dinamalar telegram
Advertisement

ஜி - 7 மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Share
புதுடில்லி:நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கும் 'ஜி - 7' மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்கிறார்.பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடு களைச் சேர்ந்த அமைப்பு, 'ஜி - 7' என, அழைக்கப்படுகிறது.நடப்பு ஆண்டுக்கான ஜி - 7 மாநாட்டை, 11 - 13 வரை, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைமை ஏற்று நடத்துகிறது.

இதில் விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாவது அலை காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, மாநாட்டில் பங்கேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம், இறுதி அமர்வுகளில் அவர் பங்கேற்க உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உறுதி செய்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Mano - Madurai,இந்தியா

    Air Force One எடுத்துண்டு போவாரா?

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    "G-7" மாநாட்டில் பிரதமர் பங்குபெறமாட்டார் என செய்தி முதலில் வந்தது. அதற்கு நான்: "இது ஒரு நல்ல வாய்ப்பு பிரதமர் அவர்களே முக்கியமான நாடுகள் பங்கேற்கின்றன....அடுத்த மாதம் தானே,,,,இரண்டே நாட்கள் தான் மாநாடு...போய் வாருங்கள்....தலைமைப்பொறுப்பில் உள்ள பிரிட்டன் இந்தியா G7 உறுப்பினராக இல்லாவிட்டாலும் அழைப்பு கொடுத்திருக்கிறதே.....இந்திய மக்களுக்காக இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.....நிச்சயம், நல்லதைதான் அந்நாடுகள் நமக்கு செய்யும்...."(12-மே 2021) என கருத்துபதிவு செய்தேன்....பிரதமர் பங்கு பெறுவது கேட்டு மகிழ்ச்சியே

Advertisement