dinamalar telegram
Advertisement

உயர்கல்வி சேர்க்கை: 2வது இடத்தில் தமிழகம்

Share
புதுடில்லி :உயர்கல்வி பயில்வதற்கான மாணவியர் சேர்க்கையில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம், 2019 - 20ம் ஆண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான
ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2019 - 20ம் கல்வி ஆண்டில், தேசிய அளவிலான கல்வி மையங்களில், உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை 24.7 சதவீதம் என்ற அளவிற்கு குறைவாக உள்ளது.

இது, நிகர் நிலை பல்கலையில் 33.4 சதவீதம்; தனியார் பல்கலையில் 34.7 சதவீதம்; அரசு பல்கலையில் 61.2 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை, உயர்கல்வி மாணவ - மாணவியர் சேர்க்கையில், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மாணவியர் சேர்க்கையில் மட்டும் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேநேரத்தில், மாணவ - மாணவியர் ஒட்டுமொத்த சேர்க்கையில் மஹாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது. தேசிய அளவில், செயல்முறை சாரா கல்வியுடன் ஒப்பிடும்போது, தொழிற்கல்வியில் மாணவியரின் சேர்க்கையும் குறைந்து உள்ளது. எம்.பில்., முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்பு தவிர அனைத்து நிலைகளிலும், மாணவர்களின் பங்கு அதிகமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • NoBs - chennai,இந்தியா

    என்ன உயர்கல்வியோ படிப்போ....தனியார் பொறியியல் படித்ததுகள் வாகன ஓட்டுநர்களாகவும் ஹோட்டல்களில் உணவு கொடுப்பவர்களாகவும் வேலை செயகிறார்கள். செய்யும் தொழிலே தெய்வம் எந்த வேலையும் மட்டுமில்லை உண்மை அனால் இதற்க்கு பொறியியல் படித்திருக்க வேண்டாமே...எழுத படிக்க தெரிந்தாலே போதுமே. பேசுவதற்கும் ஒரு மொழிதான் தெரியும் அதனால் தமிழ்நாட்டிலேயே குட்டிபோட்ட பூனை போல வளம் வந்து கொண்டு இந்த அரசியசலை விவாதித்துக்கொண்டு வாழ்க்கை வீணாகவேண்டும் என்றொரு ஊழ்வினை. இதிலே வசதி உள்ள ஆட்கள், சில பல பேர் மருத்துவமும் படித்து விட்டு எம்புருஷனும் கச்சேரிக்கு போறேன்னுட்டு வெள்ளை கோட்டை போட்டுக்கொண்டு ஆட்களை முடிக்க அலைகிறார்கள் எதிர்காலம் அவர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும்தான் ஒரு கேள்விக்குறி. எல்லோருக்கும் என்ன, அவர் தந்தையர்கள் முதல் மந்திரி எம் எல் ஏ பதவியா விட்டு சென்றிருற்கிறார்கள்?

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    எங்க ஜிஜி கூடதான் யாருமே படித்திறாத முதுகலை உயர்கல்வி படித்தார்... இதையெல்லாம் பெருமையா பேசுவாங்களா..🤔 அப்பாலிக்கா அதவச்சி என்ன கல்லா கட்டுனோம்கிறதுதான் முக்கியம் பாஸ்....

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    உயர்கல்விக்கு இந்தி கட்டாயம்ன்னு ஆக்கிடலாமா ? மோடி தர்பார் யோசனை..

Advertisement