dinamalar telegram
Advertisement

பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கையுடன் சிகிச்சையளிக்க திட்டம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

Share
சென்னை: பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கையாக மாற்றி சிகிச்சையளிக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தப்படும். சென்னையில் 1,400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பல வழித்தடங்களில் விரைவில் விரிவுப்படுத்தப்படும்.

பேருந்து வழித்தடங்களை எளிதில் அறிந்து கொள்ள சலோ ஆப் செயலியை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஆக்சிஜன் இருப்பு நிலையை பொருத்து, பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றி சிகிச்சையளிக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக சுகாதாரத்துறையினரிடம் பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம் முதன்முதலில் டில்லியில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

  • unmaitamil - seoul,தென் கொரியா

    ஐயோ ஆண்டவா ..... இந்த இக்கட்டான நேரத்தில்கூடவா இவனுங்க தமாஷ், வேடிக்கை பேசிகிட்டு இருக்கானுங்க. வெறும் படுக்கை மட்டும் இருந்தால் போதுமா ??? ஒவ்வொரு பஸ்ஸுக்கும் ஒரு மருத்துவரை போடா முடியுமா ??? தர்மோகோலை விட பெரிய ஆலோசனையாக இருக்கே ???

  • Nesan - JB,மலேஷியா

    மருத்துவ மனைகளை மேம்படுத்தி மக்களுக்கு சேவை செய்வததை விட்டுவிட்டு, காசுக்கு மாறு அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மருத்துவரை மனிதராக நடத்துங்கள்.

  • RajanRajan - kerala,இந்தியா

    சபாஷ் அமைச்சர் அண்ணா. பஸ் சீட்டை உடைக்க ஒரு டெண்டர் படுக்கை அமைக்க ஒரு டெண்டர் இப்படி ஒவ்வொரு துறையும் இனி டெண்டர் மயமான தானே பத்து வருட சொறிச்சல் தீரும். இப்படியே ஆளாளுக்கு தண்டால் போட்டானுங்கன்னா கடைசில மக்களெல்லாம் மறைமுக கடனாளியாகி தெருவும் திண்ணையுமாக்கி நமக்கு நாமே விடியல் தேடுன்னுட்டு போய்டுவானுங்களோ. என்ன வேணும்னாலும் நடக்கலாம்

  • சுடலை மாடசாமி -

    karnaadakaavil ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். kazhAkaththinarukku தான் சுய புத்தியே இல்லையே. காப்பி அடிக்கரதையும் தெளிவா அடிங்க.

  • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

    அப்படியே பிரியாணி அண்ட பியூட்டிபார்லர் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் உ.பிக்கள் அட்டகாசம் செய்கிறார்கள்

Advertisement