dinamalar telegram
Advertisement

ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்றுவது ஏற்கக் கூடியதல்ல

Share
Tamil News
சென்னை:'ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையை, அங்கிருந்து, கிங்ஸ் மருத்துவ வளாகத்திற்கு மாற்றுவது ஏற்கக் கூடியதல்ல' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், தரமான உயரிய சிகிச்சையை, இலவசமாக பெற, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையை, ஜெயலலிதா உருவாக்கினார். அத்துடன் மருத்துவ கல்லுாரியையும் ஏற்படுத்தினார்.

ஜெயலலிதா, 2011ல் முதல்வராக பொறுப்பேற்றதும், ஓமந்துாரார் கட்டடம், சட்டசபை மற்றும் அனைத்து துறை அலுவலகங்கள் செயல்பட போதுமானதாக இல்லை என்பதால், அந்த கட்டடத்தில் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லுாரியை உருவாக்கினார். இது, மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு.இந்த சூழ்நிலையில், 'கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக வளாகத்தில், 250 கோடி ரூபாயில், பல்நோக்கு மருத்துவ மனை அமைக்கப்படும்' என, முதல்வர் அறிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்த கட்டடம் மீண்டும் சட்டசபையாகவோ அல்லது சட்ட மேல்சபையாகவோ மாற்றி அமைக்கப்படும் என, செய்திகள் வருகின்றன.இது, மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. புதிதாக, கிண்டி கிங்ஸ் மருத்துவ வளாகத்தில், புதிய பல்நோக்கு மருத்துவமனை அமைவதை வரவேற்கிறோம். அதே நேரம், ஓமந்துாரார் மருத்துவமனை, அங்கிருந்து மாற்றப்படுவது ஏற்கக்கூடியதல்ல; அதை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமருக்கு கடிதம்!



'நீட்' தேர்வு உட்பட, அனைத்து பொது நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்யும்படி, பிரதமருக்கு பன்னீர்செல்வம்., கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தேசிய அளவில் கல்வி தரத்தில், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வியின் மாணவர் சேர்க்கைக்கு, பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தேவையில்லை.

எனவே, 'நீட்' தேர்வு உட்பட, அனைத்து பொது நுழைவு தேர்வுகளையும், மத்திய அரசு ரத்து செய்யவேண்டும்.தமிழகத்தில், மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், இந்த ஆண்டு அனைத்து உயர் கல்வியிலும் மாணவர்களை சேர்க்க, அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அறிவிப்பு தெரியாமல் அறிக்கை



நுழைவு தேர்வு ரத்து அறிவிப்பு வெளியான பின், அதை ரத்து செய்யக்கோரி, ஓ.பி.எஸ்., அறிக்கை வெளியிட்டது, கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்தப்படும் என, இம்மாதம் 8ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து, நேற்று முன்தினம், தேர்வு நடத்தும் திட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றது.
ஆனால், நேற்று காலை, 'நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விண்ணப்பங்களுக்கு ஏற்ப, கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும்' என, முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து, ஓ.பி.எஸ்., அறிக்கை வெளியானது.நுழைவுத் தேர்வு ரத்து செய்தது தெரியாமல், ஓ.பி.எஸ்., அறிக்கை வெளியானது, கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நேற்று முன்தினம் ஓ.பி.எஸ்., வழங்கிய அறிக்கையை, காலதாமதமாக நேற்று வெளியிட்டுவிட்டனர் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (32 + 45)

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    மாற்றியது மீண்டும் மாற வேண்டும்

  • kamal basha - sudugadu,இந்தியா

    வெரி குட் டெஸிஸின்

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    வெட்கமா இல்ல, என்னது எதுவாக மாறியது. அது அதுவாகவே மாறும். இரவும் பகலும் கலைஞர் கண் விழித்து கட்டினார். சும்மா போயிடுமா?

    • மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா

      யார் வீட்டில் கண் விழித்து மானாட மயிலாட பார்த்து ரசித்தார்?

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    என்ன குடும்ப அரசியல் தலைவரே. மகனுக்கு பதவி கிடச்சுருமா ? அடேய் புரியுதா?

  • ravi - chennai,இந்தியா

    இவரை நம்பி நன்கொடையாக அள்ளிஅள்ளி கொடுக்கிறார்களே-இவர் என்னாடானா வேறமாதிரி யோசிக்கிறாரே? தமிழகம் என்ன அவர்கள் வீடா? என்னவேண்டுமானால் செய்வதற்கு?

Home ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்றுவதை கைவிட வேண்டும்: முதல்வருக்கு பன்னீர்செல்வம் கோரிக்கை (45)

  • blocked user - blocked,மயோட்

    திராவிட மதத்தினரின் சித்து விளையாட்டுக்களில் சிக்கித்தவித்தது இது போன்ற கட்டிடங்கள்... இதை வைத்து ஆட்டையைப்போட வேறு செய்தார்கள்...

  • Arachi - Chennai,இந்தியா

    பன்னீர் செல்வம் சார் சொல்லுவது தற்போதைக்கு சரியாகப்பட்டாலும் தாங்கள் தங்களது புரட்சித்தலைவி மகாபாவமான காரியங்களை செய்தாரே அப்போது உங்க மனசாட்சி உறுத்தலியா சார். அந்த அம்மாவிடம் எடுத்துச் சொல்ல யாருக்காவது தைரியம் இருந்ததா. இப்போது எத்தனை திட்டங்களை கலைஞர் செய்தார் என்பதற்காக நாசமாக்கினார். எல்லாம் மக்களின் வரிப்பணம் என்பதுகூடாவா அந்த தங்கத்தலைவிக்கு தெரியாமல் போயிற்று. தலைவிக்கு தலை முழுதும் ஆணவம் இருந்ததைத் தவிர வேற என்ன சார் இருந்தது. இப்போம் இட நெருக்கடியால் எங்க அசம்ப்ளி நடத்தலாம்னு நீங்க ஓடிட்டு இருந்தது மாதிரிதான் இப்போம் ஓடிட்டு இருக்காங்க. நீங்க எல்லோரும் தங்கள் கீழ்படிதலுள்ள என்றுதானே இருந்தீங்க. இன்னும் சொல்லப்போனால் அடிமை வாழ்க்கை தானே சார். மட்டுமல்ல மதுரவாயல் டிரை போர்ட் எவ்வளவு நல்ல திட்டம். அடப்பாவிங்களா எப்படி பாழாக்கிட்டீங்க நீங்க வானகரத்தில் செயற்குழு நத்தும்போதல்லாம் அந்த தூண்கள் கண்ணுக்கு படாதா அது உங்கள் கண்களை உறுத்தாதா. பத்தாண்டுகள் ஒரு இருண்டகாலம் என்பேன். மாண்பு மிகு முதலமைச்சர் அவர்கள் அந்த அம்மா செய்த தவறை செய்யாதீர்கள். அதிமுக நீங்கள் சொல்லும் புரட்சித் தலைவி காலத்தில் உங்களையெல்லாம் பார்த்தால் குறிப்பாக அமைச்சரவைக்கூட்டத்தில் ரொம்பபரிதாமாக காணப்படுவீர்கள். அடக்கம் வேண்டும் ஆனால் மண்ணுக்குள் அடங்கி போகிற அளவுக்கு அடக்கம் தேவையில்லை.

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    காழ்ப்புணர்ச்சியை ஆரம்பிச்சு வைச்சதே உங்கள் கட்சிதான்.

  • Truth Triumph - Coimbatore,இந்தியா

    தமிழ் கலாச்சார அழகை ஓமந்தூரார் மளிகை அற்புதமாக கட்டி தற்கால ராஜராஜா .. மாற்று திட்டம் போட்டதற்கு மத்தியில் கூட்டு காலாவணிகளுடன் கை கோர்த்து தடை வாங்கி .. தமிழ அடையாளங்களை சீரழிக்கும் திராவிட ஸ்டாக் ... ஜெயலலிதா செய்தது தமிழர் கலாச்சார கட்டிட அமைப்பு திட்டம் .. தமிழர் அழிவு கூட்டத்தின் கையில் தமிழகம் தற்போது சந்திக்கும் சீரழிவுகள் நிச்சயம் மாறியே தீரும் ..வாழ்க தமிழகம் வாழ்க தமிழர் கலாச்சாரம் தமிழர் நலம் ...

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    // அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவருடைய மனங்களிலும் எழுந்துள்ளது. // அரசியல் காழ்ப்புணர்ச்சின்னா என்னான்னு உங்க ஆயாம்மா கிட்டே நெறைய பாத்துட்டோம்.. கட்டப்படாத பறக்கும் பாதை, மூடப்பட்ட நூலகம், உலக "தரம்" வாய்ந்த மருத்துவமனைகள் என்று நெறைய பாத்துட்டோம்.. நீங்க உங்க மிக்ஸர் வாய டைட்டா மூடிக்கொள்ளவும்..

  • Amal Anandan - chennai,இந்தியா

    தகுந்த இடத்தை ஏற்படுத்திவிட்டால் அங்கிருந்து மருத்துவமனையை மாற்றலாம். அது மருத்துவமனைக்காக கட்டப்பட்ட கட்டிடம் அல்ல.

  • Amal Anandan - chennai,இந்தியா

    அதிமுக அரசு எதை உருவாக்கியுள்ளது எதையும் இல்லை. திமுக உருவாக்கியதில் கல்வெட்டில் தங்கள் பெயரை பொறித்து கொள்வதையே வழக்கமாக்கிக்கொண்டவர்கள்.

  • sankaseshan - mumbai,இந்தியா

    வணங்காமுடி டிராவிடனுங்க புத்தி இப்படித்தான் வேலை செய்யும் பதவியில் இல்லாத கட்டுமரத்துக்கு சமாதி கட்ட EPS இடம் கையேந்தியது இவனுனங்களுக்கு மறந்து விட்டது

  • S.kausalya - Chennai,இந்தியா

    கிங் institute இருக்கும் இடத்தில் இருந்து பஸ்/ train நிலையத்திற்கு செல்லவே 1 கிலோ மீட்டர் போக வேண்டும். நோயாளிகள் பஸ்/ train விட்டு இறங்கி வந்து ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் நிலையை எண்ணி பாருங்கள். ஆட்டோவில் போகலாம் என்றால், நிச்சயம் ₹100 மிநிமமாக செலவு ஆகும். ஏழை க்கான மருத்துவமனை என்று சொல்லிவிட்டு அங்கு போய்வரவே ஒருமுறைக்கு ₹200 செலவு செய்ய வேண்டும். அரசியல்வாதிகளின் விளையாட்டுக்கு மக்களின் வரி பணம் வீணாவது மட்டுமல்ல, அங்கு சிகிச்சைக்காக செல்லவும் பணம் கொட்டி இருக்க வேண்டும். தலை எழுத்து. யாரை நொந்து கொள்வது.

  • Indian - chennai,இந்தியா

    வீட்டில் அலுவலகம் நடத்துவதும் , அலுவலகத்தில் வீடாக வாசிப்பதும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் கட்டடத்தின் வடிவு அமைப்பு மாறுபட்டது என்பது ஏன் முன்னாடி யூசிக்கவில்லை.

  • Nagercoil Suresh - India,இந்தியா

    ஆ தி மு க கட்சி தலைவர் ops அரசுக்கு எதிராக குரல் எழுப்புவது வரவேற்பிற்குரியது அதே நேரம் இந்த கட்டடம் குறித்து குரல் எழுப்புவது தேவை இல்லாதது....தற்போதய அரசு வேறொரு மருத்துவமனையை கட்டி விட்டு இதை கண்டிப்பாக தலைமை செயலகமாக மாத்தவேண்டும்...கழக கண்மணிகள் ஏதாவது மாறி மாறி செய்தால் தான் வேறு எந்த கட்சிக்கும் உங்கள் இரு கட்சிகளிடமும் அண்ட முடியாது...

  • r ganesan - kk nagar chennai,இந்தியா

    ஜெயலலிதா கருணாநிதி சண்டை இன்னும் பல பரம்பரைகளுக்கு தொடரும். அதற்கான தண்ட செலவுகளை பொது மக்கள் ஏற்று கொள்ள வேண்டும்.

    • வணங்காமுடி திராவிடன் - அஞ்சாமை திராவிடர் உடமையடா ,இந்தியா

      ஜெயலலிதா எதற்க்காக மாற்றினார் என்பது ஊருக்கே தெரியும். தங்களுக்கு மட்டும் வேறு கதை சொல்லியிருப்பார் போல. அப்புறம் அந்த நூலகத்தை மூட எத்தனித்தாரே, அதற்க்கு என்ன கதை?

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    தான் தோன்றி செயல்.

  • nsathasivan - chennai,இந்தியா

    தலைமை செயலகத்தை மீண்டும் இருந்த இடத்தில் கொண்டு வருவதில் தவறில்லை.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    எவன் வீட்டு பணம் அள்ளிவிடு , மக்கள் வரிப்பணம் தானே , 250 கோடி என்ன 2500 கோடி கூட செலவு செய்து மருத்துவமனையை மாற்று , அப்படியே உங்க அப்பா சமாதிக்கும் ஒரு ஆயிரம் கோடி ஒதுக்கு

    • Amal Anandan - chennai,இந்தியா

      இன்னும் ஐந்து வருடம் இப்படியே புலம்ப வேண்டியதுதான்.

    • வாய்ப்பில்லை ராஜா - Mayiladuthurai,இந்தியா

      நூலகத்தை கல்யாண மண்டபமாக மாற்றினால் அது நல்லதா?

  • S. Narayanan - Chennai,இந்தியா

    உண்மைதான் மக்கள் வரிப்பணம் எவ்வளவு வேஸ்ட் ஆகும். ஆகவே இதை கை விட வேண்டும்

    • Ray - Chennai,இந்தியா

      அடாவடியாக ஓமந்தூரார் மருத்துமனையாக மாற்ற செலவு செய்தபோது மவுனம் காத்த வீரகேசரி எங்கே போயிருந்தார் இருக்கட்டும் அதை மாற்றப் போவதாக புரளியைஅள்ளி விடுவதேன்

  • Kanakala Subbudu - Chennai,இந்தியா

    இந்த இரண்டு கட்சிகளுக்கும் இதே வேலையாக போய்விட்டது

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    இப்படி அந்த இடத்தை பந்தாடுவதற்கு இடித்துவிட்டு கால்பந்து அரங்கமா மாத்திவிடுங்க.

    • Iniya - Viluppuram,யூ.எஸ்.ஏ

      Good funny comment

  • Dharman Ramachandran -

    0 ...........

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    வீராணம் திரும்புகிறது போலிருக்கிறது. இந்த இரு கழக அரசியல் கட்சிகளாலும் மக்கள் வரிப்பணம் வீணாகிறது வருத்தத்துக்கு உரியது.

  • IndiaTamilan Kumar(Nallathai Ninaippom Nallathey Nadakkum ) - chennai,இந்தியா

    அடுத்து விரைவில் கலைஞர்க்கு பல கோடி செலவில் சமாதி புதுப்பிக்கபடும் அரசு செலவில் , ஊரான் வீடு நெய்

  • De Capri - Nairobi,கென்யா

    மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் நல்ல ஐடியாதான், மேலும் மேலும் சென்னையிலேயே எல்லா வசதிகளும் அமைப்பதால், கிராமப்புற மக்கள் பயனடைய வாய்ப்பில்லை. ட்ராபிக் தொல்லைகள் வேறு. ஸ்ரீபெரும்புதூர் NH, திண்டிவனம் NH இல்லை வேறு மாவட்டம் NH இங்கே அமைந்தால் பலனாகும்.

  • S.kausalya - Chennai,இந்தியா

    கிங் நோய் தடுப்பு நிலையத்தில் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்ய பட்டு வந்தது. அருமையான இயற்கை சூழ்நிலையில் இருக்கும். குதிரைகளில் இருந்து தடுப்பு மருந்து செய்ய பட்டு வந்தது. அங்கு நாய் கடி மருந்து தயாரிக்கப்பட்டு வந்தது. அதை மிருக வதை என்று சொல்லி அந்த துறையையே மூடி விட்டார்கள் ( உபயம் மேனகா காந்தி) இப்போது அதை மருத்துவமனையாக மாற்றி விலங்குகளுக்கு கஷ்டம் கொடுத்து விட்டார்கள். அது மருத்துவ மனைக்கான இடமே இல்லை. பொது மக்கள் வருவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டும். மிருகங்களை என்ன செய்தார்கள் தெரியவில்லை. அங்கே இருந்தால் மனிதர்களின் நோய் தொற்று அதற்கும் தொற்றும் அபாயம் உள்ளது. கருமம் இந்த அரசியல்வாதிகளின் அலப்பரைக்கு அளவே இல்லை. இவர் கள் பணம் பார்பதற்கு இப்படி ஏதாவது செய்து கொண்டு இருப்பார்கள் போல.

    • தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

      தற்போதைய நிலை வேறு ..போக்குவரத்து வசதிகள் அணுகு சாலைகள் நல்ல விதமாக உள்ளன . கிண்டி ரயில் நிலையம் பஸ்நிலையம் மெட்ரோ நிலையத்துக்கு அருகில் நடக்கும் தொலைவில் உள்ளது ..ஆலந்தூர் அல்லது கிண்டி ரயில் நிலையம் / பஸ்நிலையத்திலிருந்து இலவச மினி பஸ் இயக்கப்பட்டால் மிகவும் பயன் தரும் ..இரண்டு அல்லது மூன்று பஸ்கள் போதுமானவை

  • RajanRajan - kerala,இந்தியா

    ஊரான் வூட்டு நெய்யேன்னு மக்கள் வரிபணத்துலே நீங்க ஆடினீங்க இப்போ இவன் எங்கயாச்சும் கடனை வாங்கியாச்சும் ஆட்டம் போட்டு தள்ளுவன். அடுத்து நீங்க வந்ததும் அதை மருத்துவமனையா மாற்றி அம்மாவழி பெயர் போட்டுக்கோங்க. கட்சி சார்ந்த வாசி பிடிவாத போக்குகளுக்கு எல்லாம் மக்கள் பணம் தானே உங்க வூட்டு சொத்தா காசான்னு. ஓமந்தூரார் ஒரு பெரிய தியாகி.இங்கத்தை உருப்படாத கூட்டத்திலே அவர் பெயர் சிக்கி சின்னாபின்னமாகுது. எல்லாம் வித்தி தான் சாமிகளா.

  • Raja - Thoothukudi,இந்தியா

    உங்க அப்பா சாகறதுக்கு முன்னாடி நான் இறந்த பிறகு கோபாலபுரம் வீடு மருத்துவமனையாக மாற்றப்படும்னு சொல்லிட்டு செத்தாரு. அதை முதல்ல செஞ்சு காட்டுங்களேன். அவருடைய கடைசி ஆசையை நிறைவேத்தின மாதிரியும் இருக்கும். மக்களும் வாழ்த்துவாங்க.

  • jothi.n - chennai,இந்தியா

    இதேபோல் மாற்றி, மாற்றி, சட்ட சபையையும், சமாதியையும் மற்றி மக்கள் வரி பயணத்தை செலவு செய்யுங்கள், கடந்த 50வருடத்தில் இந்த மாதிரியான வீண் செலவுகளை செய்யும் இந்த திராவிட இரு காட்சிகளையும் மக்கள் என்று மாற்றுவார்களோ.

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் ,இந்தியா

    இந்த ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டுமரம் காலத்தில் கிறிஸ்துவ சவ கிடங்கு போல் கட்டினாங்க ...அதை பார்த்தாலே தமிழ் நாட்டு கலாச்சார கட்டிடம் போல் இருக்காது ....இப்ப அதை மாற்ற போகிறார்களாம் ...இப்போது கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் எதுக்கு 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை என்று புரியலை ....சென்னயிலேயே எதுக்கு இன்னொரு மருத்துவமனை ??....கிங்ஸ் இன்ஸ்டிடியூட் அடையாறு ஆற்றங் கரையில் ...போக்குவரத்துக்கு ஓரளவு வசதி தான் உண்டு.. இந்த பல்நோக்கு மருத்துவமனை மாவட்டங்களில் கட்டினால் மக்களுக்கு பயன்படும் ..ஓ.பன்னீர்செல்வம் கூறுவது போல் ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்ற முயற்சித்தால் எதிர்ப்புதான் கூடும் ...

  • HONDA -

    மக்கள் வாழும் மத்தீயில் இருப்பதுதான் நன்மைதரும்

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    இரு திராவிட கட்சிகளும் மக்கள் வரிப்பணத்தை எடுப்பார் கைப்புள்ளைபோல் கையாள்கிறது. ஓட்டளித்த மக்கள் கேள்விகேட்க முடியாது என்ற மனோபாவம். கோர்ட்தடை வாங்கினால் ??

  • Sridhar - Chennai,இந்தியா

    கிங்ஸ் இன்ஸ்டிடியூட் இருக்கும் இடம் , பலர் போக்குவரத்துக்கு ஏற்றதா?

  • Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    அது ராசியில்லாத பில்டிங்னு ஒரு பிட் போட்டு விடுங்க அதை கட்டியவுடன் அவங்க ஆட்சி இழுத்து மூட பட்டது அங்கே போனால் ஆட்சிக்கு பங்கம் வர வாய்ப்பு இருக்கு என்று சொல்லி வையுங்க

  • Sathish Qatar - Doha,கத்தார்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்சி தொண்டர்களுக்கு இந்த இடத்தில் இலவசமாக சோறு பிரியாணி சரக்கு கொடுத்து தங்க வைக்கலாம்

  • PKN - Chennai,இந்தியா

    அந்த கட்டிடத்தில் தான் எல்லா இடத்திலும் உடைத்து நாசமாக்கிய பிறகு கோரிக்கை மாத்தாதீங்கன்னு

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

    இந்த மாதிரி கட்டடம், மேம்பாலம் கட்டினால் தானே, உடன் பிறப்புக்கள் காசு பார்க்கமுடியும் ... வாழ்க கரப்ஷன், கமிஷன், கலெக்சன்

    • வாய்ப்பில்லை ராஜா - Mayiladuthurai,இந்தியா

      அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் புனிதர்கள் அப்படித்தானே.

  • PADMANABHAN R - Chennai,இந்தியா

    மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதில் இரு திராவிட கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

    • Hari - chennai,சவுதி அரேபியா

      நூறு கோடி செலவில் உருவூருக்கு ராமசாமி சிலை வைக்கும்போது அய்யா மூடிக்கிட்டு இருந்தீங்க ,மேலும் அண்ணாவிற்கு திருவூக்கு திரு அரசின் செலவில் சிலை வைத்து என்ன பணமா கொட்டுது ,மேலும் மாநிலத்தில் கேள்வி கேட்டால் மத்தியில் பதில் வருதே ,தத்துக்கு பித்துப்பிடித்தால் அது தோதுன்னுதான் பாதில் சொல்லும் என்பது உண்மைதான்..

  • JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா

    பரவாயில்லைங்க பன்னீர் செல்வம் சார். அடுத்த முறை நீங்கள் ஆட்சிக்கு வரும் போது கிண்டியிலிருந்து 450 கோடி செலவில் மீண்டும் ஓமந்தூரார் தோட்டத்திற்கு மாற்றி கொள்ளலாம். அதற்கு அடுத்த முறை திமுக வரும் போது மீண்டும் கிண்டிக்கு 750 கோடி செலவில் மாற்றி கொள்ளலாம். நீங்களும் இவர்களும் மாறி மாறி ஆட்சி செய்யுங்கள். மாறி மாறி மருத்துவமனை மாற்றுங்கள். எங்களுக்கும் Breaking News பார்த்து பார்த்து பொழுது போகும். நன்றாக இருக்கும்.

    • வாய்ப்பில்லை ராஜா - Mayiladuthurai,இந்தியா

      சூப்பர் சார்.

Advertisement