dinamalar telegram
Advertisement

டிவி விவாதம்: பா.ஜ., புறக்கணிப்பு?

Share
சென்னை: 'டிவி' விவாதங்களில், தமிழக பா.ஜ., சார்பில் யாரும் பங்கேற்கப் போவதில்லை என, அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம், சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், நேற்று மாலை நடந்தது. தமிழக பா.ஜ., தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன், அமைப்பு பொதுச்செயலர் கேசவவினாயகம், துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா.எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலர்கள் கரு.நாகராஜன், கே.டி.ராகவன், நடிகை குஷ்பு மற்றும் 'டிவி' விவாதங்களில் பங்கேற்பவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: 'டிவி' சானல்களில் நடக்கும் விவாத நிகழ்ச்சிகளில், பா.ஜ., சார்பில் பங்கேற்பவர்களுக்கு, தங்கள் கருத்தை தெரிவிக்க போதிய நேரம் கொடுப்பதில்லை. அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் போது, எதிர் தரப்பினர் பேச விடாமல், தங்களின் கருத்துக்களை கூறுவது போல், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கின்றனர்.

அதை ஒழுங்குப்படுத்த வேண்டிய நெறியாளர்களும், நடுநிலையாளர்களாக இருப்பதில்லை. விவாதங்களில் பங்கேற்கும் பா.ஜ.,வினர், ஒருதலைபட்சமாகவும், பாரபட்சமாகவும் நடத்தப்படுகின்றனர். எனவே, தற்காலிகமாக, 'டிவி' விவாத நிகழ்ச்சிகளில், பா.ஜ., சார்பில் யாரும் பங்கேற்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (150)

 • J.Dilli -

  அப்பாடா, Demonization போது மோடி 2000 நோட்டில் Micro Chip வைத்துள்ளார், யாரும் இனிமேல் ரூபாய் நோட்டுகளை பதுக்கி முடியாது என்று S.V.சேகர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூறினார், இனி அதுபோல் அறிவிலி தனமான, கேவலமான அரட்டை, அட்டகாசம், அதிகார போதை பேச்சுகள் இல்லை, பிஜேபி மாநில மங்குனிகளுக்கு அதிகார திமிரை தவிர வேற ஒரு மண்ணும் இல்லை.

 • Suryanarayanan kovai -

  நல்ல முடிவு, R S Bharathi ஊடகங்கள்

 • LAX - Trichy,இந்தியா

  ஆடிப் போயிருக்கும் சில டி.வி சானல்கள், பத்திரிகைகள் 🤨 டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி அவர்களின் அப்பீலை ஒட்டி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது அப்பீலில் டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி, இந்தியாவில் உள்ள அனைத்து நியூஸ் சானல்களும், ஊடக நிறுவனங்களும் இந்தியர்களையே சொந்தக்காரர்களாக கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் உண்மை என்ன வெனில், நியூஸ் சானல்கள் மற்றும் செய்தி நாளிதழ்களில் பெரும்பாலானவை சவூதி அரேபியா, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் துபாய் குடிமக்களுக்கே சொந்தமாக இருக்கின்றன. சொந்தம் கொண்ட உரிமையாளர்களின் நிலை இப்படி இருக்க, இந்த ஊடகங்கள் அவற்றின் சொந்தக்காரர்கள் இசைக்கும் பாட்டுக்கு டான்ஸ் ஆடவேண்டிய நிலையில் உள்ளன. அவற்றின் சொந்தக்காரர்களுக்கோ தாங்கள் அடைய வேண்டிய, யாருக்கும் தெரியாத சொந்தக் குறிக்கோள் இருக்கிறது. தேசத்தின் நலனைக் கருதி, சுப்ரீம் கோர்ட் இந்த நிலையை மாற்றத் தகுந்த ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று அவரது அப்பீல் முடிகிறது. சுப்ரீம் கோர்ட் உறுதியான, இறுதியான ஒரு ஆணையை டாக்டர்.சுப்ரமணியம் ஸ்வாமி அவர்களின் அப்பீலுக்கு தந்து விட்டால் - ABP, AAJ, TAK, NDTV மற்றும் அதையொட்டிய சானல்களும்/செய்தித்தாள் ஊடகங்களும் மூடப்படும். இந்த வார்த்தையைக் கேட்ட வினாடியிலிருந்து அந்த ஊடக நிறுவனங்கள் அடிவயிறு கலங்கி ஆடிப் போயுள்ளன. அவை கவலையின் உச்சிக்கே போய்விட்டன. ஆனால் இதில் பரிதாபகரமான ஒரு விஷயம் என்னவெனில், எப்போதுமே பரபரப்பைப் பரப்பி விட்டுக்கொண்டே இருக்கும் இந்த சானல்கள் இந்த செய்தியை ஃப்ளாஷ் நியூஸாகவும் வெளியிட முடியவில்லை. டி.வியில் பளீர் செய்தியாகவும் காண்பிக்க முடியவில்லை செய்தித் தாள்களிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட முடியவில்லை. உண்மையான இந்தியர்களாகிய நாம் இந்த செய்தியை தேசம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்வோமாக...// இன்னும் தகுதியற்ற தமிழ் சேனல்களின் தராதரம் பற்றியெல்லாம் இன்னும் தகவல்கள் திரட்டி தகுதி நீக்கம் செய்யப்பட ஆவன செய்வோம்..

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   ///ஆடிப் போயிருக்கும் சில டி.வி சானல்கள், பத்திரிகைகள். டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி அவர்களின் அப்பீலை ஒட்டி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.//// அப்ப... எதிர்த்து எவனும் பேசக்கூடாது...ங்குறீங்க..? ஆளுங்கட்சியின் அடிவருடியாக... பிரச்சார பீரங்கியாக இருக்கணும்...னு சொல்றீங்களா மிஸ்டர்.... சர்வாதிகாரிகளின் சாம்ராஜ்யங்கள் சாய்ந்து சரிந்த உண்மையை உலக வரலாற்றை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...? ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை, ஊடகங்களை தகர்த்தெறிந்துவிட்டால்... ஜனநாயகம் எனும் கட்டிடம் சரிந்து சாய்ந்துவிடும்.... “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.” என்பது திருவள்ளுவர் வாக்கு...

 • kulandhai Kannan -

  ஏற்கனவே இந்த விவாதங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. முக்கிய எதிரிகளும் புறக்கணித்தால், இந்த நிகழ்ச்சிகளின் நம்பகத்தன்மை முழுதும் குலைந்து, முரசொலி ரேஞ்சுக்கு வீழ்ந்து விடும்.

 • balakrishnan - Mangaf,குவைத்

  பொய்கள் மட்டுமே கூறும் ஊடகங்களை தவிர்ப்பது நல்லதுதான் .

Advertisement