dinamalar telegram
Advertisement

கமல் கட்சியில் மேலும் ஒரு மாஜி அதிகாரி விலகல்

Share
சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர்கள், பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகிய நிலையில், மேலும் ஒரு பொதுச்செயலரான சந்தோஷ்பாபு ஐஏஎஸ் இன்று (மே 13) விலகியுள்ளார்.

சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்றாக களமிறங்கிய நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் போனது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதனையடுத்து, ம.நீ.ம., கட்சியின் துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ்; பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திடீரென கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர்.

இந்நிலையில், ம.நீ.ம., பொதுச்செயலராக இருந்து வந்த சந்தோஷ்பாபுவும் இன்று அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில்,
‛மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இது எனது தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு. கமல்ஹாசன் மற்றும் கட்சியினர் எனக்கு அளித்த பாசத்திற்கும், நட்பிற்கும் நன்றி,' எனப் பதிவிட்டுள்ளார். தகவல் தொடர்புத்துறை செயலராக இருந்த சந்தோஷ்பாபு ஐஏஎஸ், அப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்று ம.நீ.ம.,வில் இணைந்தவர்.

பத்மபிரியாவும் விலகல்



இதனை தொடர்ந்து, கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவின் பொறுப்பாளராக இருந்துவந்த பத்மபிரியாவும் கட்சியில் இருந்து விலகுவதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார். மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு 33,401வாக்குகளைப் பெற்று 3ம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (55)

  • ocean - Kadappa,இந்தியா

    கமல் நீதி மய்யம் என்ற பெயரை மாற்றி அவரது ராசிக்கு ஒத்துப்போகும் படியான பெயரை வைக்கலாம். தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளால் வறுமை. அகலவில்லை. மக்கள் வருமைக்கோடு ஒழிப்பு கழகம் என ஆரம்பிக்கலாம்.கட்சி என்ற பெயர் காங்கிரஸீடன் ஒட்டியுள்ள பெயர்.அதை பயன்படுத்தக்கூடாது.அதற்கு பதிலாக வறுமைக் கோடு ஒழிப்பு கழகம் என்று அழைக்கலாம்.

  • Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ

    மக்கள் நீங்கும் மய்யம். சுடலையிடம் சென்று "மிஷன் அஃகாம்ப்ளிஷ்டு" அறிவித்து, டீலிங் முடித்த அம்பி, மீதி தட்சிணையும் வாங்கிண்டன். கடைசியில், இந்த மாஜி நடிகனும், மய்யத்தைப் பொய்யாக்கிவிட்டு அபீட்

  • தத்வமசி - சென்னை ,இந்தியா

    அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்கிற படம் நினைவுக்கு வருகிறது. ஏனோ தெரியவில்லை.

  • sudharman - chennai,இந்தியா

    அந்த ஐ ஏ ஸ் கமலுக்கு நன்றி சொல்லி போய்ட்டாரு. ஆனா பத்மாவோ நமக்கு தான் நன்றி சொல்லுது. சொந்த காரணத்தால் விலகுகிறேன் என்று சொல்லுது. கமலுக்கு ஒண்ணுமே சொல்லல.. என்னவோ ஒரூ பிரச்னை மாதிரி தெரியுதே

  • SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ

    சங்கிக்கிட்ட காச வாங்கி காரியத்தை முடிச்சாச்சு. இனி அடுத்த தேர்தல் வரை நடிக்க போகலாம். பின் மறுபடியும் வந்து காசு பார்க்கலாம்.

Advertisement