dinamalar telegram
Advertisement

செய்தி சில வரிகளில்...

Share
உணவு வழங்கல்

திருப்புல்லாணி: உத்தரவை ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு திருப்புல்லாணி போலீஸ் ஸ்டேஷன் போலீசார் சார்பில் எஸ்.ஐ., சந்தானபோஸ் உணவுப்பொருட்கள் வழங்கினார். உத்தரவைஊராட்சி தலைவர் கணேஷ் உட்பட வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

டிரான்ஸ்பார்மர் சேதம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் வரவணி ஊராட்சி கூட்டாம்புளியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் அப்பகுதி கிராமங்களுக்கு மின்சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து பில்லர் கம்பிகள் தெரிந்த வண்ணம் ஆபத்தான நிலையில் ரோட்டோரத்தில் உள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் கடக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை சீரமைக்க வலியுறுத்தல்

கமுதி: கமுதி பேரூராட்சிக்குட்பட்ட முஸ்லிம் பஜார் முதல் செட்டியார் பஜார் வரை சாலையை பராமரிக்காததால் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் தொற்றுநோய் அச்சம் உள்ளது. மேலும் சுந்தராபுரம் பகுதியில்கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருமக்கள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் கமுதி பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என த.மு.மு.க.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement