dinamalar telegram
Advertisement

அடித்தளத்தை அசைப்பதிலேயே இவர்கள் குறியாக இருக்கின்றனர்...

Share
மாநிலங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் அதிகாரம், நிதி தேவைப்படலாம்; அதை முன்னெடுக்க பார்லிமென்ட், நீதிமன்றங்கள் உள்ளன. அதை விட்டு தமிழர்களிடம், இந்தியா மீது வெறுப்பையும், தமிழ் மாநில பிரிவினை எண்ணங்களையும் விதைக்கும் தி.மு.க.,வின் அரசியல், ஆபத்தாக முடியும்.
- புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி

'அடித்தளத்தை அசைப்பதிலேயே இவர்கள் குறியாக இருக்கின்றனர். இவர்களுக்கு யார் தான் புரிய வைப்பதோ என்பது தெரியவில்லை...' என, கவலை தெரிவிக்க தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை.கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதை விசாரிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா வலியுறுத்த வேண்டும். தவறு செய்தவர்களை கண்டிக்க, விசாரணையை கோர வேண்டும்.

- முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா

'கொரோனா எங்கிருந்து வந்தது என்பது தான், சின்னப்பிள்ளைகளுக்கு கூட தெரியுமே; அதற்கு ஏன், ஐ.நா., விசாரணை...' எனக் கேட்க தோன்றும் வகையில், பா.ஜ.,விலிருந்து வெளியேறியுள்ள, முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிக்கை.விழுப்புரம், -காணை அருகே மாம்பழப்பட்டு கிராமத்தில், ஏரிக்கரையில் இருந்த குடிநீர் தொட்டியை தலித் மக்கள் பயன்படுத்துவது பிடிக்காமல், ஜாதிவெறி மனநோயாளிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அரசே அந்த மன நோயாளிகளை கைது செய்!
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

'வீடியோவுடன் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். அப்படியே போலீசில் சொல்லி, குற்றவாளிகளை உள்ளே தள்ள வேண்டியது தானே; எதற்கு இந்த அறிக்கை...' எனக் கேட்க தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.சிறு, குறு, நடுத்தர கடனாளிகளுக்கு கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரி, ரிசர்வ் வங்கியை வலியுறுத்தும் முயற்சிக்கு, 12 மாநில முதல்வர்களின் கூட்டு வலிமையை வெளிப்படுத்த, ஸ்டாலின் எடுக்கும் முயற்சி, கூட்டாட்சி சகாப்தத்தின் முதல் அத்தியாயம்; வெல்லட்டும் அவர் முயற்சி.
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்

'பத்துக்கு ஒரு அறிக்கையிலாவது, மாநில காங்., தலைவரை பாராட்டினால், உங்கள் கட்சி இங்கு கொஞ்சமாவது வளருமே...' என, சொல்ல தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளை துண்டித்து, சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் மத்திய அரசு தடுக்க முற்பட வேண்டும்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

'அதற்கு இலங்கைக்கு, பல லட்சம் கோடி டாலர் கடன், முதலீடு செய்ய வேண்டும்; செய்ய முடியுமா...' எனக் கேட்க துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (21)

 • வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா

  திருமா அறிக்கை விட்டாத்தானே பட்டியலினத்தவரின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் என்கிற பெயரை காப்பாத்திக்க முடியும் ?

 • Ganesh -

  அடித்தளம் சரியாக இருந்ததால் தான் பல நாடுகள் இந்தியாவைப் பின் பற்ற முடிவு செய்துள்ளன. அதை அசைக்க முயற்சி செய்வது இந்த திமுக ஆட்சி. உதாரணமாக : திராவிடர்களை முன்னேற்ற வேண்டுமானால் அவர்களுக்கு தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி தரலாம் அல்லது இலவசமாக எல்லாம் தந்து வாழ வைக்கலாம் ஆனால் கருவறையை குறிவைத்து என்ன முன்னேற்றத்தை தந்து விடமுடியும்? பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசமாக சம்பளம் தருவது போல் ஒரு ஏற்பாடு செய்யலாம். ஆனால் கருவறைக்குள் சென்றால் தான் முன்னேற்றம் என்றால் செய்யும் தொழில் தான் முக்கியமா?இதைத்தானே நீங்கள் சொல்லக்கூடிய அந்த வந்தேறிகள் செய்தார்கள் அப்போ அது சரிதானே? அப்போ வேதம் கத்துக்கணும் பூனல் மாட்டிக்கனும். No Non veg.மது அருந்தக்கூடாது. இதற்கெல்லாம் சம்மதமா? சம்மதம் என்றால் அவரும் ஒரு பிராமணர் தான். திராவிட ஆட்சி வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் குற்றங்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது. முதல்ல எந்த குற்றமும் செய்யாம இருந்து காட்டுங்க அப்பறம் பேசுங்க.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஒரு நல்ல விவசாயி திருந்தி விடுங்கள் களைகளே என்று பேச்சுவாத்தை நடத்த மாட்டார்..... மேதகு சுப்பிரமணியம் சாமி வந்தால் எளிதாக களை எடுத்து பயிர்களை காக்கலாம்...

 • Visu Iyer - chennai,இந்தியா

  ஏழு வருஷமா இதே தானே நடந்து கொண்டு இருக்கிறது.. மத சார்பின்மை என்ற இந்திய அடித்தளத்தை இந்துத்துவா என்ற மக்கள் விருப்பம் இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு அசைப்பதிலேயே குறியாக இருக்கின்றனரே... என்ன செய்ய.. பட்டினத்தார் பாடல் "ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கடந்துழல அகப்பட்டீர் நீரே" தான் நினைவில் வருகிறது

  • RANGAPRASAD - CHENNAI,இந்தியா

   ஹிந்துக்கள் பெரும்பான்மை இருக்கும் வரை தான் இந்தியா மத சார்பில்லாத நாடு. முஸ்லீம் பெரும்பான்மை ஆகிவிட்டால் இப்படி எல்லாம் கருத்து கூற முடியாது ஐயரே.

 • POORMAN - ERODE,இந்தியா

  யாருப்பா இந்த ஷ்யாம். ஓ,ஓ, ஊருக்கெல்லாம் நீட் வேணும் நியாயம் பேசிட்டு, போதிய அளவுல +2 மார்க் வாங்காத தன் புள்ளைய சிபாரிசு பிடிச்சு தகுதியில்லாத மகளுக்கு மருத்துவ சீட் வாங்குன உத்தமர் பெற்ற வழித்தோன்றலா? பிஜெபி இவங்ககிட்ட கவனமா இருக்கனும். அதிகமா வேற யாராச்சும் எலும்புத்துண்டை காண்பித்தால் போதும்

Advertisement