dinamalar telegram
Advertisement

போலீசாரிடம் தகராறு செய்த பெண் வக்கீல் முன்ஜாமினை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

Share
சென்னை--ஊரடங்கு விதிமீறி, வெளியில் வந்த சட்ட மாணவி மற்றும் அவருக்கு ஆதரவாக போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் ஆகிய இருவரின் முன் ஜாமின் மனுக்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சென்னை சேத்துப்பட்டு சிக்னலில், போக்குவரத்து சப் - இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தலைமை காவலர் ரஜித்குமார் உட்பட, பல்வேறு போலீசார், வாகன சோனையில் ஈடுபட்டிருந்தனர். கொலை மிரட்டல்அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். ஊரடங்கு விதிகளை மீறி, காரை ஓட்டி வந்த, சட்ட மாணவி பிரீத்தி ராஜனுக்கு அபராதம் விதித்துள்ளனர்.இதில் கோபமடைந்த அந்த பெண், நடந்த விஷயத்தை வழக்கறிஞரான, தன் தாயிடம் கூறியுள்ளார். அங்கு வந்த அவரது தாய் தனுஜா ராஜன், முக கவசம் இல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அபராத ரசீதை வீசி எறிந்து, இருவரும் கிளம்பிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, தலைமைக் காவலர் ரஜித்குமார் அளித்த புகாரின்படி, கொலை மிரட்டல் விடுவது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது உட்பட, ஆறு பிரிவுகளின் கீழ், இருவர் மீதும் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் முன் ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.விசாரணைஇந்த மனு, நீதிபதி ஆர்.செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில், பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜெய்சங்கர் வாதாடிய போது, 'போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளதால், முன் ஜாமின் வழங்கக் கூடாது' என, வாதாடினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மக்களை காக்கும் பணியிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ள போலீசாரிடம், இதுபோல நடந்து கொள்ளக்கூடாது. இதுபோன்ற ஒரு சம்பவத்தில், முன் ஜாமின் வழங்கினால், தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். வழக்கறிஞரின் செயல்பாடு, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, முன் ஜாமின் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    என்ன போலீஸ்கார் இன்னமும் அவங்களை லாக் அப்பள போடலியா ??

  • Sundar Narayanan - chennai,இந்தியா

    Apporam ane innum arrest pannama irukkinga officer...

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    வக்கீல்கள் என்றால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சரியான சவுக்கடி.

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    சபாஷ். சரியான தீர்ப்பு

  • vns - Delhi,யூ.எஸ்.ஏ

    Arrest these two anti social elements immediately.

Advertisement