dinamalar telegram
Advertisement

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Share
வெள்ளி முதல் வியாழன் வரை (11.6.2021 - 17.6.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்

சந்திரன், புதன், குருவால் மிகுந்த நற்பலன் உண்டு. சூரியன் வழிபாடு வளம் தரும்.

அசுவினி: புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வருமானம் சற்றே அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பெண்களின் தேவைகள் நிறைவேறும்.

பரணி: பணியாளர்களின் டென்ஷன் குறையும். கடன்களை ஓரளவு குறைப்பீர்கள். பணியாளர்கள் கவனமாகப் பணிபுரிய வேண்டிய வாரம். வியாபாரிகள் நிம்மதி அடைவீர்கள்.

கார்த்திகை 1: பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பணியாளர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உற்றவரின் செயல் ஒன்றால் மகிழ்ச்சி அடைவீர்கள்.


ரிஷபம்
புதன், சுக்கிரன், சந்திரன் நன்மைகளை வழங்குவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

கார்த்திகை 2,3,4: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். குழந்தைகளால் ஏற்பட்டபிரச்னைகள் தீரும். வருமானம் பெருகும். நிம்மதி வளரும்.

ரோகிணி: வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளி வைப்பது சிறந்தது. உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மாணவர்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

மிருகசீரிடம் 1,2: அலுவலக விஷயங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்கள் அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிரவேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை கணவரால் பலப்படும்.


மிதுனம்
ராகு, கேது, புதன் அனுகூல பலனை தருவர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

மிருகசீரிடம் 3,4: சகோதர, சகோதரிகளின் நல்லெண்ணத்தைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் அனுசரிப்பால் நிம்மதி அடைவீர்கள். எதிர்பாராத விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு.

திருவாதிரை: உழைப்பால் உயருவீர்கள். குழந்தைகள் முன்பைவிட அனுகூலமாக இருப்பார்கள். புதிய நன்மைகள் கைகூடும். சிறு கவலைகள் தீரப்பெறுவீர்கள். எதிரிகள் அடங்குவார்கள். பணம் வரும். ஒரு எண்ணம் ஈடேறக் காண்பீர்கள்.

புனர்பூசம் 1,2,3: அவசரமாக செயல்பட்டுத் தவறுகள் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிக்கலான பிரச்னைகளில் சுமுகமான முடிவை கண்டு நிம்மதி பெறுவீர்கள். மகிழ்ச்சி பெருகும்.


கடகம்

சூரியன், புதன், ராகு அதிர்ஷ்டமான பலன்களை தருவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

புனர்பூசம் 4: கணவர்/ மனைவி வழியே நல்ல செய்திகள் கிடைக்கும். பெண்கள் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.. இளம் வயதினர் முயற்சியை அதிகப்படுத்த வேண்டும்.

பூசம்: பண வரவு சற்றே அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பிர்கள். குடும்ப நலம் திருப்தி தரும். உடன் வேலைபார்க்கும் பணியாளர்கள் ஓரளவு உதவுவார்கள். தந்தை நலனுக்காகச் செலவு செய்வீர்கள்.

ஆயில்யம்: மக்களால் ஏற்பட்ட பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். சொத்துக்கள் சம்பந்தமான தீர்மானங்கள் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பணியாளர்கள் அளவோடு வளர்ச்சி காண்பீர்கள். நல்ல திருப்பம் உண்டாகும்.


சிம்மம்
சுக்கிரன், சந்திரன், புதன், சூரியன் அனுகூல அமர்வில் உள்ளனர். பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.


மகம்: பயணங்களைத் தள்ளிப்போடுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்பெறுவீர்கள் . நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் மகிழ்ச்சி கூடும்.

பூரம்: பெண்களுக்கு வாழ்க்கை வசதிகள் பெருகும். சுப நிகழ்ச்சிகள்ஏற்பாடு செய்வீர்கள். முக்கியமான விஷயங்கள் நிறைவேறும். பணியாளர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும்.

உத்திரம் 1: புதிய முயற்சிகள் லாபம் தரும். அரசியல் ஈடுபாடு மூலம் நன்மையடைவீர்கள். இளம் வயதினருக்குச் சாதனை வாரம். அலுவலகத்தில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் கண்டிப்பாகச் செயல்பட்டு நேர்மையாக இருப்பீர்கள்.


கன்னி
சந்திரன், சுக்கிரன், புதன் கூடுதல் நற்பலன்களை தருவர். குருவாயூரப்பன் வழிபாடு வளம் தரும்.

உத்திரம் 2,3,4: திறமை மிக்கவர்களுக்குப் புகழ் கூடும். பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொலைதுாரத் தொடர்புகளால் நன்மை பெறுவீர்கள். பணியில் முழுக்கவனம் தேவை.

அஸ்தம்: மன அமைதி குறையும். உடல் நலனில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்ப்புக்கள் இருக்கும். பொழுது போக்குக்காகச் செலவுகள் செய்வீர்கள்.

