dinamalar telegram
Advertisement

இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி விலை; ரூ.995 ஆக நிர்ணயம்

Share
புதுடில்லி: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை இந்தியாவில் ரூ. 995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கொரோனா 2வது அலையால் அதிகரித்துவரும் கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க, மேலும் சில தடுப்பு மருந்துகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, 3வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது. 91.6 சதவீத செயல்திறனை கொண்ட இந்த தடுப்பூசிகள் இந்தியா வந்துள்ளன. அடுத்த வாரம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும், ஜூலை மாதம் இந்தியாவில் இதன் தயாரிப்பு துவங்கம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை ரூ. 995.40 (5% ஜிஎஸ்டி உள்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க உள்ள டாக்டர் ரெட்டிஸ் ஆய்வக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும்போது விலை குறையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நாட்டிலேயே முதன் முறையாக ஐதராபாத்தில் சோதனைக்காக இன்று போடப்பட்டது. முதல் தடுப்பூசியை கஷ்டம் பார்மா சர்வீசஸ் (Custom Pharma Services) நிறுவன தலைவர் தீபக், நாட்டிலேயே முதன்முறையாக செலுத்திக் கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • Vittalananad -

    அட கடவுளே! இத்திலுமா get ? நிர்மலா அம்மா தூங்குறீங்களா

  • kijan - Chennai,இந்தியா

    முதலாளித்துவ ...ஏகாதிபத்திய .... நாடுகள் கண்டுபிடித்த தடுப்பூசிகள் எல்லாம் 200 ரூபாய் ..... கம்மிக்கள் கண்டுபுடித்த மருந்து 1000 ரூபாயா ?

  • Kaliraj N -

    உயிருக்கு போராடுவங்களிடம்....GST வசூல்......நோயாளிள் இவர்களை நினைத்து வெட்க்கப்பட்டு கூனி குறுகி சாகவேண்டியதுதான்

  • vbs manian - hyderabad,இந்தியா

    covishild covaxin oosigalai vida athigam.

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Bata செருப்பு மாதிரி 999.99 என்று விலை நிர்ணயம் செய்திருக்கலாம். எப்படியும் Rs. 5 திருப்பி தரப்போவதில்லை கடைக்காரர்கள்

Advertisement