dinamalar telegram
Advertisement

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு

Share
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25ல் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு 2016ல் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாக். முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது.ஐந்தாண்டு ஆட்சி முடிவடைந்த நிலையில் அங்கு மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக தேர்தலை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் ''அடுத்த மாதம் 25ம் தேதி 45 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடத்தப் படும்'' என தலைமை தேர்தல் கமிஷனர் அப்துல் ரஷீத் சுலேரியா அறிவித்தார்.இம்மாதம் 21 வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை காட்டிலும் தற்போது நான்கு தொகுதிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement