dinamalar telegram
Advertisement

நோய் தொற்று இல்லா தமிழகம் உருவாகும்: தொண்டர்களுக்கு கடிதம்

Share
Tamil News
சென்னை:'நோய் தொற்று இல்லாத தமிழகம் உருவாகும்' என, தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம்:கட்சி எல்லைகளை கடந்து, அரசு பாராட்டுகளை பெற்றுள்ளது. பல்வேறு துறையினரும் ஆதரவு அளிக்கின்றனர். பொதுமக்கள் தங்களின் நம்பிக்கை வீண்போக வில்லை என, நிம்மதி அடைந்துஉள்ளனர்.அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அனைத்து மக்களுக்குமான இந்த அரசு, தன் பணிகளை ஓய்வின்றி மேற்கொண்டு வருகிறது.

சிறப்பாக அமையும்திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில், காவிரி பாசன பகுதிகளில் நடைபெறும் துார் வாரும் பணிகளை பார்வையிட உள்ளேன்.இந்தப் பணிகள் கடைமடை வரை, செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்து, ஜூன் 12-ல், சேலம் மாவட்டத்தில் ஆய்வு பணிகள்,- ஆலோசனை கூட்டங்கள், நலத்திட்ட உதவிகளில் பங்கேற்கிறேன்.மேட்டூர் அணையில் இருந்து, காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட இருக்கிறேன்.

லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலத்தில், குறுவை சாகுபடி சிறப்பாக அமையும்; உழவர்களின் வாழ்வாதாரம் மலரும்.கட்சியினர், என்னை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம்; வரவேற்பு அலங்காரங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம்.கட்டுப்பாடுதொற்று அதிகமுள்ள மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதால், நீங்களும், நானும் ஊரடங்கு கால நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். 'கடமை'யை நான் நிறைவேற்ற வேண்டியிருப்பதால்,- 'கண்ணிய'மிக்க செயல்பாடு என்பது, நீங்கள் 'கட்டுப்பாடு' காப்பது தான்.

பேரிடர் காலத்தால், நாம் கட்டுண்டு இருக்கிறோம். பொறுத்திருப்போம்; காலம் விரைவில் மாறும்; நோய்த் தொற்று இல்லாத தமிழகம் உருவாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விபத்தில் மூவர் பலி: நிவாரணம் தர உத்தரவுகள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, ஜெயலட்சுமி, 23, என்பவரை பிரசவத்திற்காக, நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர்.அவருடன், அவரது மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோரும் சென்றனர். அந்த ஆம்புலன்ஸ் விபத்துக்கு உள்ளானதில், செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜெயலட்சுமி இறந்தார்.

இதையறிந்த முதல்வர், தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துஉள்ளார். அத்துடன், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, இறந்த கர்ப்பிணி பெண் ஜெயலட்சுமி குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய்; மற்ற இருவர் குடும்பத்திற்கு, தலா, 3 லட்சம் ரூபாய், நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (9 + 44)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ட்ராமா .செட்டிங்ஸ் மூலமே ஆட்சிக்கு வந்து விட்டு இன்னும் விளம்பரம் செய்வது சரியா? அது சரி ,பிரசாந்த் கோஷோரிடம் முதலீடு செய்த முன்னூத்தி ஐம்பது கோடியை எப்போது மீட்பது ?எவ்வாறு மீட்பது ?இது கட்சி பணமா இல்லே தனியார் முதலீடா?

 • oce -

  யோகி மோடிஜியையும் அமித்ஷாவையம் அரசியல் ரீதியாக சந்திக்கலாம்.அது தான் முறை. காவிரி அணை திறப்பை அதன் நிர்வாகிகள் யார் வேண்டுமானாலும் திறக்கலாம். காக்கா கத்தினால் கூட அது தன்னை பார்த்து புகழ்வதாக சொல்லி தம்பட்டம் அடிப்பது விளம்பரத்துக்கா.

 • oce -

  காவிரி தொற்று பரவாதுன்னு எவண் சொன்னான்.

 • oce -

  தன் ஆட்சியை தானே பெருமைபடுத்தி பேசுவதை விட மக்களே முன் வந்து அரசை பெருமையாக பேசவேண்டும். அது தான் நல்லாட்சிக்கழகு.

 • oce -

  எல்லாரும் ஓடிப்போயிட்டா நீ மட்டும் இங்கிருந்து கும்மியடிப்பியா.

Home தொற்று இல்லாத தமிழகம்: ஸ்டாலின் (44)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஹ ஹ ஹ ஹ..பீஜேபீ சங்கிகளின் கதறல்களும் புலம்பல்களும் எத்தனை ஆனந்தம் இனிமை. மேலும் மேலும் கதறவும். இன்னும் பத்து பதினைந்து ஆண்டு களுக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் முதல்வர். புடிக்காதவர்கள் குடும்பத்தோடு உ.பி. குஜராத் ராஜஸ்தான் என்று எங்கேயாவது ஓடிப் போயிடுங்கோ. இங்கே கிடந்து புலம்பி காமெடி பீஸ் ஆயிண்டிருக்காதீங்கோ.

 • bal - chennai,இந்தியா

  இன்னொரு ஐந்து வருடத்துக்கு தமிழகத்துக்கு வியாதி உள்ளது...

 • முட்டாள் முல்லா - Macca,ஐக்கிய அரபு நாடுகள்

  நம்பில். மாவட்ட ஒன்றிய முதல் வர்ரு.. வாய்க..

 • Rajasekaran - Chennai,இந்தியா

  நிறைகுடம் நீர் தளும்பல் இல் ( பழமொழி நானூறு )

 • அறவோன் - Chennai,இந்தியா

  நாராயணன் காப்பான் என்று இரு தினங்களுக்கு முன் இங்கு ஒருவன் கூறினானே

 • அறவோன் - Chennai,இந்தியா

  முதல்வர் சித்தம் தமிழ் நாட்டின் பாக்கியம் ✨🌟💫

 • அறவோன் - Chennai,இந்தியா

  காவித்தொற்று பரவவே பரவாது

 • BKrishna Murthy.T -

  அய்யா..முதலில் நீங்கள் ஊர் ஊராக சுற்றுவதை நிறுத்தவும்..வீடியோ கான்பரன்ஸ் முறையை கையாளவும்..எல்லா அதிகாரிகளையும் நன்றாக வேலை வாங்கவும்..இதுவரை ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படி செய்யவில்லை..தயவுசெய்து இனியாவது முயற்சிக்கவும்..நன்றி..

 • siriyaar - avinashi,இந்தியா

  மாதம் 10,000 பேர் காலி, தூத்துக்குடியில் 13 பேர் மரணத்திற்கு எத்தனை அலப்பறை, இந்தமாதமும் கிட்டதட்ட அதே அளவு மரணம், ஊரடங்கு கிட்ட தட்ட இப்போது இல்லை, மீண்டும் பரவினால் அடுத்த மாதமும் தொடரும்.

 • உண்மை -

  ஐயா, அண்டை மாநிலங்களில் ஊரடங்கை கண்டிப்பான முறையில் அமல் படுத்தியதால் மட்டுமே தொற்று குறைந்து வருகிறது. அங்கு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம். அதுதான் முக்கிய காரணம். ஆனால் கனிவு என்ற பெயரில் காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டு உள்ளது. தினமலர் போன்ற பத்திரிகை செய்திகள் பார்த்தால் மட்டுமே மக்கள் ஊர் சுற்றும் போட்டோக்களை பார்க்க முடியும். ஊடகங்கள் இதை ஒலிபரப்பு செய்யவில்லை.அவர்களின் அர்ப்பணிப்பும் புரியும். உயர்நீதிமன்றம் காவல்துறையினருக்கு பரிந்து பேசும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மக்களிடையே அதிருப்தி உண்டாகும் என்று தளர்வுகள் அறிவிப்பதை விட மக்கள் ஆரோக்கியம் மட்டும் முக்கியம் என்று நினையுங்கள். உயிர்கள் காப்பாற்றப்படும்.உங்களைப் பிடிக்காதவர்கள் கூட உங்களை நேசிப்பார்கள். நீங்கள் மக்களை நேரில் சந்திக்கும் போது இதை உணர்வீர்கள்.

 • skandh - Chennai,இந்தியா

  இன்று காரோண பாதிப்பு 16000. இறப்பு 358, நேற்று 17000, இறப்பு 405.இறப்பு அதிக மாவது ஏனெனில் சோதனைக்குறைவு தான் . சோதனையைக்கூட்டினால் . பாதிப்பு அதிகமாகும் . குறைகிறதுன்னு இவர் சொல்வதை நம்பி யாராவது வெளியில் வந்தால் அவர்களுக்கு காரோண உறுதி .உயிருக்கும் பாது காப்பில்லை.பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் புலவர் பெருமானே .

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  எங்களுக்கு தீயமுக இல்லாத தமிழகம் போதும்.

  • KKsamy - Jurong,சிங்கப்பூர்

   அப்ப ஒரு 5வருசத்துக்கு எங்கேயாவது ஓடிடு

  • வணங்காமுடி திராவிடன் - அஞ்சாமை திராவிடர் உடமையடா ,இந்தியா

   எதையாலோ அடிச்ச மாதிரி செம பதில்

 • g.s,rajan - chennai ,இந்தியா

  அப்போ தமிழகமக்கள் உயிரோடு இருப்பார்களா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை

 • Krishna -

  when common people coming here with concern, cant you tolerate? Why TN people supposed to ask Yogi? Dont blindly support your leader. Try to be rational

 • sankaseshan - mumbai,இந்தியா

  தொற்றுஇல்லாத. தமிழகம். எப்போது உருவாகும். அலை ஓய்ந்து. கடல் அமைதி. ஆனபின்பா.

 • வாரணம் ஆயிரம் - ,

  யாரை சந்திப்பீர்கள் ?

 • Narayanan - chennai,இந்தியா

  தொற்று இல்லாத தமிழகம் வேண்டும் என்றுதான் பெரும்பாலான மக்கள் விருப்பினோம் . உங்களின் பணம் என்ற உரம் போட்டு அந்த தொற்று ஒரு தீராத தொற்றாக இனி உங்களின் ஆட்சி இருக்கும் வரை அனுபவிக்க வேண்டிய துர்பாக்கியம் எங்களுக்கு , எங்களின் விதியை நொந்து வாழ்கிறோம் ஸ்டாலின் .

 • டுமீலன் - ,

  வாயில் வடை சுடுவது எப்படி..

 • சந்திரன் -

  அப்ப அடுத்த எலக்ஷன் அப்போ பார்க்கலாம்னு சொல்லுங்க

  • Ramani T S - chennai

   யாரு? யாரை ?

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  நானும், அமைச்சர்களும் 24 மணி நேரமும், பணியாற்றியதால், நோய்தொற்று சங்கிலி உடைக்கும் முயற்சிக்கு ஓரளவு நல்ல பலன் கிடைத்து உள்ளது. ....சிரிக்காம சொன்னாரா ...

 • s vinayak - chennai,இந்தியா

  ஆசை போகவில்லை

 • s vinayak - chennai,இந்தியா

  //உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்// எல்லாத்தையும் சேர்த்து வச்சு பார்த்துக் கொள்ளலாம் என்று அர்த்தமோ? ஆடம்பர அலங்காரத்தில் ஆசை இருக்கு

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  என்ன தன்னலம். தமிழ்நாடு காரோணவிலுருந்து விடுபட சொன்ன ஸ்டாலின் நமது இந்தியா தேசம் காரோணவிலுருந்து விடுபடும் என்று கூறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். எப்போதும் தன்னலம் தான.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  ஸ்டாலின் சுய விளம்பர பிரியர். அவர் சொல்வதை அவர் கட்சிக்காரர் கூட கேட்பதில்லை. இவரால் எப்படி தரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியும். கொரினா மேலும் பரவும் என்பத்து திண்ணம்

 • karutthu - nainital,இந்தியா

  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  மேட்டூர் அணையில் வேலை பாக்குறவங்க விடுமுறையில் போயிட்டாங்களா?.... ஸ்டாலின் எதுக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட இருக்கிறேன் என்கிறார்? .... மதகுகளை முறையாக திறந்து மூட இவருக்கு தெரியுமா?

 • ... - ,

  தல நீ இப்போ வெளிநாட்டுலயா இருக்க...

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  அஞ்சு பெரு ஆட்டோவுல போனது தொற்றை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் என்பதை இந்த நேரத்தில் தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் ...விடியல் சிறப்பு ..

 • Mayavan Mayavan -

  0..........

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் ,இந்தியா

  .....திராவிடம் என்பதே ஒரு கரும் பூஞ்சை பெரும் தொற்றுதான் ....அது தமிழ் நாட்டை அழுத்தமாக பீடித்துள்ளது ....அந்த கரும் பூஞ்சை முழுக்க நீக்குவது கொஞ்சம் நாட்கள் ஆகும் ....

 • RajanRajan - kerala,இந்தியா

  தொற்று இல்லாத தமிழகமா எப்படி ? என்ன ஒரு உலக அதிசயமப்பா. சரி இங்கே எத்தனை வகை தொற்றுகள் இருக்கின்றனவாம். குரானா, லஞ்சம், ஊழல், நிர்வாக குளறுபடிகள், நிதி பற்றாக்குறை என பல உள்ளன. ஒரே நேரத்தில் எத்தனை தொற்றுக்களை சமாளிப்பது.?? குழப்பம் தான் மிச்சம்.

 • Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அங்கு ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம் - ரொம்பவே நன்றாகவே கடை பிடிக்கிறீங்க அதனால் தான் நாலு அமைச்சர்கள் ஒரே ஆட்டோவில் போனார்கள் / பிறந்த நாள் கொண்டாட்டம் பிரியாணி கொடுக்க கூட்டத்தை கூடினார்கள் - நீங்க நடித்த விடியோவை உங்க கட்சிக்காரன் மதிப்பதில்லை என்பது மட்டும் புரிகிறது அப்பறம் மக்களை குறை சொல்லி என்ன பிரயோஜனம் ????

  • Shiva - ,

   சரியாக சொன்னீர் ஜளார்தனன்...

  • sridhar - Chennai,இந்தியா

   ஆட்டோ என்னாச்சு , ஒடஞ்சு போச்சா .

 • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,சவுதி அரேபியா

  தொற்று பரவக்கூடாது என்று அவ்வளவு அக்கறையா இருக்க கூடியவர் திறந்தால்தான் மேட்டூர் கால்வாய் திறக்குமா....

Advertisement