dinamalar telegram
Advertisement

மகனிடம் அபராதம் வசூலித்த இன்ஸ்பெக்டர்

Share
Tamil News
நகரி-சித்துார் மாவட்டம், பலமநேர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமையா, 47. இவர் தலைமையில் போலீசார், பலமநேர் டவுன் பகுதியில், வாகன தணிக்கை மற்றும் முக கவசம் அணியாமல் வருவோரிடம் அபராத தொகை வசூலித்து வந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்த வாலிபரை, போலீசார் மடக்கி பிடித்து, இன்ஸ்பெக்டரிடம் அழைத்து சென்றனர். அப்போது தான் போலீசாருக்கு, ராகுல், இன்ஸ்பெக்டரின் மகன் என, தெரிந்தது.பின், போலீசார் ராகுலை அங்கிருந்து அனுப்ப முயன்றனர்.

அதற்கு, இன்ஸ்பெக்டர் ஜெயராமையா, முக கவசம் அணியாமல் வந்தது, என் மகன் என்றாலும் குற்றம்தான். 'அவரிடம், 125 அபராதம் வசூல் செய்து, அதற்கான ரசீது கொடுத்து அனுப்புங்கள்' என, உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Ray - Chennai,இந்தியா

    "மனு நீதி"

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    "நைனா வீட்டுக்கு வா, ஆத்தா கிட்டே சொல்லி ஒன்னியே மிதிக்க சொல்றேன்" ன்னு தெலுங்கில் திட்டினதா சொன்னாங்களே..

  • GANESUN - Delhi,இந்தியா

    "கடமையை செய்" கீதையின் வாக்குக்கு உதாரணமானவர்.. வாழ்க.

  • chennai sivakumar - chennai,இந்தியா

    தங்க பதக்கம் சிவாஜி கணேசன் அவர்கள் இந்த இன்ஸ்பெக்டர்

Advertisement