dinamalar telegram
Advertisement

ஜூன் 11: பெட்ரோல் விலை ரூ.97ஐ கடந்தது

Share
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 11), பெட்ரோல் லிட்டருக்கு 97.19 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.42 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.19 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 91.42 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • J.Isaac - bangalore,இந்தியா

    மக்கள் நலம் பெற அமைதியாக வாழ ஆட்சி மாற்றம் வேண்டும்.

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    நாம் சாப்பிடும் பாக்கெட் எண்ணையில் பெட்ரோலிய கழிவுப் பொருட்களை சுத்திகரிப்பு செஞ்சு பெரிய அளவில் கலக்கக்குறது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும்... இவனுவ அடிக்கும் வரிக்கொள்ளைக்கு ஈடாக இப்போ அந்த பாக்கெட் எண்ணெய் விலைகளும் தாறுமாறாக ஏறி கெடக்கு... லிட்டர் என்பது ரூபாய்க்கு இருந்தது இப்போ குறைந்தது நூற்றைம்பது ரூபாய் விக்குது...

  • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

    யாருக்கும் வெட்கமில்லை. இவ்வளவு மக்கள் நலன் அடுக்காது. இரந்து நிற்போரிடம் பிடுங்கி நாளை உதவுவேன் என்ற நிலையில் அரசு செயல்படுகிறது.

  • ஆப்பு - ,

    பொருளாதாரமும் 350 லட்சம் கோடியைக் கடந்திருக்கணுமே... ஜீ.எஸ்.டி வசூலே விண்ணை முட்டுது. சீக்கிரம் புள்ளி விவரத்தை அடிச்சு உட்டு மெடல் குத்திக்கோங்க.

  • ravi chandran -

    நாடு நலம் பெற, அரிசி வலை ஒரு கிலோ 100/- ஆக, சமையல் எண்ணெய் ஒரு கிலோ 500/- ஆக,நாட்டு மக்கள் நாசமாய் போக, ஆதரிப்பீர் பெட்ரோலிய துறையை.

Advertisement