dinamalar telegram
Advertisement

மாஜி அமைச்சர் திட்டம்: பரவும் பரபரப்பு ஆடியோ

Share
Tamil News
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், மீண்டும் எம்.எல்.ஏ., ஆக முயற்சி எடுத்து வருவதாக, சமூக வலைதளத்தில் 'ஆடியோ' பரவி வருகிறது.விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வானவர் அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் சண்முகம். நடந்து முடிந்த தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

பின்னடைவு



வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு கிடைப்பதற்கு காரணமாக இருந்தும், தோல்வி அடைந்தது, அவரது அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன், விழுப்புரத்தில் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், சண்முகம் பக்கத்தில் மயிலம் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவகுமார் அமர்ந்திருந்தார்.
இதை மையமாக வைத்து, தற்போது சமூக வலைதளங்களில், ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் தொகுதியில், மூன்றாவது முறையாக போட்டியிட்ட சண்முகம் தோல்வியை சந்தித்தது, அ.தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது. முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நெருக்கமாக இருந்தவர்; சசிகலாவை தீவிரமாக எதிர்த்து வந்தவர். தற்போது எப்படியாவது மீண்டும் எம்.எல்.ஏ., ஆகும் கனவில் இருக்கிறார்.மயிலம் தொகுதியில், சண்முகத்தின் கவனிப்பால் எம்.எல்.ஏ.,வானவர் சிவகுமார். இது, ஊரறிந்த விஷயம். இவர், சில நாட்களாக சண்முகத்துடன் நெருக்கமாக வலம் வருகிறார்.இதனால், அவரை ராஜினாமா செய்ய வைத்து, மயிலம் தொகுதியில் சண்முகம் போட்டியிட எண்ணியுள்ளதாகவும், இதற்காக பேரம் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெரிய அளவில் கவனிப்பு



எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் சிவகுமாருக்கு பெரிய அளவில் கவனிப்பு மற்றும் அ.தி.மு.க.,வில் பதவியும் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆடியோ விவகாரம் குறித்து, முன்னாள் அமைச்சர் சண்முகம் மற்றும் பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவகுமார் ஆகிய இருவரும் எந்தவித மறுப்பும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.- நமது நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

    நிச்சயம் இது ஆவத வேலை இப்படி ராஜினாமா செய்யும் நபரை ஆயுள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் ஏன் நிற்கவேண்டும் , உடல் ஆரோக்கிய தகுதி இல்லதவர்கள் பதவி கிடைப்பதை தடுக்கப்படவேடனும்

    • skandh - Chennai,இந்தியா

      C Ve ஷண்முகம்னா குலை நடுங்குதா?

  • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

    நிச்சயம் இது ஆவத வேலை இப்படி ராஜினாமா செய்யும் நபரை ஆயுள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் ஏன் நிற்கவேண்டும் ,தகுதி இல்லதவர்கள் பதவி கிடைப்பதை தடுக்கப்படவேடனும்

  • M Ramachandran - Chennai,இந்தியா

    அடிப்பொடிகள் இனிமேல் பொய் புனை சுருட்டுடன் கதைகள் அவிழ்த்து விட ஆரம்பித்து விட்டார்கள்.எதிர் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டார்கள்.

  • TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ

    பா.ம.க ராமதாஸ் ஒரு திராவிடன் (தெலுங்கு) . அந்த ஆள் இருபக்கமும் வசூல் செய்து வாழும் கொள்கை இல்லாத மனிதர். thamilarag காடுவெட்டி குருவை வைத்து தன்னை வளர்த்துக்கொண்டார். வன்னியர்களது சொத்துக்களையும் கொள்ளை முடித்துக்கொண்டார்.

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    அப்படி நின்றாலும் மீண்டும் தோற்கடிக்கப்படலாம். இது விளங்காமல் வோட்டு போடமாட்டார்கள். காசு பெறாமல், சிந்தித்து வோட்டு போடுபவர்களும் இருக்கின்றனர்.

Advertisement