dinamalar telegram
Advertisement

ஆய்வு:  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர்கள்.. குறைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம்

Share
Tamil News
விழுப்புரம், கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறைபாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்று ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் எனஅமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் அறிவுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர்.கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்தும், மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.இதை தொடர்ந்து, மாவட்டத்தில் தற்போது வரை நோய் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்களின், சிகிச்சைப்பெற்று வருபவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், தடுப்பூசி கையிருப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளிட்ட விவரங்களையும், ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி உள்ளிட்ட விவரங்கள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.சுகாதாரப்பணிகள் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆரம்ப சுகாதார நிலையங்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.இதை தொடர்ந்து, அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் பேசியதாவது:தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை காத்திடும் வகையில் அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையினை விரிவாக எடுத்துரைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பொதுமக்கள் தங்களுக்கு தொடர் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு பரிசோதனை முடிவுகள் வரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நோய் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக கொரோனா பரிசோதனை முகாம்கள் அமைத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

.அதிக்கப்படியான பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தி அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களை நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் வாயிலாக வீடு, வீடாக சென்று வழங்க வேண்டும்.மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் ஆகியோர் பாதுகாப்பான முறையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.கொரோனா தடுப்பு பணிகளில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களிடையே ஏதேனும் குறைகளிலிருப்பின் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகுறைபாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்று ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றனர்.

அப்போது, கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், புகழேந்தி, மணிக்கண்ணன், சிவக்குமார், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் சண்முகக்கனி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement