dinamalar telegram
Advertisement

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர்: குவிந்த பொது மக்கள்

Share
சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கியது. இதனை வாங்க, ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, 'ரெம்டெசிவிர்' ஊசி மருந்து கொடுக்கப்படுகிறது. தொற்று, 2வது அலை தீவிரமடைந்து உள்ளதால், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ரெம்டெசிவிர் மருந்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில், ரெம்டெசிவிர் மருந்து இல்லாததால், வெளியில் சென்று வாங்கி வருமாறு, நோயாளிகளின் உறவினர்களிடம் டாக்டர்கள் சொல்கின்றனர். அவர்கள், டாக்டரின் பரிந்துரை சீட்டை வைத்து கொண்டு, கடை கடையாக செல்கின்றனர். ஆனால், எந்த மருந்து கடைகளிலும், மருந்து இருப்பு இல்லை; கள்ளச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், ஏப்., 26ம் தேதி முதல், ரெம்டெசிவிர்மருந்து விற்பனை செய்யப்பட்டது. இங்கு கூட்டம் அலைமோதியதை தொடர்ந்து, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களிலும், மருந்து விற்பனை துவங்கப்பட்டது. ஆனாலும், கீழ்ப்பாக்கத்தில் மக்களின் கூட்டம் குறையவில்லை.

இந்நிலையில், கீழ்ப்பாக்கத்திற்கு பதிலாக, சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள, நேரு உள் விளையாட்டு அரங்கில், நேற்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு மருந்து விற்பனை செய்வதற்கான கட்டமைப்பு பணிகள் முடிவடையாததால், விற்பனை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பணிகள் முடிந்ததை தொடர்ந்து, மருந்து விற்பனை இன்று துவங்கியது.

அதன்படி, நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டு உள்ள 4 கவுண்டர்களில் இன்று(மே.,15) காலை 9 மணி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மருந்து வழங்கப்படும் என்றும், கூட்டத்தை தவிர்க்க கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.


ரெம்டெசிவிர் விற்பனை துவங்குவதற்கு முன்னரே, மருந்தை வாங்குவதற்கு கவுண்டர் முன்பு ஏராளமானோர் குவிந்தனர். மருந்து வாங்க இடம்பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்து முண்டியடித்தனர். சிலர் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால், தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.


ரெம்டெசிவிரை வாங்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இதனால், இங்கு கூட்டத்தை குறைக்க அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மருந்தை வாங்க வந்த ஒருவர் கூறுகையில், எனது மொத்த குடும்பமும் மருத்துவமனையில் உள்ளது. 10 நாட்களாக ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (91)

  • P Ravindran - Chennai,இந்தியா

    தண்ணீர் வாங்க இந்த கூட்டம்.

  • Uthiran - chennai,இந்தியா

    கொரோனா எண்ணிக்கையில் மஹாராஷ்ட்ராவை முந்தி இந்திய அளவில் முதலிடத்தை பிடிப்பதற்கு தமிழக அரசு முழுவீச்சில் செயல்படுகிறது. ஆட்சியில் ஏராளமானவ்ர்கள் சென்று விடுவார்கள் போல் தெரிகிறது..

  • Chandramouli - Mumbai,இந்தியா

    ஒன்றிணைவோம் வா கூட்டத்திலும், கிராம சபை கூட்டத்திலும் பங்கு கொண்டவர்கள் தான் இதிலும் இருப்பார்கள். பணத்திற்கு ஆசை பட்டு இன்று நோயை பரிசாக கொடுத்து உள்ளது தேர்தல் மூலம்

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இந்த மருந்து வேலை செய்து என்று உலக சுகாதார துறை தலைமை ஆராச்சி நிபுணர் சௌமிய சாமிநாதன் மற்றும் பிரியா சம்பத் குமார் அறிக்கை விட்டு ஒரு வாரம் ஆகி விட்டு நாம மக்கள் கேக்கா வில்லை அரசும் கேக்க வில்லை என்ன செய்ய பயிர் ஆட்சில் பிணங்கள் தான் நடமாடும்

  • S.VELMURUGAN - TIRUCHIRAPPALLI,இந்தியா

    வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.கே.எஸ் அழகிரி அவர்கள் எதற்கெடுத்தாலும் பிரதமர் திரு.மோடி அவர்களை குறை சொல்லி அறிக்கை விடுபவர் இதில் மௌனம் சாதிப்பது ஏன்?தன் விசுவாசத்தை திமுகவிற்கு காட்ட மௌனம் சாதிக்கிறாரா?

Advertisement