dinamalar telegram
Advertisement

டுவிட்டருக்கு தடைவிதித்த நிலையில், கூ செயலியில் கணக்கு துவக்கியது நைஜீரிய அரசு

Share
புதுடில்லி: 'டுவிட்டர்' சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'கூ' செயலியில், ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், அரசு சார்பில் அதிகாரப்பூர்வ கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

நைஜீரிய அதிபர் முகமது புஹாரி, பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக, டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். அதை, அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இதையடுத்து டுவிட்டருக்கு, நைஜீரிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'கூ' செயலியின் பயன்பாடு, நைஜீரியாவில் அதிகரிக்க துவங்கியது. அந்த செயலியில், நைஜீரிய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, 'கூ' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அப்ரமேயா ராதாகிருஷ்ணா கூறியுள்ளதாவது:நைஜீரிய அரசின் சார்பில் எங்கள் செயலியில் அதிகாரப்பூர்வமாக கணக்கு துவக்கப்பட்டுள்ளது. நைஜீரிய உள்நாட்டு மொழியிலும், இந்த செயலியை பயன்படுத்தும் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியாவைத் தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் நம் சிறகை விரித்துள்ளோம்.
இந்திய அரசின், தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தத்தில் கூறியுள்ள அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றியுள்ளோம். பல மொழிகளிலும் எங்கள் செயலியை பயன்படுத்தலாம். அதிக வசதிகளை ஏற்படுத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த செய்தியை, அவர் டுவிட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • visu - Pondicherry,இந்தியா

    முதலில் இந்தியா அரசாங்கம் மோகமாக கூ விறற்க்கு மாறவேண்டும் ட்விட்டரிலிருந்து வெளியேற வேண்டும் எதிர்ப்ப இல்லாமல் த்விட்டேர் போலி போராளிகளுக்கு போரடித்துவிடும்

  • V GOPALAN - chennai,இந்தியா

    TOO LATE. MODI shoud support

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    அடப் போங்கய்யா. கூ தப்பித் தவறி வளர்ந்துட்டாலும் டுவிட்டர் ஒதுங்கிடுவானா? சிம்பிளா இந்த அப்ரமேயாவை விலைக்கு வாங்கிடுவான். இவனும் பணத்தாசையில் கூ'வை வித்துப்புடுவன். இந்திய அரசாங்கமே 51 சதவீத பங்கு வைத்துக் கொண்டால் ஒழிய எதையும் கண்ட்ரோல் பண்ண முடியாது.

  • sri - trichy,இந்தியா

    இந்திய பிரதமர் இந்த செயலியை பயன் படுத்தவேண்டும் . இதுதான் அவர்களுக்கு கொடுக்கும் பதிலடியாக இருக்கும். அவர்களிடம் கெஞ்சி தயவு செய்து எங்கள் நிபந்தனையை ஏற்றுக்கொள் என்பது பிச்சை எடுப்பதற்கு சமம் . திரு.மோடி ஏன் இந்த செயலீக்கு இன்னும் மாறவில்லை

Advertisement