dinamalar telegram
Advertisement

ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது

Share
மும்பை : அடுத்த ஆண்டு ஜன.,1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கி வாடிக்கையாளர்களின், ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம், இறுதியாக, 2014, ஆகஸ்டில் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 2022, ஜன.,1 முதல், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

அதுபோல, வங்கிகள் இடையிலான, ஏ.டி.எம்., நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்; நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (28)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பல ஏடிம் கல் சரியாகவே வேலை செய்ய மாட்டேங்குது ,தேவையே இல்லாமல் சில சமயங்களில் பணத்தை எடுக்க மக்கள் நாய் போல பல இடங்களுக்கு அலைய வேண்டி உள்ளது ஜி.எஸ்.ராஜன் சென்னை ,

  • m.viswanathan - chennai,இந்தியா

    இவனுகளை ஓட ஓட 2024 இல் விரட்ட வேண்டும்

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இவர்கள் அட்டூழியத்தை குறைக்க பழையபடி வங்கிகளுக்கு படையெடுக்க வேண்டியது தான்.அலகு கும்மியடித்தால் தான் ஒழுங்காகவும் வேலை செய்வார்கள் நம்மை பணம்காட்சி மரமாக நினைக்க மாட்டார்கள். பாழாய் போன முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலிருந்த ஒரு திருட்டு குடுமப தில்லு முல்லு மத்திய அமையச்சர் சேவை வரி என்ற வார்த்தையை கண்டுபிடித்த ...( தான்) தார் கண்டு பிடுத்து அதை இந்த அரசும் விடாப்பிடியாக பிடித்து நம்மை வாட்டி வதைக்கிறார்கள்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஏத்துங்க , ஏத்துங்க ஏத்திக்கிட்டே ,இருங்க

  • K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா

    கட்டணமில்லா சேவை மாதத்திற்கு எட்டு முறை கிடைக்கும் பொது என்ன கவலை.

Advertisement