dinamalar telegram
Advertisement

தீவிரம்: கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்புப் பணி... கூடுதல் பணியாளர்களை நியமித்து நடவடிக்கை

Share
Tamil News
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகர பகுதியின் 21 வார்டுகளிலும் குழுக்கள் நியமித்து கூடுதல் பணியாளர்கள் மூலமாக நோய் தடுப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் கொரோனா பரவல் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து அங்கு காய்ச்சல் கண்டறிதல், தடுப்பூசி போடுதல், தொற்று கண்டறிதல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் நோய் தொற்று பரவலை தடுக்கும் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாது, நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நோய் தடுப்பு பணிகள் முடுக்கிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி நகராட்சி ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அலுவலர் பங்கஜம் தலைமையில், ஒரு சுகாதார செவிலியர், ஒரு நகராட்சி பணியாளர், ஒரு ஆஷா பணியாளர், உதவியாளர் ஒருவர் என 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.அதன்படி மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட்டு நகரின் 21 வார்டுகளிலும் நோய் தடுப்பு பணிகள் தினமும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக கல்வராயன்மலைப் பகுதியை சேர்ந்த ஆஷா பணியாளர்கள் 25 பேர் வரவழைக்கப்பட்டு தடுப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். நகரின் 21 வார்டுகளின் அனைத்து தெருக்களிலும், வீடு வீடாக சென்று காய்ச்சல் கண்டறிதல், தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு நோய் கண்டறிதல், தடுப்பூசி போடுவதற்கு சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி போடுவது, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற தொற்றாநோய் பாதித்த நோயாளிகளுக்கு மாதாந்திர மாத்திரைகளை வழங்கிடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.

இவர்களின் வழிகாட்டுதல்படி, கூடுதல் தடுப்பு பணிகள் அந்தந்த பகுதிகளுக்கு விரைவுபடுத்திட மருத்துவ அலுவலர்கள் ஜெகதீசன், சவுந்தர்யன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சிட்டிபாபு, கவியரசன், வெங்கடேசன், விக்னேஷ்வரன் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இவர்களின் சேவைப்பணிகளில் நகராட்சி கமிஷனர் குமரன் வழிகாட்டுதலுடன் துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார் முன்னிலையில் நகராட்சி பணியாளர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement