Load Image
dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம் : தி.மு.க., அரசு திணறுகிறதா?உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

ஜெ.விநாயகமூர்த்தி-, திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா முதல் அலையில், மத்திய அரசு முதன்முறையாக ஊரடங்கு அமல்படுத்தியபோது, பிரதமர் மோடியை விமர்சித்த ஊடகங்களும், கட்சிகளும் அதிகம். கொரோனாவை கட்டுப்படுத்த, உலகம் முழுதும் உபயோகிக்கப்பட்ட ஒரே ஆயுதம், ஊரடங்கு மட்டும் தான். அதை முதன் முதலில் பயன்படுத்திய நம் பிரதமர் மோடியை, உலக நாடுகள் பாராட்டின. அந்த இக்கட்டான காலகட்டத்தில் கூட, பல மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை. ஆனால், அதையெல்லாம் மீறி, முதல் அலையில், நம் நாடு கொரோனா Latest Tamil News
வை வென்றது என்பதே உண்மை. \


அதைத் தொடர்ந்து மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கையை, மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டுவிட்டது. உத்தர பிரதேசம், குஜராத் போன்ற, பா.ஜ.,

ஆளும் மாநிலங்களிலும், இரண்டாவது அலையின் தாக்கம் கொடூரமாக இருந்தாலும், அங்குள்ள அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, கொரானா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா, அதற்கு பின் மளமளவென பரவி பெருகி வருகிறது. முதல் அலையில் ஊரடங்கு அமல்படுத்திய பிரதமர் மற்றும் அ.தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்த, தி.மு.க., மற்றும் ஊடகங்கள், இப்போது வாயை மூடிக் கொண்டுள்ளன. ஆனால் இன்று, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.,வோ, பா.ஜ.,வோ, 'தி.மு.க., அரசு, ஊரடங்கு போட்டு மக்களை வதைக்கிறது; பொருளாதாரத்தை கொல்கிறது' என, விஷப் பிரசாரம் செய்யவில்லை.

Latest Tamil News

'தொற்றை தடுக்க, ஊரடங்கு தேவை; மக்கள், சிறிது காலம் அமைதி காத்து பொறுமையுடன் இருங்கள்' என, பொறுப்பான எதிர்க்கட்சியினராக செயலாற்றி வருகின்றன. தி.மு.க., அரசுக்கு, ஊரடங்கை அமல்படுத்த தெரியவில்லை. மதியம், 12:00 மணி வரை, காலை, 10:00 மணி வரை என, காமெடி பண்ணியதில், இன்று கிராமங்கள் வரைக்கும் பெருந்தொற்று மளமளவென பரவிவிட்டது. 'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பதுபோல, திடீரென ஒரு வாரத்திற்கு தளர்வு
இல்லாத ஊரடங்கு என அறிவித்தது. மேலும், இரு நாட்களுக்கு ஊரடங்கு இல்லை என்றதும், கடைகளில் கடல் அலை போல மக்கள் முண்டியடித்தனர்.

'மக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி பயணிக்கலாம்' எனக் கூறி, பேருந்துகளை இயக்க உத்தரவிட்டது. இதனால், பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. ஒரு இடத்தில் உள்ள கொரோனாவை, ஊரெல்லாம் பரப்பும் முயற்சி அல்லவா இது! பத்து ஆண்டு
களுக்கு பின், ஆட்சி கையில் கிடைத்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறதா, தி.மு.க., அரசு?


வாசகர் கருத்து (254)

 • venkates - ngr,இந்தியா

  குரங்கு கையில் பூ மாலை போலவா?

 • mohankumar - Trichy,இந்தியா

  அதிமுக அளவு பஸ்கள் விட்டு சென்னையை விட்டு போகும்படி எல்லா பக்கம் கொரோன பரவ வலி செய்து விட்டது

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  கண்டிப்பா மூச்சு திணறுது ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டிய நிலை

 • ramesh - kanchipuram,ஓமன்

  இதுல சந்தேகம் வேற இருக்கா?

 • Ramadoss RV - Hyderabad,இந்தியா

  முதல் மற்றும் இரண்டாம் அலை வைரஸின் உருமாற்றம் மற்றும் கூடுதல் வலிமை உணர்ந்து உங்கள் செய்தியை பதிவு செய்யவும். வைரஸ் இன்று வந்ததல்ல. அன்று அரசு என்ற ஒன்ரே இல்லை. அன்று வெளிப்படை தன்மை என்பதே இல்லை. எல்லாவற்றிக்கும் கேள்விகேட்டே பழக்கப்பட்ட நாம், அன்றையா செயல்பாடுகளை விமர்சிக்க நேர்ந்தது. இன்று சூழல் மோசமானபோதிலும், நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் மதிக்கின்ற வகையில் உள்ளது. பொறுப்பை உணர்ந்து செய்தி பரப்பவும். குறைகூறும் முன், நாமும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement