dinamalar telegram
Advertisement

பிரச்னைகளை உணர வேண்டிய நேரமிது: கபில் சிபல் வலியுறுத்தல்

Share
Tamil News
புதுடில்லி:'பல இளம் தலைவர்கள் ஏதோ ஓர் எதிர்பார்ப்பில் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். கட்சியில் உள்ள பிரச்னைகள் குறித்து தலைமை உணர வேண்டிய நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. இனியாவது கவனமாக செயல்பட வேண்டும்' என, காங்., மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

காங்.,கைச் சேர்ந்த, இளம் தலைவர் ஜிதின் பிரசாதா, பா.ஜ.,வில் இணைந்துள்ளார். காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவைத் தொடர்ந்து பிரசாதாவும் விலகியுள்ளது, கட்சியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 'கட்சியில் மாற்றம் தேவை' என, குரல் கொடுத்துள்ள மூத்த தலைவர்கள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.

'கட்சிக்கு நிரந்தர தலைமை தேவை. கட்சி நிர்வாகத்தில் சீர்திருத்தம் தேவை' என, சோனியாவுக்கு, 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இதையடுத்து கட்சியில் இவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவரான,முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளதாவது:தற்போது அரசியல் சூழ்நிலை மிகவும் மாறியுள்ளது. யாரும் கொள்கைக்காக ஒரு கட்சியில் இருப்பதில்லை.

தனிப்பட்ட முறையில் தனக்கு என்ன கிடைக்கும் என்பதையே பார்க்கின்றனர்.சமீபத்தில் மேற்கு வங்கத்தில், பலர் பா.ஜ.,வுக்கு சென்றனர். தேர்தலில் வென்றதால், திரிணமுல் காங்.,குக்கு அவர்கள் மீண்டும் திரும்பி வருகின்றனர். இதுவே, மத்திய பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா என, பல மாநிலங்களில் நடந்து வருகிறது.கொள்கையை விட்டுக் கொடுத்து, மற்றொரு கட்சியில் சேர்ந்துள்ள ஜிதின் பிரசாதா முடிவை ஏற்க முடியவில்லை. மற்றபடி ஏன் பா.ஜ.,வுக்கு சென்றார் என்பது அவரது தனிப்பட்ட விஷயம்.

இந்த நேரத்தில் கட்சித் தலைமை என்ன செய்தது, செய்யவில்லை என்பது குறித்து பேச விரும்பவில்லை.ஆனால், பிரச்னை உள்ளது என்பதை உணர்ந்து, மற்றவர் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும்.கட்சியில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். கட்சியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் வரை, இதை நாங்கள்வலியுறுத்துவோம். நீங்கள் எங்களுக்கு தேவையில்லை என கட்சி கூறினால், வெளியேறத் தயாராக இருக்கிறேன். பிணமானாலும், காங்.,கிற்கு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் சேர மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தேவை 'ஆப்பரேஷன்'காங்., அதிருப்தி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி கூறியுள்ளதாவது:கட்சியில் பதவி, பொறுப்புகள் அளிக்கும்போது, கட்சியின் கொள்கைகளில் உள்ள ஈடுபாடு குறித்து, தலைமை ஆராய வேண்டும். குடும்பத்துக்கு உள்ள மரியாதை போன்ற காரணங்களுக்காக இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது.

ஆனால் அவர்கள் கொள்கை பிடிப்பு இல்லாமல், சுயநலத்துக்காக கட்சி மாறுகின்றனர்.ஜிதின் பிரசாதா வெளியேறியது, கட்சிக்கு நல்ல படிப்பினை. கட்சியில் மிகப் பெரிய, 'ஆப்பரேஷன்' எனப்படும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமும், நேரமும் வந்துவிட்டது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என, ஒத்தி வைக்க முடியாது.

அடுத்த ஆண்டில் ஏழு மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதில் சிறப்பாக செயல்படாவிட்டால், 2024 லோக்சபா தேர்தலை நம்மால் எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து, கட்சித் தலைமை செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

 • என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா

  பிரச்சினை என்ன என்று எனக்குத் தெரியவில்லை கபில் சைபர் அவர்களே???? முதலும் முடிவுமாக இருப்பது ஒரே ஒரு பிரச்சினை அது ஒரு குடும்பம் எனில் அதை ஒத்துக்கொள்ளாத வரை இதற்கு முடிவே இல்லை

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  அந்த முதல் குடும்பம் கட்சியில், தலைமை பதவியில் இருப்பது வரை காங்கிரஸ் வளருவத்ற்கு வாய்ப்புகள் இல்லை. இதை அந்த தலைமை உணரவும் இல்லை. ஒரு சிலர் தங்கள் சுயலத்துக்காக அந்த தலைமையை ஆதரிக்கிறார்கள். இவர்களின் வழக்குகள், சம்பாத்தியங்கள் முதலியன தலைமைக்கு தெரிந்து இருப்பதால் இருக்கலாம். கஜானா அதன் முதல் குடும்பத்தின் கையில் இருப்பது வரை, காங்கிரெஸ்ஸை அந்த குடும்பம் விடாது. ஆத்தாள் காங்கிரஸ் பிளவு பட்டு, கஜானா அந்த குடும்பத்தில் கைகளில் இருந்து மாற்றப்படும் வரை காங்கிரசுக்கு விடிவு காலம் இல்லை.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  சோனியா, ராகுல்ஜி தலைவர்களாக இருக்கும்வரையில் காங்கிரஸ் வளராது. தேயும்.

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  பழைய தலை முறைகள் தான் கட்சியில் கொள்கைகள் பார்த்து சேர்ந்தார்கள் ,இன்றைய தலை முறையினர் கட்சி அரசியலுக்கு வருவதே பணம் ,பதவிக்கு தான் ,அது கிடைக்க வில்லையெனில் ,வாய்ப்புள்ள இடத்துக்கு தாவி விடுவார்கள் ..

 • s t rajan - chennai,இந்தியா

  பிரச்சனையே உங்க தலைமை தானே, அய்யா ? தலையை மாத்துங்க.

Advertisement