dinamalar telegram
Advertisement

"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ஊரில் இதெல்லாம் சகஜமுங்க... "

Share
என் இளைய மகன் லண்டனில் படித்து வருகிறார். சமீபத்தில் அவர் தன் முதலாவது கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அதற்கான சான்றிதழில், அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் படம் இல்லை. ஆனால் நம் நாட்டில், தாடி வைத்த ஒரு நபரின் படம் உள்ளது.
-காங்., ராஜ்யசபா எம்.பி., ஜெய்ராம் ரமேஷ்.

'இப்படித் தானே நம் ஜனநாயகத்தில், காலம் காலமாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. திட்டங்கள் அனைத்திற்கும் நேரு, இந்திரா, ராஜிவ் பெயர்கள். மாநிலங்களில் முதல்வர்கள் பெயர்கள். அந்த வகையில் நம்ம ஊரில் இதெல்லாம் சகஜமுங்க...' என, சொல்லத் துாண்டும் வகையில், காங்., ராஜ்யசபா எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் அறிக்கைகொரோனா 2-வது அலை வரப்போகிறது என்று நம் விஞ்ஞானிகளே எச்சரித்தும், மத்திய அரசு துாங்கி விட்டது; தோல்வி அடைந்து விட்டது. மோடி அரசு தன் தவறை ஒப்புக் கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
-ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி

'அவர் மன்னிப்பு கேட்டதும், கொரோனா குறைந்துவிடப் போகிறதா; உங்களின் ஐதராபாத் தொகுதியில் கொரோனா கொட்டம் போடுகிறது; காரணம் நீங்கள் தானா...' என, காட்டமாக கேட்கத் தோன்றும் வகையில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி பேட்டிதமிழகத்தில் மது விற்பனை சனிக்கிழமை 426 கோடி ரூபாய்; ஞாயிற்றுக்கிழமை, 429 கோடி ரூபாய். சனிக்கிழமையை ஞாயிற்றுக்கிழமை வென்றுவிட்டது.
-பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

'ஒரு மாதம், 'டாஸ்மாக்' கடைகளை அடைக்கப் போகிறோம் என்றால், 1,000 கோடி ரூபாயை தாண்டியிருக்கும் விற்பனை...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கைஒரு கண்ணில் வெண்ணெய்; மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு. இது தான் மத்திய அரசின் கூட்டாட்சி தர்மம். ஒரே மக்கள் தொகை உள்ள மாநிலங்களுக்கு, வெவ்வேறு அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை ஒதுக்கீடு செய்வது எப்படி? தமிழகத்தின் மக்கள் தொகையைவிட குறைவாக இருக்கும் குஜராத்துக்கு, இரண்டு மடங்கு அதிகம் எப்படி?
-தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்

'நோய் தாக்கம், பரவல் போன்றவற்றின் அடிப்படையில் தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது. அதிலும் அரசியல் செய்ய, பிரதமர் மோடி, தமிழக அரசியல்வாதியில்லை...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கைஅமெரிக்காவில் 40 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு விட்டனர். முழுக்க முழுக்க இலவசம். 'டிபார்ட்மென்ட் ஸ்டோர்'களில் கூட இலவசமாக போடுகின்றனர். அமெரிக்காவை உதாரணமாக கொள்ளும் மோடி அரசு, இந்த விஷயத்தில் அதை ஏன் பின்பற்றவில்லை?
-தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்

'கேள்வி கேட்பது எளிது. செயல்படுத்துவது மிக கடினம் என்பதை, உங்களின் கூட்டணி கட்சி தலைவரான ஸ்டாலின் மற்றும் தி.மு.க.,வினர் உணர்ந்திருப்பரே; அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கைShare
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (49)

 • ஆப்பு -

  சுதந்திரப்.போராட்டத்தில் காந்தியிட இருந்து போராடுன ஒருத்தர் பேரு மோடி. அவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அவரோட பேரு வெச்சிருக்கோம். நரேந்திர மோடிக்கும் ஸ்டேடியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருந்தால் அது கற்பனையே.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இந்த ஜெய்ராம் ரமேஷ் முஸ்லீம் நேரு காங்கிரஸ் ஆகவே அவன் இப்படி அறிவில்லாமல் சொல்வதில் தவறே இல்லை. அனால் இங்கே கருத்து என்னும் பெயரில் அறிவில்லாமல் உளறுகின்றார்களே என்று பார்க்க பரிதாபமாக இருக்கின்றது. முதல் முதலில் வெளியான செர்டிபிகேட்டில் இருந்தது, உடனே அது நீக்கப்பட்டு விட்டது. எனது கோவிஷீல்டு செர்டிபிகேட்டில் அவருடைய போட்டோ இல்லை. இப்படி எதிர்மறை கருத்துக்களை முஸ்லீம் நேரு காங்கிரசுக்கு சப்போர்ட்டாக சொல்பவர்கள் கோவிஷீல்டு இன்னும் போட்டுக்கொள்ளவில்லை அல்லது அவர்கள் தந்தை தாய் சர்டிபிகேட் கூட பார்க்கவில்லை அதனால் தான் உளறல் கருத்துக்கள் மூர்க்க கிறித்துவ காங்கிரஸ் வெறி பிடித்த உளறல்கள் போலவே இருக்கின்றது

 • ஆப்பு -

  அதே போல் கொரோனாவில் செத்துப்போனவங்களுக்கு குடுக்கப்படும் இறப்புசான்றிதழிலும் அதே தாடிக்காரர் படம் வெக்கலாம். புகழ் ரெட்டிப்பாகும். மக்களுக்கும் அடுத்த தேர்தல் வரை ஞாபகம் இருக்கும்.

 • vbs manian - hyderabad,இந்தியா

  ஹைதெராபாத்தில் ரம்ஜான் பண்டிகை விற்பனை சார்மினார்பக்கம்.. ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கியடித்து கொண்டு பொருட்கள் வாங்குகிறார்கள்.

  • ஆப்பு - ,

   ஒரு வேளை கொரோனா வந்து போறதுக்கு முன்னாடி நல்லா சாப்புட்டுட்டு போலாம்னு மக்கள் நினைக்கிறாங்களோ என்னவோ? இன்று நீ... நாளை நான்னு ஆயிடுச்சு.

 • Suppan - Mumbai,இந்தியா

  தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - இது படேல் காம்ப்லக்ஸ் அதில் உள்ள ஸ்டேடியத்துக்கு அதற்கு நிதி கொடுத்தவர்கள் மோதி ஸ்டேடியம் என்று பெயர் வைத்துள்ளார்கள். நீங்களும் பணம் கொடுத்து குறைந்த பட்சம் ஒரு கழிப்பறைக்கு உங்களுக்குத் பிரியமான தலைவரின் பெயரை வையுங்களேன்.

  • Darmavan - Chennai,இந்தியா

   அது சொந்தப்பணத்திலிருந்து வராது.அது ஒருவழிப்பாதை.

Advertisement