dinamalar telegram
Advertisement

தி.மு.க.,வின் ஒன்றிய அரசு விவகாரம்: உள்துறை விசாரிக்க பா.ஜ., விருப்பம்

Share
'மத்திய அரசை ஒன்றிய அரசு என தி.மு.க., நிதி அமைச்சர் தியாகராஜன் பேசி வரும் விவகாரத்தில், ஏதேனும் சதி இருக்கிறதா என்பது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.

சமீப காலமாக தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், இந்திய அரசை 'ஒன்றிய அரசு' எனக் குறிப்பிட்டு வருவதன் பின்னால், திராவிட நாடு என்ற கோரிக்கை ஒளிந்து கிடக்கிறது என்ற குற்றச்சாட்டை, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுப்பி உள்ளார்.

தி.மு.க., நிதி அமைச்சர் தியாகராஜனும், சமீபத்தில் அளித்த பேட்டியில், மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிட்டு, 'சட்டத்தில் அப்படி தான் இருக்கிறது' என விளக்கம் அளித்தார். அவரை தொடர்ந்து தி.மு.க.,வினர், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, 'திராவிட மக்கள்' என 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிடப்பட்டது.
மன்னார்குடி தி.மு.க., - எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா தன் முகநுால் பக்கத்தில், 'ஒன்றிய உயிரினங்கள்' எனக்கூறி, 'டைனோசர்' விலங்கு படம் பதிவிட்டுள்ளார்.மேலும், தி.மு.க., - ஐ.டி., அணியினர், 'ஒன்றிய உயிரினங்கள்' என்ற தலைப்பில், அனைத்து வகை மிருகங்களின் படங்களுடன், 'வன விலங்குகளின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு; ஒன்றியத்தின் பாதுகாப்பு' என, பதிவிட்டுள்ளனர்.

சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையை சேர்ந்த நாகராஜன், தன் முகநுால் பக்கத்தில், மத்திய அரசு அளித்த தடுப்பூசி சான்றிதழில், நான்கு சிங்கம், அசோக சக்கரம் உள்ளடக்கிய, மத்தியஅரசின் முத்திரையை எடுத்து விட்டு, அதில், தமிழக அரசின் கோபுர முத்திரையை மாற்றிவைத்துள்ளார். இது தொடர்பான புகார் மனுவை, பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில், பா.ஜ., பிரமுகர் நிலேஷ்ராம் அளித்துள்ளார்.

அப்புகார் மனுவில், மத்திய அரசின் முத்திரை மாற்றப்பட்டுள்ளது என்றும், பிரதமர் மோடி மீது அவதுாறு பரப்பப்பட்டுள்ளது என்றும், கூறப்பட்டுள்ளது. தமிழக போலீசார், உடனே வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.,வினர் மனு அனுப்பி உள்ளனர்.
இது குறித்து, தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியிருப்பதாவது: நிதி அமைச்சர் தியாகராஜன் போன்றோரின் பிரிவினை பேச்சால், தற்போது, மத்திய அரசின் சின்னத்தை மாற்றும் அளவிற்கு சென்றுள்ளனர், தி.மு.க,வினர்.'திராவிட மக்கள், ஒன்றிய உயிரினங்கள்' என, பல திட்டங்கள், திடீரென உருவாக்கப்படுவதற்கு பின்னால், தி.மு.க.,வின் 1962ம் ஆண்டு பிரிவினை கோரிக்கை போன்ற ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என்ற சந்தேககம் எழுந்துள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- நமது நிருபர் -Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (128)

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  ஒன்றிய அரசு என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. மத்திய என்றால் அது வட மொழி வார்த்தை. நமது மொழியில் சொல்லலாம் என்பதால் ஒன்றிய என்ற வார்த்தையை பயன்படுத்தி கொண்டிருக்கலாம். கருணாநிதி கூட நடுவண் அரசு என்று சொல்வார் சில நேரங்களில். வூராட்சி ஒன்றியம் என்ற வார்த்தை பயன்பாட்டில் இருந்து கொண்டு தானே இருக்கிறது.

 • sankar - ghala,ஓமன்

  தீ மு க IT WING தலைவர் இந்த தியாகராஜ தானே, இப்படி எல்லாம் அவர் செய்வார், தமிழன் என்று போலி உணர்வு காட்டி இந்திய தேசத்தை அவமதிக்கும் செயல் இது, இதை போன்று விஷ பரீட்சை அண்ணா மேல்கொண்டார் அதற்கு இந்திரா காந்தி அம்மையார் குடுத் TREATMENT என்ன என்று வரலாறு அறிந்ததே, இப்போ இருப்பது மோடி மற்றும் ஷா இவர்கள் காஷ்மீரை வழிக்கு கொண்டுவந்து விட்டார்கள், தி மு க பிஸ்கோத்து ,கண்ணை காட்டின்னா போதும் .

 • Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா

  இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை திசைதிருப்பும் நாடகம்

 • raja ராஜா -

  இந்த தியாகராஜன் எதையாவது உளறிகொண்டு உள்ளான்.இந்த ஆளின் பின்புலத்தை மத்திய அரசு முழமையாக விசாரிக்க வேண்டும். நாட்டை துண்டாடும் விதமாக பேசும் இவரை தேசத்துரோக வழக்கில் போட வேண்டும்.அப்போது இந்த மாதிரி பேச மாட்டார்கள்.

 • oce -

  இந்த வெளிநாடு வாழ் உரிமம் பெற்ற தியாகராஜன் தேர்தலில் நிற்க தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது. இதுவே முன்னுதாரணமானால் இந்திய பிரஜை எவனும் தேர்தலில் நிற்கும் வாய்ப்பு பறிபோகும்.

Advertisement