள் 370 கடந்த 2019ல் விலக்கப்பட்டது. அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது வரை இதுதொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கிளப் ஹவுஸ் ஆன்லைன் சாட்டில் காங்கிரஸின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பங்கேற்றார். அப்போது இதுதொடர்பான கேள்விக்கு அவர், பாகிஸ்தான் பத்திரிக்கையாளரிடம், ‛‛காஷ்மீரில் ஆர்டிக்கிள் 360 நீக்கப்பட்ட பிறகு அங்கு ஜனநாயகம் இல்லாமல் போய் விட்டது. இது ஒரு தவறான முடிவு. தாங்கள் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான ஆர்டிக்கிள் 370ஐ மீண்டும் கொண்டு வருவது பற்றி பரிசீலிப்போம்'' என கூறினார்.

திக்விஜய் சிங்கின் இந்த கருத்துக்கு பா.ஜ.வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.வின் அமித் மால்வியா கூறுகையில், ‛‛இதைத்தான் பாகிஸ்தானும் விரும்புகிறது'' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


பா.ஜ.வின் தேசிய செய்தித்தொடர்பாளர் சமித் பாத்ரா கூறுகையில், ‛‛திக்விஜய் சிங் இந்தியாவுக்கு எதிராக விஷத்தைத் வெளியே விஷத்தை பரப்புகிறார்'' என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டுவிட்டரில், ‛‛ஜனநாயகம் ஆளுபவர்களின் கைகளில் மட்டுமே உள்ளது. வன்முறையைத் தூண்டுவோர் தங்கள் சொந்த குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, இங்குள்ள குழந்தைகளுக்கு கற்களைக் கொடுக்கின்றனர். காஷ்மீர் பண்டிதர்கள் ஒரே இரவில் பள்ளத்தாக்கில் இருந்து வேட்டையாடப்பட்டபோது ஒரு மில்லியன் பேர் இறந்தனர். இன்றும் கூட துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எங்கள் காஷ்மீர் சகோதரர்களைத் தூண்டுவதற்கு பதிலாக, தேசபக்தி கொண்ட திக்விஜய் சிங் அவர்களுக்கு பாட எடுக்க வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.

பா.ஜ., தலைவர்கள் மட்டுமல்லாது நெட்டிசன்களும் திக்விஜய் சிங்கிற்கு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில், #Article370, #Digvijaysingh போன்ற ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. இதில் பதிவான சில கருத்துக்கள் கீழே...

‛‛நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் விளையாடும் திக் விஜய் சிங் மாதிரியான ஆட்கள் உள்ள காங்கிரஸ் கட்சி இனி எப்போதும் ஆட்சிக்கு வரக்கூடாது என மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்''.

‛‛இவருக்கு இதே வேலையாகிவிட்டது. எப்போது பார்த்தாலும் இதுபோன்று ஏதாவது ஒன்றை உளறிக் கொண்டுள்ளார். இந்திய மக்களிடம் ஏதேதோ சொல்லி பார்த்தார், மக்கள் யாரும் கேட்கவில்லை. அதனால் பாகிஸ்தான் உதவியை திக் விஜய் சிங் நாடி விட்டார் போல...''

‛‛எதற்காக ஆர்டிக்கிள் 370ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறீர்கள். அதற்கு சரியான ஒரு காரணம் கூறுங்கள். ஒரு காஷ்மீரியாக நான் கூறுகிறேன். இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக தான் உள்ளோம். எங்களுக்கு ஆர்டிக்கிள் 370 வேண்டாம்''.

‛‛உங்களை நினைத்தால் கேவலமாக உள்ளது திக் விஜய் சிங். இந்திய தேசிய காங்கிரஸ் என்பதற்கு பதிலாக இந்தியாவுக்கு எதிரான காங்கிரஸ் என பெயரை மாற்றி வையுங்கள்''.

‛‛பயங்கரவாதிகள், காங்கிரஸ்காரர்கள்''. இப்போது கூறுங்கள் இரண்டில் எது நாட்டிற்கு ஆபத்து என்று...''

‛‛இவர் கூறுவதை பார்த்தால் நாட்டின் பாதுகாப்பு முக்கியமல்ல. பா.ஜ.வை தோற்கடிக்க வேண்டும். அதற்காக எதிரி நாடான பாகிஸ்தானையும், பயங்கரவாதிகளிடம் கூட இவர்கள் உதவி கேட்பது போன்று உள்ளது''.

‛‛இப்போது தான் அந்த மாநிலத்தில் உள்ள மக்கள் அமைதியாக வாழ துவங்கி உள்ளனர். வன்முறை, போராட்டங்கள் குறைந்துள்ளன. மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது. இதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காதா''. உங்களின் அரசியலுக்காக இன்னும் எத்தனை காலம் அந்த மக்களை வன்முறையிலும், போராட்டத்திலும் தள்ள போகிறீர்கள்''.

இப்படி பலரும் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (41)

 • ஆப்பு - ,

  ஆளுக்கு பாஞ்சி லட்சம் போடுவோம். வருஷம் ரெண்டு கோடி பேருக்கு வேலை குடுப்போம்னு உளறிட்டு எட்டு வருஷமா ஓட்டிக்கிட்டிருக்காங்க. ஆத்ம நிர்பரான்னு உளறிட்டு சீனாவிலிருந்து இறக்குமதி ஒண்ணும் குறையலை. எல்லாமே உளறல் தான். போங்க.. போங்க.

 • ssh - mali,மாலத்தீவு

  திக் விஜய் சிங்கை ஏன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யக்கூடாது?

 • sankaseshan - mumbai,இந்தியா

  Where are traitors saiman kuruma saiko and their supporters? They talked big about Thoppul kodi uravu

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  Forgive him. He is affected by a very very different variant of corona virus, which in the world, only he has got it, and from him soon other Congress leaders might get. And for which there is no cure, no vaccination, no medicine. We can only pray for his speedy recovery from his present illness.

 • பேசும் தமிழன் -

  நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்.... நீங்கள் ஆட்சிக்கு வரவும் தேவை இல்லை

Advertisement