dinamalar telegram
Advertisement

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது

Share
துாத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன், மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்வது இன்று துவங்கியது.

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. உற்பத்திக்கு தேவையான மின்சாரம், குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜன் உற்பத்தி பணியில், 320 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக நடந்த சோதனை ஓட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று உற்பத்தி துவங்கும் நிலையை அடைந்தது. இன்று முதல் உற்பத்தியாகும் ஆக்சிஜன், லாரிகளில் தேவையான மருத்துவமனைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ஆக்ஸிஜன் விநியோகிக்கும் பணி இன்று துவங்கியது.
Tamil News
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆக்சிஜன் விநியோகிக்கும் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நேற்றிரவு ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் ஆலை துவங்கியது. ஆக்சிஜன் நிரப்பிய முதல் கண்டெய்னர் லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட்டில் இருந்து புறப்பட்டு கோவை, நெல்லை மருத்துவமனைகளுக்கு சென்றது. 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற் கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்எனவும் அடுத்த சில நாட்களில் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (61)

  • Krishna -

    MANIDHA UYIRGALAI KAAKUM OXYGEN INGU URPATHI SEYYA KOODADHU ENA KADAISI VARAI KOOKURAL ITTA SAIKO KURUMA KAAMA HAASAN PONDRA MANIDHA MIRUNGANGAL NAM THAMIZH NAATIN SAABA KEDU.

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    அந்தக்குதி குதிச்சி மூடுனாய்ங்க. சரி சரி, இந்த சைக்கோ, திருமாவளவன், ஆமைக்கறியான் சவுண்டையே காணோமே.

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    அந்த பதிமூணு பேர் ஆத்மா ?? போ போ போயி வேலையை பாரு இன்னும் அஞ்சு வருஷம் இந்த போராளிகள் உடம்புல சாக்கடை தண்ணி தான் ஓடும்

  • kosu moolai - nadunilaiyoor,இந்தியா

    அந்த மேன் ஏன் எப்பவும் எல்லைய தாண்ட மாட்டேங்குறாரு. ? பயமா ?

  • Suppan - Mumbai,இந்தியா

    எங்கள் உயிர் போனாலும் ஸ்டெர்லைட்டைத் திறக்கவிடமாட்டோம் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் வேண்டாம் என்று கூவிய கோப்பால்சாமி , கணியக்கா திருமா போராளீஸ் எங்கே போயிட்டீங்க.

    • தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

      இதற்கும் ஒரு கணிசமான பெட்டியை வாங்கியிருப்பார்கள் ....

Advertisement