dinamalar telegram
Advertisement

குவைத் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

Share
குவைத் சிட்டி:மேற்காசிய நாடான குவைத் சென்றுள்ள, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் ஷேக் சபா காலித் அல்ஹமாத் அல்ஷபாவை சந்தித்து பேசினார்.

குவைத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அகமது நாசர் அல்முகமது அல்சபா, கடந்த மார்ச் மாதம் டில்லி வந்தார்.அப்போது, எரிசக்தி, வர்த்தகம், முதலீடுகள், மனிதவளம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், இருநாட்டு உறவை வலுப்படுத்த, அமைச்சர்கள் அளவிலான கமிஷன் அமைக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, குவைத் வெளியுறவுத்துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று, நம் அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அந்நாட்டுக்கு வந்தார். குவைத் பிரதமர் ஷேக் சபா காலித் அல்ஹமாத் அல்ஷபாவை சந்தித்தார்.இருநாடுகளுக்கு இடையிலான துாதரக தொடர்புகள் துவங்கி, 60 ஆண்டுகள் நிறைவறைடைந்துள்ளதை பெருமையாக குறிப்பிட்டார்.

இருநாட்டு உறவை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்லும் அந்நாட்டு பிரதமரின் முயற்சிகளுக்கும், கொரோனாவுக்கு எதிரான போரில், மத்திய அரசுக்கு உதவி செய்ததற்கும் நன்றி தெரிவித்தார். குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்அகமது அல்ஜபிர் அல்சபாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதத்தை, மன்னரை சந்தித்து ஒப்படைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement