dinamalar telegram
Advertisement

பெட்ரோல், டீசல் விலை: அரசுக்கு கமல் கோரிக்கை

Share
சென்னை : 'தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, பெட்ரோல், டீசல் விலையை, தமிழக அரசு குறைக்க வேண்டும்' என, கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை: கொரோனா முதல் அலையில் மூழ்கிய பொருளாதாரம் மீளாத நிலையில், மக்கள் வேலையிழப்பு, வருவாய் இழப்பு, மருத்துவ செலவினங்கள் என, அல்லல்பட்டு வருகின்றனர். இரண்டாவது அலை, ஒரு சுனாமியை போல் தாக்கி, தமிழக மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது, வேதனை அளிக்கிறது. விலையை குறைக்கும் எண்ணம், மத்திய அரசுக்கு இல்லை.'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், விலை குறைக்கப்படும்' என, தேர்தல் வாக்குறுதியில் கூறியதை, உடனே அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (41)

 • JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா

  பெட்ரோல் விலை குறைப்பு முற்றிலும் மாநில அரசுகளின் கைகளில் தான் உள்ளது. மத்திய அரசிடம் இல்லை. எந்த மாநில அரசும் GST க்குள் பெட்ரோலை கொண்டு வர எந்த GST Council கூட்டத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை. இதுவரை 30க்கும் மேற்பட்ட GST Council கூட்டம் நடந்தது முடிந்துள்ளது. அதேபோல் இன்று நமது முதலமைச்சர் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர் கோரோணா மருத்துவ பொருட்களுக்கு GST நீக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவர் உண்மையிலேயே தெரிந்து சொன்னாரா அல்லது தெரியாமல் சொன்னாரா என்று தெரியவில்லை. GST வரியை நீக்கினால் அந்த நிறுவனங்களால் INPUT Tax Credit எடுக்க முடியாது. அதனால் அந்த மருந்துகளின் உற்பத்தி விலை மீண்டும் அதிகரிக்கும். பரவாயில்லையா? மாநில அரசுகளும் பெட்ரோல் மீது வரி விதிக்கிறது. மத்திய அரசு மட்டும் அல்ல. மாநில அரசுகள் குறைத்துவிட்டு , மத்திய அரசின் வரியிலிருந்து மாநில அரசுக்கு கிடைக்கும் பங்களிப்பை பெட்ரோல் உபயோகிப்பாளருக்கு மானியமாக தரலாமே? ஏன் மாநில அரசுகள் இதை செய்ய கூடாது.? உங்களுக்கு ஒன்று தெரியுமா நம் நாட்டில் பெட்ரோல் டீசல் வரியை மட்டும் அல்ல எந்த வரியை குறைத்தாலும் அது நுகர்வோர் அதாவது நம்மை போன்ற சாதாரண ஜனங்களை சென்றடைவது இல்லை. வரியை குறைப்பதாக காட்டினாலும் அரசியல் கட்சிகள் உற்பத்தியாளர்களோடு இனைந்து கொண்டு பொருட்களின் விலை குறையாமல் பார்த்து கொள்வார்கள். அது காய்கறினாலும் சரி கம்பெனி பொருட்கள் ஆனாலும் சரி. கடைசியாக ஒன்றை கூற விரும்புகிறேன். நான் பெட்ரோல் விலையை தான் உயர்த்த வேண்டும் என்றேன் தவிர டீசல் விலையை அல்ல. பொருள் போக்குவரத்துக்கு 95 சதவீதம் டீசல் தான் உபயோகபடுத்தபடுகிறது. அதனால் காய்கறி விலை ஏறாது. ஏறவும் கூடாது. அப்படி ஏறினால் அது இடைதரகர்களை தான் சென்று சேரும். அப்போது தெரியும் நம் அரசியல் வாதிகள் எப்பேர்ப்பட்டவர்கள் என்று.

  • பாமரன் - ,

   ஜி நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா... உளுந்து விலை கிலோ இருநூறு ரூபாய் வரை வித்தப்பவும்..... அதேபோல் என்பது ரூபாய்க்கு வித்த போதும் சரவணபவன் இட்லியை இருவது ரூபாய்க்கு வித்து வருடாவருடம் ஏத்திக்கிட்டே தான் போனான் அதனால் உளுந்து விலை குறைஞ்சப்போ அரசு செஸ் வரி போட்டு எடுத்திருக்கனும்னு சொல்ற மாதிரி இருக்கு...🙄🙄 ஒரு மக்களின் அரசின் வேலை டைரக்ட் டாக்ஸ்... அதாவது கார்பொரேட் மற்றும் வசதி படைத்தவர்கள் மூலமாக அதிக அளவிலும்... இன்டைரக்ட் டாக்ஸ் அதாவது நீங்களும் நானும் தினந்தோறும் உபயோகப்படுத்தும் பொருட்கள் மற்றும் வசதிகள் மூலம் குறைந்த அளவில் பெறுவதும் தான்... ஒரு மெச்சூர்ட் எகானமியில் இதன் அளவு 70:30 சதவிகிதமாவது இருந்தால் மட்டுமே விலைவாசி மற்றும் வாழ்க்கை தரம் நல்லாயிருக்கும்... ஆனால் இங்கு நடப்பதென்ன...??? 2014 இவர்கள் ஆட்சிக்கு வந்தபோது கிட்டத்தட்ட 52:48 ஆக இருந்தது இப்போது 35:65 விகிதத்திற்கு அதாவது பாமரன் பணக்காரனுக்கு படியளக்கும் நிலைக்கு கொண்டு சென்று விட்டார்கள்... இதையெல்லாம் புரிந்து செய்ய திறமையான மற்றும் நிபுணர்கள் பேச்சைக் கேட்டு செயல்படும் தலைமை தேவை... நமக்கு வாய்த்திருப்பது எப்படின்னா கேள்வி கேட்கறாங்கன்னு ரூல் படி ஒவ்வொரு காலாண்டில் நடத்த வேண்டிய GST கவுன்சில் கூட்டத்தை காணொளி மூலம் கூட கடந்த இரு காலாண்டாக நடத்தாமல் டபாய்க்கும் அமிச்சரு... வலதுசாரியாகவோ இடதுசாரியாவோ இல்லாமல் பாமரனா அனுகினால் நிர்வாகம் அத்தனை கடினமானதல்ல... என்ன ஒன்னு இந்த தளத்தில் முத்திரை குத்துவாங்க... வைவாங்க... நாம்தான் தொடச்சி போட்டுட்டு போய்க்கிட்டு இருக்கனும்....💪..🖐️

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  சத்தியமா இன்னும் மக்கள் நீதி மையம் இருக்கு பாஸ். இன்னிக்கு கூட அறிக்கை விட்டுருங்கனுங்க.

 • V. Manoharan - Bangalore,இந்தியா

  இவர்கள் இப்பொழுது புது மனிதர்களை போல பழசை மறந்து நல்லாட்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி ஏதாவது ஏடாகூடம் பேசி வெறுப்பேற்றி அவர்கள் உள்ளே உள்ள மிருகத்தை வெளிக்கொணர்ந்து விடாதீர்.

 • உண்மை -

  நானும் உள்ளேன் ஐயா எனும் கோஷ்டி தான் இது.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  ஜீ தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதி இருக்கட்டும்.எண்ணெய் நிறுவனங்களும் ,தங்கமும் அரசுக் கட்டுப்பாட்டில் வர குரல் கொடுங்கள்.கொள்ளையடித்தவனுங்க இப்போ கோல்டாக வாங்கி பத்துக்குறானுங்க. மக்களிடம் பணம் இல்லை.தங்கம் விலை மட்டும் எகிற ஊழல் தான் காரணம்.தங்கத்தின் விலை உலக அளவில் நிர்ணயிக்கப் படுவதாகச் சொன்னாலும் அதற்கு ஊழல் பெருச்சாளிகளும்,பண முதலைகளுமே காரணம்.

  • Prakash - Chennai,இந்தியா

   //ஜீ தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதி இருக்கட்டும் // பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று ஸ்டாலினை நம்பி ஒட்டு போட்ட மக்களுக்கு உங்கள் பதில் என்ன ....முதலில் இதற்கு பதில் கூறவும்...சால்ஜாப்பு வேணாம் ...மக்கள் அவதி படுகிறார்கள் ....அவர்களுக்கும் விடியல் பிறக்கட்டும்

Advertisement