dinamalar telegram
Advertisement

ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த தயங்கும் அரசு! தொடரும் உயிர் பலி

Share
கோவை: தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின், ஆட்சியில் அமர்ந்திருப்பதால், மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்கிற எண்ணத்தில், முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த, தி.மு.க., அரசு தயங்குகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்த தீவிரம் காட்டாமல், அஜாக்கிரதையாக செயல்படுவதால், உயிர் பலி தொடர்கிறது.

கோவை மாவட்டத்தில், ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 2,500ஐ கடந்து விட்டது. மாநகராட்சி பகுதியில்தான் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர, 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் வர்த்தகர்களின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்று கூறி, மளிகை, காய்கறி, இறைச்சி, தேநீர் கடைகளை, மதியம், 12:00 மணி வரை திறந்திருக்க, தமிழக அரசு அனுமதித்திருக்கிறது.

ஓட்டல்கள், இரவு, 9:00 மணி வரை செயல்படலாம் என்றும் சலுகையை அதிகப்படியாக வழங்கியிருக்கிறது. 50 சதவீத தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறது. இத்தகைய சலுகைகள் காரணமாக, தினந்தோறும் நுாற்றுக் கணக்கானோர், இரு சக்கர வாகனங்களில், மார்க்கெட்டுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் சாதிப்பதால், இரவு, 10:00 மணியானாலும் மக்கள் ஜாலியாக சென்று வருகின்றனர். இது, தொற்று பரவல் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பாக அமைந்தள்ளது.

அதனால், கடந்தாண்டு, மார்ச் மாதம் கொரோனா பரவ ஆரம்பித்ததும் எத்தகைய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோ, அதுபோன்ற நடைமுறையை இப்போது மீண்டும் பின்பற்ற வேண்டும் என, மருத்துவத்துறையினர் மன்றாடி கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தி.மு.க., ஆட்சியில் அமர்ந்ததும், ஊரடங்கை அமல்படுத்தி விட்டது; மக்களை கஷ்டப்படுத்துகிறது என்கிற அவப்பெயர் வந்து விடக்கூடாது என்கிற எண்ணத்தில், ஒவ்வொரு நாளும் ஊரடங்கிலும் புதுசு புதுசாக சலுகைகளை அறிவித்து, தவறான பாதையில் பயணிக்கிறது.
கொரோனா பரவலை தடுப்பதை, தி.மு.க., அரசு மிகவும் அஜாக்கிரதையாக கையாள்வதால், மருத்துவத்துறையினர் நொந்து போயுள்ளனர். உயிர் பலி தினமும் தொடர்கிறது. போலீசாருக்கு சுதந்திரம் வழங்கி, வாகன போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மருத்துவ உதவி தேவையில்லாதவர்கள், வெளியே வராமல் வீட்டுக்குள் தனித்திருந்தால் மட்டுமே, மற்றவர்களுக்கு பரவாமல், கொரோனா சங்கிலி அறுபடும். அதற்கு தேவை, தி.மு.க., அரசின் துணிச்சலான நடவடிக்கை.

நேற்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு :கொரோனா தொற்று, ஆக்சிஜன் பற்றாக்குறையால், கோவை மாவட்டத்தில் உயிரிழப்பு தொடர்கிறது. இம்மாதத்தில், கடந்த, 9ம் தேதி முதல் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், 18 பேர் இறந்தனர். கடந்த, 12 நாட்களில் மட்டும், 89 பேர் உயிரிழந்திருப்பதாக, மாவட்ட நிர்வாகம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்றால், இதுவரை, 810 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, தொற்று குணமாகி, இணை நோயால் இறந்தவர்கள் ஏராளம்.

இதர மாவட்டங்களில் இருந்து, கோவை மருத்துவ மனைகளுக்கு வந்து, சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எக்கச்சக்கம். அந்த உயிரிழப்புகளை சேர்த்தால், மிகப்பெரிய எண்ணிக்கை வரும் என்பதால், அந்தந்த மாவட்டங்களின் கணக்கில் சேர்க்கப்படுகின்றன.

திருப்பூரை பின்பற்றுமா கோவை!தொழிற்சாலைகள், 50 சதவீத தொழிலாளர் களுடன் இயங்கலாம் என, தமிழக அரசு சலுகை காட்டி இருப்பினும், கொரோனா பரவலை தடுக்கவும், தொழிலாளர்களின் உயிரை காக்கவும், முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களை, 24ம் தேதி வரை மூட, ஏற்றுமதியாளர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர், ஓட்டல் உரிமையாளர் கள் சங்கத்தினர், காய்கறி, இறைச்சி மற்றும் மளிகை வியாபாரிகள் சங்கத்தினர், சூழ்நிலையை புரிந்து, தாமாக முன்வந்து, சுயகட்டுப்பாடுகளுடன், ஊரடங்கில் பங்கேற்க வேண்டும். வர்த்தகம் எப்போது வேண்டுமானலும் செய்யலாம்; உயிரும், உறவும் முக்கியம் என்பதை ஒவ்வொரு தரப்பினரும் உணர வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (84)

 • Asagh busagh - Munich,ஜெர்மனி

  ஒரு புறம் தின கூலி, அன்றாட வாழ்வாதாரத்தை நம்பி பல கோடான கோடி ஏழை மக்கள். இன்னொரு புறம் தொழில் மற்றும் வேலையின்மையால மிடில் க்ளாஸ் மக்களிடமும் பாதிப்பு. வளர்ந்த நாடுகள் போல சமூக பாதுகாப்பு கோட்பாடுடன் அரசியல் அமைப்பு சட்டத்தை அமைத்திருந்தா அவர்களை போலவே முழு அடைப்பிலும் ஓரளவு பாதிப்புடன் கொரோனாவை வென்றிருக்கலாம். மேலை நாட்டு கலாச்சாரம்கிறது ஆடை குறைப்பு, பொறுப்பற்ற சமூகம் அப்படிங்கிறது இல்லைன்னு புரிஞ்சு கிட்டு இனியாவது நல்ல விஷயங்களை அரசிய்லமைப்பிலும், சமூக நலன் சார்ந்த விஷயங்களிலும் பின்பற்றி வருங்காலதல வர இருக்கிற அபாயகரமான தொற்றுநோய்களை எதிர் கொள்ளலாம். ஆகஸ்ட இறுதிக்குள் ஒரு கோடி மக்கள் வரை உயிரிழக்க கூடும்னு மருத்துவர்கள் சொல்கிறார்கள். முழு அடைப்பினால வாழ்வாதாரம் பாதிச்சாலும் இந்த இறப்பு எண்ணிக்கைய ஓரளவுவாவது குறைக்கலாமே ஒழிய தவிர்க்க வாய்ப்பே இல்ல.

 • அறவோன் - Chennai,இந்தியா

  News today: "The Prime Minister is also missing, along with vaccines, oxygen and medicines. All that remain are the central vista project, GST on medicines and the Prime Minister's photos here and there,"

 • Rengaraj - Madurai,இந்தியா

  டீக்கடை, மளிகைக்கடை , காய்கறிக்கடை, இறைச்சி மீன்கடைகள் காலை பத்துமணிக்கு மேல் இருக்க வேண்டாம். இரவு உணவகங்களும் கொஞ்ச நாட்களுக்கு வேண்டாம் என்று உத்தரவு போடுங்கள் திரு முதல்வர் அவர்களே. கூட்டம் கூடுவதை குறைத்தாலே போதும். கொரோனா கட்டுக்குள் வந்து விடும் முதல்வரே உடனடியாக முடிவெடுங்கள்.

 • Rengaraj - Madurai,இந்தியா

  முதல்வர் அவர்களே தயவு செய்து ஒவ்வொரு மாவட்ட எல்லையை மூடுங்கள். அந்த அந்த மாவட்ட ஆட்சியருக்கு அதிக அதிகாரம் வழங்குங்கள். அவர்களின் அதிகாரத்தில் கட்சியினரோ ஆட்சியினரோ தலையிட மாட்டார்கள் என்று நம்பிக்கை அளியுங்கள். தயவு செய்து ஈ பாஸ் நடைமுறையை கொண்டு வாருங்கள். மக்கள் நடமாட்டம் குறைந்தால் கொரோனா பரவல் நிச்சயம் குறையும்.நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும்.

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  கடந்த ஆட்சியில் இருக்கும் பொது ஊரடங்கு கூடாது என்றவர்கள் என் இப்போது ஊரடங்கு போட்டார்கள். உறடங்கை போட்டு விட்டு அதை எப்படி நடைமுறை படுத்துவது போன்ட்ரா விஷயங்களில் கோட்டை விடுதல் இன்னும் பல விஷயங்கள் தெரியாமல் திறமையான அதிகாரிகளை மாற்றி விட்டு தனக்கு வேண்டிய அதிகாரிகளை பக்கத்தில் உட்கார வைத்து கொள்வது இதுவெல்லாம் கோரோனோவை அழிக்க வரவில்லை. கோரோனோவை இன்னும் அதிகமாக உருவாக்கும். ஸ்டாலினுக்கு ஆலோசனனை சொல்பவர்கள் சரியாக சொல்லி கொடுக்க வேண்டும்.

Advertisement