dinamalar telegram
Advertisement

கோவிஷீல்டு தடுப்பூசி: கால இடைவெளியை அதிகரிக்க பரிந்துரை

Share
புதுடில்லி: சீரம் இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டு தவணைகளாக ஒருவருக்கு போடப்படுகிறது. இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையிலான இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.


கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இந்திய தயாரிப்பான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு பயன்பாட்டில் உள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் சில நாட்களில் போட உள்ளனர். தற்போதைய மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 18 கோடியை நெருங்கி வருகிறது.


இந்நிலையில் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கோவிஷீல்டு தடுப்பூசி பற்றி விவாதித்தது. அதன் பிறகு அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில் முதல் தடுப்பூசிக்கும், 2-ம் தடுப்பூசிக்குமான கால இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளது. கோவாக்சினுக்கு இதுபோன்ற பரிந்துரைகள் எதையும் வழங்கவில்லை.

மேலும் கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி போடலாம் என பரிந்துரைத்துள்ளது. இவை கொரோனா தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவுக்கு அனுப்பப்படும்.

முன்னதாக மார்ச் மாதத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு இடையிலான இடைவெளி 4-6 வாரங்களாக இருந்தது. அதனை 4-8 வாரங்களாக அதிகரிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. தற்போது அதனை மேலும் 12 முதல் 16 வாரங்களாக்க நிபுணர் குழு பரிந்துரைத்திருக்கிறது.

அதே போல் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 6 மாதங்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது என்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    ஏற்றுமதிக்கு முதலிடம்.. தடுப்பு மருந்து தட்டுப்பாடு .. மக்கள் கதி அதோகதி தான்..

  • ஆப்பு -

    இரண்டாம் முறை தடுப்பூசி போடும் முன்னமே போய்ச்சேந்துட்டா? ஏதோ திருப்பதி மொட்டை போடும் பணி போல ஆகாம இருந்தா சரி...

  • அறவோன் - Chennai,இந்தியா

    ஊசி தட்டுப்பாட்டை பூசி மெழுகும் தீய கூட்டத்தின் செயல் இது

Advertisement