dinamalar telegram
Advertisement

பாக்., உளவாளிகள் சதி திட்டம் முறியடிப்பு

Share
Tamil News
பெங்களூரு : கர்நாடகாவில், பாகிஸ்தான் உளவாளிகள் சட்டவிரோதமாக, 'டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்' நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து ராணுவ ரகசியங்களை பெற முயற்சித்த, பாக்., உளவாளிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெங்களூரில், ராணுவ உளவுத்துறையின் தென்னக பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:ராணுவத்தின் கிழக்கு பிரிவில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவருக்கு, சமீபத்தில் தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசியவர், தன்னை ராணுவ அதிகாரி என அறிமுகப்படுத்தி, ராணுவத்தின் செயல்பாடுகள், ராணுவம் நிறுத்தப்பட்டுள்ள எல்லை பகுதிகள் உள்ளிட்ட தகவல்கள் பற்றி கேட்டார்.சந்தேகமடைந்த கிழக்கு பிரிவு ராணுவ அதிகாரி, இது குறித்து ராணுவ உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து உளவுப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த தொலைபேசி அழைப்பு, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வந்துஉள்ளது தெரிந்தது.
மேலும், வேறு சில பகுதிகளில் பணியாற்றும் ராணுவ அதிகாரிகளுக்கும், இதுபோல் பெங்களூரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது தெரிந்தது.

இது குறித்து தென்னக பிரிவு ராணுவ உளவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது, கர்நாடக மாநில பயங்கரவாத தடுப்பு படை போலீசாருடன், ராணுவ உளவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதில், பெங்களூரில் ஆறு இடங்களில் சட்ட விரோதமாக 'டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்' நடத்தப்படுவதை கண்டுபிடித்து அவற்றுக்கு, 'சீல்' வைத்தனர்.ராணுவத்தின் முக்கிய தகவல்களை பெற, பாக்., உளவாளிகள் இந்த சட்ட விரோத டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளை நடத்தி வந்ததும் தெரிந்தது. இது தொடர்பாக, தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த கவுதம் விஸ்வநாதன், கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த இப்ராகிம் முல்லட்டி பின் முகமது குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் செயல்பட்ட இடங்களில் இருந்து, ஏராளமான, 'சிம் கார்டு, லேப்டாப், கம்ப்யூட்டர்கள்' கைப்பற்றப்பட்டன. இந்த இடங்களில் இருந்து எந்த இந்திய மொபைல் போன் எண்ணையும் அழைத்து பேசி, தகவல் பெறும் அளவுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் இருந்தன.

போலீசாரின் அதிரடி நடவடிக்கையால், இந்திய ராணுவ ரகசியங்களை பெற முயற்சித்த, பாகிஸ்தான் உளவாளிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை தவிர, நாட்டின் வேறு பகுதிகளில் பாக்., உளவாளிகள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சீனாவை சேர்ந்த கும்பல்ரூ.350 கோடி மோசடிஉத்தரகண்ட் மாநில 'சைபர் கிரைம்' போலீசார் கூறியதாவது: சமீபத்தில், 'கூகுள் பிளே ஸ்டோரில், பவர் பேங்க்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியில் பல்வேறு நிதி முதலீட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

'இந்த திட்டங்களில் முதலீடு செய்தால், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இரு மடங்கு பணம் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை நம்பி, 'ஆன்லைன்' வழியாக ஏராளமானோர் அந்த திட்டங்களில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். கடந்த மாதம் 12ம் தேதிக்கு பின், கூகுள் பிளே ஸ்டோரில், அந்த செயலியை காணவில்லை. இது குறித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தினோம்.


இதில், அந்த செயலியை சீனாவைச் சேர்ந்த சிலர் நடத்தி வந்ததும், மக்கள் செலுத்திய பணம், ரகசிய பணப் பரிவர்த்தனை வழியாக பல நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும் தெரிந்தது.இது தொடர்பாக உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவை சேர்ந்த பவன் குமார் பாண்டே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செயலி வாயிலாக நாடு முழுதும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோரிடம், 350 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  உள்ளே இருந்து கொல்லும் எதிரிகள் நம் கூடவே இருக்கிறார்கள். அதுவும் நமது நாட்டில் தேச பற்று இல்லாத நபர்களை சில கட்சிகள் பிரிவினை பேசி தூண்டி விடும் நிலையில் இது நடக்கிறது. அதில் மலப்புரம், ஹைதெராபாத், பெங்களூரு, ரோஹிணியா பங்களாதேஷி அமைப்புகள் முன்னிலையில் உள்ளன.

 • என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா

  இந்தியாவில் கடைசி மூர்க்கன், திராவிடன் - இந்து எதிர்ப்பாளன் இருக்கும் வரை ஜல்லடை ஓட்டை இந்திய சட்டம் இருக்கும் வரை இது ஒரு சிந்துபாத் தொடர்கதை போல முடிவில்லாமல் தொடர்ந்து வரும்

 • என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா

  எனக்கு 2 எஸ் எம் எஸ் வந்தது சமீபத்தில் 1) உங்கள் பெயரில் எம் எஸ் எம் ஈ (நடுத்தற சிறு தொழில் அலுவலகம்) ரூ 25 லட்சம் கடன் தர முடிவாகியுள்ளது அதன் ஐ டி நம்பர் 2) இன்று வந்தது உங்கள் பெயரில் பி எப் ரிஜிஸ்டர் ஆகிவிட்டது ரூ 9,675 செலுத்தப்பட்டிருக்கின்றது. உங்கள் பான் நம்பர்.......விவரம் கொடுக்கவும். ஆகவே மக்களே ஜாக்கிரதை எதிலும்

 • M Ramachandran - Chennai,இந்தியா

  யேமாறு பவன் முட்டாளாக இருக்கும் வரை ஏமாற்றுபவங்கள் பாடு படு ஜோர ராக போய்க்கொண்டிருக்கும். அரசு எதைத்தான் களவாணிக்கும். மக்கள் சொம்மப்பெயர்களாகி இந்த செல் போன் மோகத்தில் காந்தத்தை எல்லாம் டோவ்ன் லோடு செய்து தீவிரமாக விசாரிக்கம்மல் அலறுவதை கண்டால் இவர்கள் திருந்த மாட்ட்டார்களா என்று தோன்று கிறது.

 • skandh - Chennai,இந்தியா

  தமிழ்நாட்டிலும் ஒரு RS 380 கோடி TRANSACTION ஒன்று நடந்திருக்குங்க . அதனையும் அலசிப்பாருங் .உங்களுக்கு தேவையானது கிடைக்கும்.

Advertisement