dinamalar telegram
Advertisement

காஞ்சி மருத்துவமனையில் செவிலியர்கள் கவுரவிப்பு

Share
Tamil News
காஞ்சிபுரம்- உலக செவிலியர் தினத்தையொட்டி, டாக்டர் கலாம் வழியில் உதவும் அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.போரில் காயமடைந்தோரை காப்பாற்ற கடுமையாக உழைத்த, பிரிட்டிஷ் செவிலியரான, 'புளோரென்ஸ் நைட்டிங்கேல்' பிறந்த தினமான மே 12ம் தேதி, ஆண்டுதோறும், உலக செவிலியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி காஞ்சிபுரத்தில் உள்ள டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனாவிலும் தன்னலம் கருதாமல் நோயாளிகளை பாதுகாக்கும் செவிலியர்களுக்கு முக கவசம். கையுறை, இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து கவுரவித்தனர். 'கேக்' வெட்டி, செவிலியர் தினத்தை கொண்டாடினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement