dinamalar telegram
Advertisement

அன்னிய செலாவணி இருப்பு வரலாற்று சாதனை படைத்தது

Share
மும்பை : நாட்டின் அன்னிய செலாவணி, முதன் முறையாக 600 பில்லியன் டாலர் என்ற நிலையை தாண்டி உச்சம் தொட்டுள்ளது.

இது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 43.80 லட்சம் கோடி ரூபாய். ரிசர்வ் வங்கியின் கவர்னர், அண்மையில் நடைபெற்ற பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்பின்போது, நாட்டின் அன்னிய செலாவணி விரைவில் 600 பில்லியன் டாலர் என்ற நிலையை எட்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் கூறியபடியே கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி 600 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், அதாவது மே 28ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு 598 பில்லியன் டாலராக இருந்தது.

தற்போதைய உயர்வுக்கு, வெளிநாட்டு பண இருப்பு மதிப்பு அதிகரித்தது ஒரு காரணமாக அமைந்துள்ளது. நாட்டின் தங்கத்தின் இருப்பு 3,665 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்து, 2.74 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

 • kattus - chennai,இந்தியா

  அந்நிய செலவணி அதிகரிக்க பாடுபட்ட தலீவர் வாழ்க

 • sahayadhas - chennai,பஹ்ரைன்

  அப விலைவாசி வரி எல்லாம் குறைந்து விடும் . ஆக சந்தோசம்.

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   விலைவாசி, வரியெல்லாம் குறையாது. நம் மக்கள் தொகை 130 கோடிகள். அதில் இலவசமாக தின்று திளைப்பவர்கள், மக்கள் பணத்தை கொள்ளை அடித்து வாரி சுருட்டும் கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுக போன்ற கட்சிகள் இருக்கும் வரையில் வாய்ப்பே இல்லை, வாய்ப்பே இல்லை ராஜா.

 • ponssasi - chennai,இந்தியா

  தற்பெருமையே நம் சொத்து, ஆதார் என்னும் சொல்லை பலகோடி மக்கள் உச்சரித்தனர், நம் ஆரோக்கிய செயலிகளை பலகோடி பேர் பதிவிறக்கம் செய்தனர், உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி முகாம், நாட்டின் அன்னிய செலாவணி விரைவில் 600 பில்லியன் டாலர் இதில் என்ன பெருமை, இலவச உணவுக்காக உலகிலே பெரிய வரிசை இந்தியாவிடம் தான் உள்ளது, காலை பத்துமணிக்கு கொடுக்கப்போகும் ரேஷன் அரிசிக்கு அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் நீண்ட வரிசை, உயிர்காக்கும் தடுப்புஊசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசை, ஏன் கொரோனா தொற்றில் உலகில் முதல் மூன்று இடங்களுக்குள் நாம் தான். உலகில் பொருளாதாரம் குன்றிய நாடுகளில் கூட இல்லாத அளவாக பெட்ரோல், டீசல் விலையில் உச்சம் தொட்டதுவும் நாம் தான். பெருமைகளை விட அவமானகள் அதிகம், இன்றைய அதிகார வர்க்கம் அவமானங்களை கூட பெருமை படுத்தி பேசும் உலகம், ஏற்பது இகழ்ச்சி என்று போதித்த நாம் இன்று உலக நாடுகளிடம் அதிகமாக ஏந்துகிரோம் என்று பெருமைபேசும் அளவுக்கு வந்துவிட்டும்.இது களவாணிகளில் உலகம், சொல்வதுவும் வெல்வதுவும் அவர்களே.....

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் மாற்று எரிபொருளுக்கு கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும் .மின் சக்தி மற்றும் சூரிய சக்தியின் மூலம் வாகனங்கள் இயக்க அதிரடி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் .நமது நாட்டில் ஏற்றுமதி செய்வதை விட இறக்குமதி செய்வதுதான் அதிகரித்து வருகிறது ,கச்சாபொருள் இறக்குமதியால் நமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது ,நாம் அமெரிக்க டாலரில் அன்னியச் செலாவணியைக் கொட்டிக் கொடுத்து எரிபொருளை இறக்குமதி செய்து நம்மை நாமே காலம் காலமாக சூடுவைத்துக் கொண்டு இருக்கிறோம்.,எரிபொருள் இருக்குமதியைக் குறைத்தால் நமது நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு சும்மா பிச்சுக்கிட்டுப் போகும்.

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   இந்தியாவின் ஆண்டு வருமானம் 27 லட்சம் கோடிகள். விவசாய மானியம், உர மானியம், காஸ் மானியம், கல்விக்கடன் மானியம், ரேஷன் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்புவகைகள் மானியம், உங்களை பக்கிகளிடம் இருந்து, சப்பை மூக்கனிடம் இருந்து, மூர்க்க தீவிரவாத கூட்டங்களிடம் இருந்து காப்பாற்ற பாதுகாப்பு மானியம், உள்துறை செலவுகள் மானியம், உள் கட்டமைப்புகள் செலவுகள் (நீங்கள் பயன்படுத்தும் சாலைகள், பாலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், அரசாங்க அலுவலகங்கள் போன்றவை), அரசாங்க அலுவலகர்களுக்கு சம்பளம், பென்ஷன் இவற்றிற்கு ஆகும் செலவுகள், ஒவ்வொரு மாநிலங்களும் போட்டி போட்டு மக்களுக்கு கொடுக்கும் இலவசங்கள் (கட்டுமரம் டிவி, கட்டுமரம் பிறந்தநாளுக்கு 4000 ரூபாய் கொடுத்தமாதிரி) இதற்கெல்லாம் குறைந்த பட்சம் 5 முதல் 6 லட்சம் கோடிகளையாவது மானியம் என்ற பெயரில் மக்களுக்கு இலவசமாக அள்ளி தெளிக்க வேண்டும். அந்த பணத்தை எங்கிருந்து வசூலிக்கலாம் என்று G.S. ராஜன் சொன்னா நாங்களும் தெரிஞ்சிக்கிட்டு எங்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்கிறோம்.

  • ponssasi - chennai,இந்தியா

   இந்தியாவில் ஊதாரித்தனமாக செலவுகளுக்கு பஞ்சமில்லை. செலவுகளை கட்டுப்படுத்தாமல் பதவிக்கு வந்தவர்களெல்லாம் அவர்களுக்கான சம்பளத்தையும், ஆடம்பர செலவுகளையும் மக்கள் வரிப்பணத்தில் அவர்களே முடிவு செய்கிறார்கள். கீதையில் கிருஷ்ணன் சொன்னதுபோல எதை கொண்டுவந்ததூம் அதை இழப்பதற்கு, அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் அவர்களின் அடிவருடிகளும் இந்திய கஜானாவை காலி செய்யாமல் விடமாட்டார்கள் போல, இவர்களும் இந்திய செல்வங்களை கொள்ளையடிக்கவந்த கஜினி முகமது போன்றவர்களே.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  நாட்டின் வளர்ச்சிக்கு எந்த செலவும் செய்யாமல் உருட்டிக்கிட்டே இருந்தால் 600 இல்லை 1000 பில்லியன் டாலர் கூட சேர்த்து வைக்கலாம்... என்ன பிரயோஜனம்...??? சைலன்டா ஒரு விஷயம் நடக்குது... அதாவது நம் அண்டை நாடுகள் வளர்ச்சி பாதையில் வேகமாக போயிக்கிட்டு இருக்கு... நாம் கோவிட் கூடவும் தேர்தல் கூடவும் மட்டுமே போட்டி போடுறோம்..

  • blocked user - blocked,மயோட்

   தீவிர தொடர் ஆய்வின் மூலம் திமுக தமிழகத்தை டெவலப்மெண்ட், டெவலப்மெண்ட், டெவலப்மெண்ட் என்று உருட்டி ஏறாளமாக வளத்து வைத்து இருப்பது உமக்குத் தெரியவில்லையா? புரியாத ஆளாய் இருக்கிறீரே... பக்கோடா வடையெல்லாம் நினைவில் இல்லை போலும்...

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   ஹி.ஹி..ஹி...முன்னாடி நாட்டில் பணம் இல்லைனு சொல்லவேண்டியது, இப்போ பணம் இருக்கு வளர்ச்சி இல்லைனு சொல்லவேண்டியது. விளங்கிடும்.

Advertisement