dinamalar telegram
Advertisement

அமெரிக்காவிலிருந்து விரைவில் வருகிறது கொரோனா தடுப்பூசி

Share
வாஷிங்டன் : 'பயன்படுத்தாமல் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்' என அமெரிக்க வெளியுறவு துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. மருந்து பொருட்களை அனுப்பி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவியுள்ளன.இந்நிலையில் 'பயன்படுத்தாமல் கையிருப்பில் உள்ள எட்டு கோடி டோஸ் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பி உதவ வேண்டும்' என அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அந்நாட்டு எம்.பி.க்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

'முதல் கட்டமாக 2.5 கோடி தடுப்பூசிகள் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்' என பைடன் அறிவித்தார். அதில் 1.9 கோடி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை உயரதிகாரிகள் நேற்று கூறியுள்ளதாவது: மொத்தம் எட்டு கோடி டோஸ் தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 1.9 கோடி தடுப்பூசிகள் 'கோவாக்ஸ்' எனப்படும் ஐ.நா. அங்கீகரித்துள்ள தடுப்பூசி ஒத்துழைப்பு அமைப்பு வாயிலாக வழங்கப்படும்.

கோவாக்ஸ் மூலம் வழங்கப்படும் தடுப்பூசிகளில் 80 லட்சம்டோஸ் இந்தியாவுக்கு கிடைக்கும். மிக விரைவில் இந்த தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • கர்ணன், கர்மபுரம், கேடு கெட்ட நாடு இந்தியா -

    நம்ம மான் கீ பாத் இதுக்கு எவ்வாறு நன்றி கடன் செலுத்த போகிறார்???

  • Murthy - Bangalore,இந்தியா

    வரியா நாடுகளுக்கு அனுப்புவதாக பிடன் கூறியுள்ளார்.

  • ஆரூர் ரங் -

    கத்திரிக்காய் முற்றினால்😉😉 கடைத்தெருவுக்கு வந்தே ஆகணும். மூன்றாவது DOSE போட்டுக் கொள்வது😇 அவசியமே என்று PFIZER சொல்கிற🤫 தாம். அதில் நல்ல லாபம் பார்க்கலாம்

  • ஆப்பு - ,

    அதை வாங்கி எல்லோருக்கும் போட்டு, 130 கோடி பேரையும் காப்பாத்திட்டோம்னு மெடல் குத்திக்குவாங்க.

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    இந்தியா இன்னும் ஆப்பிரிக்காவோடு CHARITY பட்டியலில் இருக்கிறதே விலை கொடுத்து தடுப்பூசிகளை வாங்குங்கள்,,,,,இந்திய அரசே....'டெண்டர்' முறையில் தடுப்பூசிகள் வாங்குவதை ஏன் தடை செய்கிறீர்கள்? அமெரிக்க விஞ்ஞான உபகரணங்கள் மற்றும் தேவையான உதவியை பெற்று இந்தியாவில் மருந்துகளை தயாரியுங்கள்.......மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை கொடுக்க வாக்கு கொடுத்துவிட்டோம் என்று நினைத்து வெளிநாட்டின் இலவசங்களை பெறவேண்டாம்.....

    • Ramakrishnan Sitaraman - Chennai,இந்தியா

      ஏதாவது பொசிட்டிவ் ஆ பேசுங்கப்பா.. எப்பப்பாரு குறை சொல்லிக்கொண்டே இருக்கீங்க..குறை சொல்றது ரொம்ப சுலபம்.ஆக்க பூர்வமா பேசுங்க. மனநிலையும் உடல் நிலையும் அப்போதான் சரியா இருக்கும்..

Advertisement