dinamalar telegram
Advertisement

போதையில் அலப்பறை ரவுடிகள் கைது

Share
செம்பியம்-வியாசர்பாடியில், மது போதையில் பொதுமக்களை தாக்கி, தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த ரவுடிகளை, போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி அடுத்த பெரியார் நகர், மதியழகன் நகரைச் சேர்ந்தவர் மகேஷ், 29; பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய ரவுடி. இவர், நேற்று முன்தினம் மாலை மது போதையில், பொதுமக்களை மிரட்டும் வகையில், பொதுவெளியில் கத்தியுடன் வலம் வந்து அட்டகாசம் செய்தார். அப்போது வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்த கருப்பசாமி, 26, என்பவரை வெட்டினார். இதில், கருப்பசாமிக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. அத்துடன் நில்லாமல், அருகில் இருந்த கடைக்குள் சென்று, அங்கிருந்த கண்ணாடி தடுப்புகளை உடைத்து, அங்கிருந்தவர்களை மிரட்டினார். இதனால் மிரட்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட ரவுடி மகேஷை கைது செய்தனர். அதே போல், வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன், 26; கருணாகரன், 20; சார்லஸ், 20; மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நால்வர், பெரம்பூர் ரமணா நகரிலுள்ள மளிகை கடை உரிமையாளரை, கத்தியைக் காட்டி மிரட்டி, மாமூல் கேட்டனர்.அவர் தர மறுத்ததால், கடையை சூறையாடினர். மேற்கண்ட நால்வரையும், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? (திமுக., அதிமுக)

Advertisement