dinamalar telegram
Advertisement

கொரோனாவுக்கு இம்காப்ஸ் பரிந்துரைக்கும் மருந்துகள்

Share
Tamil News
சென்னை--கொரோனா தொற்றின் பாதிப்பை குறைக்கும் வகையிலான சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகளை, 'இம்காப்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.

தொற்று பாதிப்புக்கு ஆளானோக்கு, ஆங்கில மருந்துவம் மட்டுமின்றி, இந்திய மருத்துவ முறை மருந்துகளையும் சேர்த்து வழங்குவதன் மூலம், தொற்றின் வீரியத்தை விரைவில் கட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, 'இம்காப்ஸ்' எனப்படும், இந்திய மருத்துவமுறையில் பயன்படுத்தும் மருந்துகள் தயாரிக்கும் கூட்டுறவு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:சென்னை, அடையாறு, எல்.பி., சாலையில், 'இம்காப்ஸ்' நிறுவனம் இயங்கி வருகிறது.

கொரோனா தொற்று காலத்தில், 'இம்காப்ஸ்' விடுமுறை இல்லாமல் தொடர்ந்து, மக்கள் பயன்பெறும் வகையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.தற்போது கொரோனா, இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்றுக்கு ஆளானோருக்கு வழங்குவதற்காக, நிறுவனத்தின் சார்பில், பல்வேறு இந்திய மருத்துவ முறை மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன.கடந்த அலையின் போது, எங்கள் தயாரிப்பான, கபசுர குடிநீர் நல்ல பலன் அளித்தது.

அதே போல், தற்போது, பல நோயாளிகள், மூச்சு திணறலுக்கு ஆளாகி, வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இம்காப்ஸ் பரிந்துரைக்கும் மருந்துகளை, ஆங்கில மருத்துவத்துடன் சேர்த்து, அவரவர் உடல் நிலைக்கு ஏற்பட வழங்குவதன் மூலம், தொற்றின் தீவிரத்தை குறைத்து, மருத்துவமனைகளில் கூட்டத்தை குறைப்பதுடன், மரணத்தையும் குறைக்கலாம். இம்காப்ஸ் தயாரிப்பில் பரிந்துரைக்கப்படும் சித்த மருத்துவ மருந்துகள்: கபசுர குடிநீர் சூரணம், ஆடாதோடை மணப்பாகு, 5 மி.லி., உணவுக்கு பின் பிரம்மானந்த பைரவம், 2 மாத்திரை, தாளிசாதி வடகம், 2 மாத்திரை, அமக்கரா சூரண, 2 மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் ஆகியவை காலை, மாலை உணவுக்கு பின் கரிசாலை நெய்-வழலை மருத்துவம் - தொண்டைக்கு தாளகச் செந்துாரம், 100 மி.கி., எமதண்டக் குளிகை, 2 மாத்திரை, வசந்த குசுமாகரம், 2 மாத்திரை, அஷ்ட பைரவம் மாத்திரை, 2 மாத்திரை ஆகியவை காலை, மாலை உணவுக்கு பின்ஆயுர்வேத மருந்துகள் தசமூல கடுத்ர்யாதி சூரணம், தசமூல கிவாத சூரணம் ஆகியவை, 5 கிராம் தண்ணீரில் காய்ச்சி குடிக்கவும்யஸ்டி சூரணம், 100 கிராம், அகஸ்திய ரசாயணம், சயவனப்ராச லேகியம், ஆகியவை ஐந்து கிராம், சுதர்சன சூரண மாத்திரை, 2, மகா சுதர்சன சூரண மாத்திரை, 2 சுவாசனந்தா குடிகா, 2 மாத்திரை ஆகியவை காலை மாலை உணவுக்குப் பின்யுனானி மருந்துகள் சர்பத் சுவால், 5 மி.லி., தவா சிவா ஹாலக், 5 கிராம், லபூப் சசீர், 5 கிராம் ஆகியவை காலை மாலை உணவுக்கு பின்.சித்த மருத்துவத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளில், முருங்கை, மணத்தக்காளி, பொன்னாங்காணி, துாதுவளை போன்றவை சேர்த்துக் கொள்ளலாம்

.பச்சை காய்கறிகளில் கேரட், பப்பாளி, நெல்லிக்காய், கொய்யா, மஞ்சள், இஞ்சி, பூண்டு ஆகியவை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். இவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ஆக்சிஜனேற்றிகளாக செயல்படுகின்றன.வெள்ளை அணுக்களை அதிகரிக்க மீன் - ஓமேகா 3 கொழுப்பு, பர்கோலி போன்றவற்றை உட்கொள்ளலாம். பிராணாயாமம் செய்வதன் மூலம் ஆக்சிஜன் பிரச்னை இருக்காது.எனவே, இரண்டாவது அலையில் ஆக்ஸிஜனுடன் படுக்கை தேடி அலையும் நிலையில், இம்காப்சின் மருந்துக்களை உட் கொள்வதன் மூலம், நோய் தீவிர நிலை அடையாமல் நோயாளிகள் சகஜநிலைக்கு திரும்புவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • NSNatarajan -

    இன்காப்ஸ் தயாரிப்புகளை ஆன் லைனில் அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யுங்கள். நான் பெங்களூருவில் இருக்கிறேன். நடராஜன்

Advertisement