dinamalar telegram
Advertisement

காங்., கட்சிக்கு தேவை ஆப்பரேஷன்: வீரப்ப மொய்லி

Share
புதுடில்லி: காங்., கட்சியில் மிகப் பெரிய, 'ஆப்பரேஷன்' செய்ய வேண்டிய அவசியமும், நேரமும் வந்துவிட்டது என மூத்த காங்., தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

காங்., அதிருப்தி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி கூறியுள்ளதாவது: கட்சியில் பதவி, பொறுப்புகள் அளிக்கும்போது, கட்சியின் கொள்கைகளில் உள்ள ஈடுபாடு குறித்து, தலைமை ஆராய வேண்டும். குடும்பத்துக்கு உள்ள மரியாதை போன்ற காரணங்களுக்காக இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது.
ஆனால் அவர்கள் கொள்கை பிடிப்பு இல்லாமல், சுயநலத்துக்காக கட்சி மாறுகின்றனர். ஜிதின் பிரசாதா வெளியேறியது, கட்சிக்கு நல்ல படிப்பினை. கட்சியில் மிகப் பெரிய, 'ஆப்பரேஷன்' எனப்படும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமும், நேரமும் வந்துவிட்டது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என, ஒத்தி வைக்க முடியாது.

அடுத்த ஆண்டில் ஏழு மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதில் சிறப்பாக செயல்படாவிட்டால், 2024 லோக்சபா தேர்தலை நம்மால் எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து, கட்சித் தலைமை செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (34)

  • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

    செய்தால் பிழைக்க வாய்ப்பு உள்ளதா? இல்லை கைவிட்ட கேசா?

  • sankaseshan - mumbai,இந்தியா

    சித்த ராமய்யா , கார்கே மோயிலி இவனுங்களை சேர்க்க ஆப்பரேஷன் பண்ணனும் .

  • Suppan - Mumbai,இந்தியா

    போகிற போக்கைப் பார்த்தால் கண்டி குடும்பம், பசி போன்ற ஊழல் பெருச்சாளிகளைத் தவிர மற்ற எல்லா தலைவர்களும் காங்கிரசுக்கு திதி கொடுத்துவிடுவார்கள்.

  • SENTHIL - tirumalai,இந்தியா

    ஆப்பரேசன் சக்ஸஸ் ஆனால் பேசேன்ட் டெட்.

  • balaji - chennai,இந்தியா

    ஆபரேஷன் பண்ண டாக்டர் (பப்புஸ்) கிட்ட போன கட்டிய வெட்டி எடுக்காம. கிட்னியை லவுட்டி கிட்டு போன என்ன பண்றது

Advertisement