சித்திரை 1,2: அலுவலக நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. எந்த செயலையும் மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும். இல்லையெனில் பயணத்தையே தவிர்க்கலாம்.


துலாம்
குரு, புதன், சந்திரன் நல்ல பலனைத் தருவர். காமாட்சி வழிபாடு சுபிட்சம் தரும்.

சித்திரை 3,4: சில விஷயங்களில் உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய நிலை உண்டாகலாம். அலுவலகப் பணியாளர்கள் அதிக கவனமாக இருப்பீர்கள். தாயாருக்கு உங்களால் நன்மைகள் உண்டாகும்.

சுவாதி: மாணவர்களுக்கு கல்விக்கு தேவையானவற்றை வாங்குவது பற்றிய கவலை நீங்கும். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினரிடையே கௌரவம் உயரும்.

விசாகம் 1,2,3: பணிச்சுமை அதிகரிக்கும். எல்லோரையும் அனுசரித்து நல்லபெயர் எடுப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பும் புகழும் உயரும். வாகனம் வாங்குவதற்குச் செய்த முயற்சிகள் பலிதமாகும்.


விருச்சிகம்
சூரியன், சனி, புதன் தாராள நற்பலன்களை வழங்குவர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

விசாகம் 4: அலுவலகத்தில் பிரச்னை தலைதுாக்கலாம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பிறருடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொழுதுபோக்கில் கவனம் செலுத்துவீர்கள்.

அனுஷம்: பணியாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவர். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பெரிய மாறுதல்களின்றி நடுநிலைமையான வாரமாக இருக்கும்.

கேட்டை: பேச்சில் கோபம் தெரியாமல் பக்குவமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் திருமணம் நிச்சயமாவதால் மன நிறைவு பெறுவீர்கள். தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். சொல்லிலும், செயலிலும் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 11.6.2021 காலை 6:00 - 13.6.2021 காலை 11:46 மணி


தனுசு

குரு, சுக்கிரனால் நற்பலன் உண்டு. மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

மூலம்: வெளிநாடு போவீர்கள். காதல் விவகாரங்களில் மகிழ்ச்சியடைவீர்கள். சிக்கலான பிரச்னைகளில் சுமுகமான முடிவை காண்பீர்கள். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சின் மூலம் யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கப்பாருங்கள்.

பூராடம்: சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி பெறுவீர்கள். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவீர்கள். மந்த நிலை மாறும்.

உத்திராடம் 1: எதிர்ப்புக் காட்டியவர்கள் காணாமல் போவார். எந்த விஷயமும் தடைதாமதத்துடன்தான் நடக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தி நிம்மதியடைவீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும். வெளியூரில் இருந்து வரும் மெயில் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

சந்திராஷ்டமம்: 13.6.2021 காலை 11:47 - 15.6.2021 இரவு 7:29 மணி


மகரம்
குரு, சுக்கிரன், கேது, சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.

உத்திராடம் 2,3,4: புதிய உத்வேகம் பிறக்கும். வீண் இடையூறுகள் அகலும். மேலதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்படும். புதிய வேலையில் சேர்ந்தவர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும்.

திருவோணம்: குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். நல்ல தகவல் உண்டு.

அவிட்டம் 1,2: தேவையற்ற மன சஞ்சலம் அகலும்.பொறுமையுடன் செயல்படுவது அவசியம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இளைஞர்களுக்கு இத்தனை காலம் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும்.

சந்திராஷ்டமம்: 15.6.2021 இரவு 7:30 மணி - 17.6.2021 நாள்முழுவதும்


கும்பம்

குரு, புதன், சுக்கிரன் அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.

அவிட்டம் 3,4: உங்கள் உண்மை தன்மை வெளிப்படும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட விஷயம் திட்டமிட்டபடியே நடக்கும். பணியில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

சதயம்: எந்தச் செயலிலும் மேன்மை உண்டாகும். பொறுமையுடன் செய்யும் செயல்களில் சாதகமான பலன் கிடைக்கும். உறவினரிடம் இருந்து வந்த உரசல்கள் அகலும்.

பூரட்டாதி,1,2,3: குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிரச்னைகளைத் திறமையாக சமாளித்து சாதகமான முடிவை பெறுவீர்கள்.

மீனம்
புதன், சுக்கிரன், சனி சாதக நிலையில் உள்ளனர். விநயாகர் வழிபாடு துன்பம் தீர்க்கும்.

பூரட்டாதி 4: கலைத்துறையினர் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவர். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும்.

உத்திரட்டாதி: தடைபட்டு வந்த நல்ல விஷயங்களில் இருந்து வந்த தடை நீங்கும் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரேவதி: உங்களுடைய பேச்சாற்றல் மூலம் அனைத்து சிக்கல்களையும் சமாளிப்பீர்கள். பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement