dinamalar telegram
Advertisement

அதிபரை அறைந்தவருக்கு 4 மாதம் சிறை

Share
பாரிஸ்:பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், 43, தென்கிழக்கு பிரான்சில் உள்ள டிரோம் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது அதிபருக்கு கைகொடுத்த நபர், மேக்ரோனின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

அவரை அதிபரின் பாதுகாவலர்கள் பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் டேமியன் டரெல், 28, என, தெரிந்தது. அவருக்கு, பிரான்சின் வேலென்ஸ் நீதிமன்றம், நான்கு மாத சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும், அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement