dinamalar telegram
Advertisement

தமிழில் அர்ச்சனை 12-ம் தேதி ஆலோசனை

Share
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து வரும் 12 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: வரும் 12 ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆணையர் அரங்கத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் திருக்கோயில்களுக்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருக்கோயில்களுக்கான அறங்காவலர் நியமனம் குறித்தும்,தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து வரும் 12 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள படி திருக்கோயில் விவரங்களுடன் செயல் அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் .யானைகள் பாராமரிப்பு, மற்றும் ஓதுவார் பணியிடங்கள் விபரம் திருக்கோயில்களில் மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (94)

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    அர்ச்சனையோ, வழிபாடோ, எந்த மொழியில் பண்ணாலும் அந்த பவரில் ஒரு ஜீரோ வாட் பல்பை எரிச்சிக்காட்ட முடியுமா?? பாசிட்டிவ் வைப்ரேஷன் வரும் என்பவர்கள் ஒரு சின்ன தூசியை நகர்த்த முடியுமா ?? ஒரு சாதாரண ஜலதோஷத்தை குணமாக்க முடியுமா ?? தடுப்பூசி போட்டால் கோவிட் தொற்று வராதுன்னு 95% உறுதியாக கூறமுடியும்.. இந்த சாமிகளால் 1% உத்தரவாதமாவது தரமுடியுமா ?? கடவுள்கள் அதுக்கு என்ன சொல்கிறார்கள் என்று புரியுமா? புரிந்தால் எதுக்கு கொத்துகொத்தா செத்தார்கள் என்று சொல்லமுடியுமா? போங்க, போங்க .. பிள்ளைகுட்டிங்களை படிக்கவைங்க..

  • kulandhai Kannan -

    அப்படியே மசூதிகளில் தமிழ் தொழுகையும், சர்ச்சுகளில் புரியும் தமிழும் நடைமுறைக்கு வருமா??

  • Ganesh -

    கடவுள் இல்லை ன்னு சொல்லி பார்த்தார்கள் யாரும் ஏற்கவில்லை. உடனே பிரிவினையை விதைத்தார் கள். இது ஒகே ஆகுது ன்னு இப்போ மொழி பிரச்சனையை கடவுள் வரைக்கும் கொண்டுவந்துட்டாங்க.இல்லைனா ஒருத்தன் காச எடுத்து இன்னொருத்தனுக்கு இலவசமாக கொடுக்க தெரியும்.உருப்படியா இவங்க எதுவும் கண்டுபிடிக்க மாட்டார்கள்.

  • Senthil Raman - Coimbatore,இந்தியா

    அரசுக்கு இது தேவை இல்லாத வேலை. கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைத்துவிட்டால், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    ஒரு பய வேறு அந்நிய மொழில அர்ச்சனையோ தொழுகையோ பண்ணகூடாதுன்னு சட்டம் விடுவாங்க அமைச்சரே

Advertisement