dinamalar telegram
Advertisement

தடுப்பூசி, மருந்துகளுக்கு ஜிஎஸ்டி ரத்து: ஸ்டாலின் கோரிக்கை

Share
சென்னை: கொரோனா தொற்றை தடுக்க தேவையான தடுப்பூசி, மருந்துகளுக்கு மீதான ஜிஎஸ்டியை குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா தொற்றால், அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளையும் மாநில அரசுகளே கொள்முதல் செய்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி கவுன்சிலோடு கலந்து ஆலோசனை செய்து, இந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை, குறிப்பிட்ட காலத்திற்கு பூஜிய சதவீதம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடு செய்ய கீழே குறிப்பிட் 3 நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்

1. நிலுவையுள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

2. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் மேல் வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோனா தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள் நிதி இழப்பீட்டை ஈடு செய்ய சிறப்புநிதி உதவி அளிக்கப்பட வேண்டும்.

3. இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ளத் தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதம் என்ற அளவில் இருந்து மேலும் ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறி உள்ளார்.

வேண்டுகோள்கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்க வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. திடீர், அவசர செலவினங்களுக்காக புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தாராளமாக நிதியுதவி வழங்குங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (63)

 • டுமீலன் - ,

  நீயெல்லாம் மனிதனா?

 • மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா

  சந்தோஷ் பாபு IAS , விருப்ப ஓய்வில் தான் சென்றவர் திரும்பி தமிழக அரசுக்கு விண்ணப்பிக்க போகிறார் , அவர் வந்தவுடன் தான் உங்கள் அடிமை கட்சியின் முன்னாள் மந்திரி உதயகுமாருக்கு ஆப்பு இறுகுடியோ , அதனால் தான் அங்கிருந்து விலகலாம் , நீ சொன்ன விஜயபாஸ்கரை குட்கா விவகாரத்தில் அமித்சாவையே அரெஸ்ட் செய்த கந்தசாமி IPS பார்த்துக்கொள்ளுவார் , இனி தொடரும்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்தியாவுல சேக்காளிங்க ரெண்ண்ட காணுமாமாம், யாருன்னா கண்டுபுடிச்சி குடுங்களேன், ப்ளீஜ்

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  தடுப்பூசி போடுங்கனு பிரதமர் கோரிக்கை வெச்சப்போ நீ போட்டயானு நக்கல் பண்ணானுக.. அவர் தடுப்பூசி போட்டதற்கு பின்பும் "நீ வடநாட்டான் நீ வேனா போட்டுக்கோ, நான் திராவிடன் எனக்கு வட நாட்டான் ஊசி தேவையில்லை" என எகத்தாலமயிறு பேசினானுக.. விவேக் மரணத்தையும் தடுப்பூசியையும் சம்மந்தப்படுத்தி வதந்தி பரப்புனானுக.. உங்க தடுப்பூசிய நம்பமாட்டோம் அதனால போடமாட்டோம்னு வாட்சப், பேஸ்புக்ல பதிவுகளா , சேனல்ல செய்திகளா போட்டு தடுப்பூசி போட நெனச்சவனையும் தடுத்தானுக.. ஆனா இன்னைக்கு தடுப்பூசிய தேடி அலையுறானுக.. இன்னைக்கு தமிழ்நாட்டோட இந்த நிலைக்கு காரணம் கண்டிப்பா தடுப்பூசிக்கு எதிரா மக்களை பயப்படுத்தி குழப்பிய நக்சலைட் மீடியாவும் , வாட்சப், பேஸ்புக்ல வதந்தி போட்ட மூட முட்டாள்களும் தான் முழு காரணம்.. தலை தலையா அடிச்சு தடுப்பூசி போட சொல்லியும் நக்சலைட் பயலுக நடத்தும் நியூஸ் சேனல் நியூசெல்லாம் பாத்துட்டு, சொன்னத கேக்காத நண்பனின் 55 வயது தாயாருக்கு கொரோனா.. மூச்சு விட சிரமப்பட்டு ஆம்புலன்ஸ் கெடைக்க நாலு மணி நேரம் ஆகி பெட்டு கெடைக்க மூணு மணி நேரமா கெஞ்சி சேர்த்தாங்க.. கடைசியா உயிர் போக மின்மயானத்திலும் காத்திருந்தது 8 மணி நேரம்.. எதுக்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறும் போலி போராளிகளையும், திருட்டு எலும்புக்கு அழையும் நக்சலிச சித்தாந்த மீடியாக்களையும் தடுக்கலேன்னா தமிழ்நாடு இப்படித்தான் ஆகும்.. எப்போதும் கண்ட கண்ட கேணபடபயலுக நடத்தும் நியூஸ் சேனல்களை நம்பி மோடியை மத்திய அரசை குறை கூறாம அவனவன் உயிர்வாழ்ற வழியை பாத்துகோங்க.. ஆயிரக்கணக்கான டாக்டர்கள் ஆராய்ச்சியாளர்கள் கொண்டு உருவாக்கிய ஊசி, மருந்து, மாத்திரைகளை குறை சொல்ல நான்கு சுவற்றுக்குள் இருக்கும் நாதாரி நக்சல் இசை நியூஸ் சேனல் நாய்களுக்கும், எப்போதும் மோடி எதிர்ப்பு மனநிலையில் பைத்தியம் பிடித்து தெரியும் எந்த அருகதையும், எந்த அறிவும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவும்...

 • ஆப்பு -

  அப்பிடியே கொரோனாவில் இறந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரி விலக்குடன் குடுங்க தளபதி

  • மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு

   மோடியின் PM CARE திறந்தாள் இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் ஆளுக்கு 1 கோடி கொடுக்கலாம்

  • டுமீலன் -

   PM care எதுக்கு கொள்ளையடிச்ச 2G ல இருந்து கொடுத்தா இந்தியாவுக்கே தலைக்கு 2 கோடி சும்மா கொடுக்கலாம்...

Advertisement