dinamalar telegram
Advertisement

‛5ஜி - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: அமெரிக்கா

Share
வாஷிங்டன்: 'இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு '5ஜி' தொழில்நுட்ப பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படாதது அந்நாட்டின் இறையாண்மை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்' என அமெரிக்க வெளியுறவு துறை கூறியுள்ளது.

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சகம் கடந்த வாரம் 'ரிலையன்ஸ் ஜியோ பார்தி ஏர்டெல் வோடபோன் ஐடியா எம்.டி.என்.எல்.' உள்ளிட்ட தொலைதொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது. மேலும் இந்த நிறுவனங்கள் சீன நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு சீன நிறுவனத்துக்கும் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படாததால் அந்நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.
இதையடுத்து அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்று முன்தினம் கூறியதாவது: இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்பதை அறிந்தோம். அது அந்நாட்டின் இறையாண்மை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும்.இந்த விஷயத்தில் ஒன்றை மட்டும் எங்களால் கூற முடியும். சீன அரசால் கட்டுப்படுத்தப்படும் சாதனங்களுடன் கூடிய நெட்வொர்க்குகள் நிறுவப்பட்டால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்து நாங்களும் கவலைப்படுவது உண்மை தான். சோதிக்கப்படாத மற்றும் நம்பத்தகாத சீன தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

 • ஆப்பு -

  சீன நிறுவனங்கள் இங்கேயே கடை போட்டு செல்போன் தயாரிச்சு விக்க எந்த இறையாண்மையும் தேவையில்லை. இங்கே மாமல்ல புரத்தில் சீன அதிபர் ஜிங் ஜிங்கோட கண்ணாடி மாளிகையில் டீ குடிச்சுட்டு பேசிட்டு வரவும் இறையாண்மை தடையில்லை.

 • sahayadhas - chennai,பஹ்ரைன்

  க.குமார் தம்பி, நீங்கள் ஒருவர் மட்டும் நாட்டு பற்றுடையவராக இருந்தால் போதுமா. அப்படியே உங்கள் ஐயாவிடம் ரேடியோவில் / media வில் ஒழிந்திருந்து கூற சொல்லுங்கள் பார்போம் -

 • sahayadhas - chennai,பஹ்ரைன்

  இன்னுமா நம்புறீங்க , இப்படியே கோரானா கட்டுபாடு என்று பொய் கூறி ஜனங்களை உலாவிட்டு கொத்து கொத்தாக பிணங்கள். மறுபடியும் அடுத்த பொய் சீனாவிலிருந்து 80% மேல் இறக்குமதி வந்தவண்ணமே உளது.

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   ஸஹாயதாஸ் அண்ணே, நான் எனது வீட்டில் பயன்படுத்தும் கார், ஏசி, பிரிட்ஜ், ஏர் கூலர், வாஷிங் மெஷின், பற்பசை, சோப்புகள், ஷாம்புகள், பிளேடு, இஸ்திரி பெட்டி, மொபைல் போன், பவுடர், மின் விசிறி மற்றும் அனைத்து பொருட்களும் இந்திய தயாரிப்புகள். இந்திய தயாரிப்புகளை பார்த்து பார்த்து வாங்குவேன். அதுபோல நீங்களும் வாங்குங்கள். இறக்குமதி குறைந்து இந்தியா தானாக முன்னேறும். மதத்துக்காக மோடிஜியை எதிர்ப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் நாட்டு பற்றுடன் இருங்கள்.

  • தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

   குமாரு ஜி , இந்தியா மண்ணோடு மண்ணானாலும் பரவாயில்லை ..இவர்களுக்கு இவர்கள் மதம் ஒன்றே முக்கியம் ....இன்று கூட இந்திய மூர்க்கனையும் இந்திய அல்லேலூயாக்களையும் எந்த ஒரிஜினல் முஸ்லீம் , கிறிஸ்தவன் மதிக்கிறான் ? இவர்களுக்கு சுயமரியாதை ,மானத்தை இழந்தாவது அந்த மதங்களில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் தாய் நாட்டை கேவலப்படுத்த வேண்டும் ...அவ்வளவுதான் ....

 • M Ramachandran - Chennai,இந்தியா

  சிலர் மோடியை எதிர்ப்பதா கூறி கொண்டு நாட்டிற்கு எதிரிடையாக கருது கூறி கொண்டு வருகிறார்கள். அருவருக்க தக்கது. தாய் நாட்டை நேசிக்காதவனை பற்றி என்ன கூறுவது?

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  கிராமத்துக்காரனுங்க நம்ம நாட்டுல புத்திசாலிங்க...தப்பு பன்றவனை ஊரை விட்டே ஒதுக்கி வைப்பானுங்க...எவனும் அவங்க கிட்ட தொடர்பு கூடாது...அதே மாதிரி சீனாவை உலக நாடுகள் பண்ண வேண்டும்...

Advertisement