dinamalar telegram
Advertisement

பார்லிமென்ட்டில் பொய் கூறினாரா ?: நடிகை நஸ்ரத் ஜஹானுக்கு சிக்கல்

Share
கோல்கட்டா: திருமணம் ஆனதாக திரிணாமுல் காங். எம்.பி.யும். நடிகையுமான நஸ்ரத் ஜஹான் பார்லிமென்ட்டில் பொய் கூறினாரா என பா.ஜ.வை சேர்ந்த அமித் மால்வியா கேள்வியேழுப்பியுள்ளார்.

மேற்குவங்க திரிணாமுல் காங். லோக்சபா எம்.பி.யும். நடிகையுமான நஸ்ரத் ஜஹான், 31 தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நிகில் ஜெயினை துருக்கி நாட்டின் சட்டப்படி திருமணம் செய்தேன்.

அது இந்திய சட்டப்படி செல்லாது. அதனால் நிகிலுடனான என் திருமணம் சட்டப்படியானதல்ல. இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தோம். எங்கள் திருமணத்தை சிறப்பு திருமண பதிவு சட்டத்தின் பதிவு செய்தால் மட்டுமே திருமணம் சட்டப்படியாக செல்லும். ஆனால் பதிவு செய்யவில்லை எனவே நிகிலுடனான திருமணம் செல்லாது என்றார்.

இது குறித்து பா.ஜ.வைச் சேர்ந்த அமித்மால்வியா கூறியது, அவர் நடிகையாக மட்டும் இருந்தால் அவரது திருமண விவகாரம் தனிப்பட்ட விஷயம் என யாரும் கவலைப்பட போவதில்லை. ஆனால் ஒரு கட்சியின் எம்.பி.யாக உள்ளார். தனக்கு திருமணம் ஆனதாக பார்லிமென்டில் கூறியுள்ளார்.

இப்போது திருமணம் செல்லாது என கூறுகிறார்.அப்படியானால் பார்லிமென்ட்டில் பொய் கூறியனார ? . இவ்வாறு அமித்மால்வியா கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • sabareesan - Chennai ,இந்தியா

    இப்போ விவாகரத்து ஆகாமலேயே ஆறு மாத கர்ப்பம் ..நிகில் ஜெயின் ஆறு மாதங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்வதாக சொல்லியிருக்கிறார் ..

  • ... - ,

    விடுங்கப்பா... அது எதாவது திராவிட பரம்பரையாக இருக்கும்...

  • suresh kumar - Salmiyah,குவைத்

    தர்மேந்திராவும் ஹேமமாலினியும் ஹிந்துக்கள். ஆனால் இஸ்லாமிய சட்டப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறினார்கள். ஹிந்துக்களாகவே வாழ்கிறார்கள். எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதே இப்பொழுது அந்த அம்மையார் எம் பி யாகவும் உள்ளார்.

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    ரொம்ப முக்கியம்..

  • suresh kumar - Salmiyah,குவைத்

    அதிசயம் துருக்கி நாட்டின் சட்டப்படி திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு இந்திய நாட்டில் குழந்தை பிறக்காது அப்படித்தானே?

Advertisement