dinamalar telegram
Advertisement

ஊரடங்கு புதிய தளர்வுகள் இன்று அறிவிக்க வாய்ப்பு

Share
சென்னை : தமிழகத்தில், முழு ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அளிப்பது தொடர்பான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மே, 24 முதல், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இம்மாதம், 7ம் தேதியில் இருந்து, வரும், 14ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, மளிகை, காய்கறி, பழக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. நோய் பரவல் அதிகம் உள்ள, 11 மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடைகள், ஹார்டுவேர் கடைகள், இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் கடைகள் போன்றவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அரசு பிறப்பித்த முழு ஊரடங்கு, 14ம் தேதி முடிய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, நேற்று தலைமை செயலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., திரிபாதி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், மருத்துவ குழுவினர், முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க, பரிந்துரை செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், கொரோனா நோய் பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில், மேலும் சில தளர்வுகளையும், டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்தும், அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.

ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல, தற்போதுள்ள, இ- - பதிவு முறை ரத்தாகலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (29)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    நமது இந்தியாவில் கொரோனாவைத் தவிர பல் வேறு வியாதிகளில் நாள் தோறும் லட்சக்கணக்கானவர்கள் இறக்கின்றனர் ,அதற்கு இந்த அரசாங்கங்கள் என்ன செயகின்றன???மத்திய அரசும் மாநில அரசும் மக்களின் உயிர் இழப்பிற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் .பொறுப்பைத் தட்டிக் கழித்தால் உச்ச நீதிமன்றம் ,உயர் நீதிமன்றங்கள் அரசாங்கத்தின் மண்டையில் நன்றாகத் தட்டவேண்டும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை ,

  • g.s,rajan - chennai ,இந்தியா

    சும்மா அஞ்சு வருஷமும் கொஞ்சம் கொஞ்சம் தளர்வுகளோட லாக் டவுன் விடியல் வரும் வரைக்கும் போட்டுக்கிட்டே இருங்க நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருப்பீங்க எஜமான் . ஜி.எஸ்.ராஜன் சென்னை

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பேருந்துகளை பாதியாவது விடுங்க ,மக்கள் மிகவும் விரக்தியில் .மன அழுத்தத்தில் இருப்பதால் கோயில்களைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.அங்கு சமூக இடைவெளியுடன் இறைவனை மக்கள் தரிசிக்க அனுமதி அளிக்க அரசு உடனடியாக முன் வர வேண்டும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை

  • rajamani - chennai,இந்தியா

    வரும் வாரம் முதல் அரசுக்கு ஆளும் கட்சிக்கு விடியல் பொது மக்களுக்கு இருட்டு வாழ்க தமிழ் எல்ல்லாவற்றையம் மேட்டூர் தண்ணீர் போல் திறந்து விட்டு மக்களை தொற்றுக்கு பலி கொடுபோம்

  • Mayavan Mayavan - Chennai,இந்தியா

    நீங்க சும்மா இருங்கப்பா. இவன் இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டன்.

Advertisement