dinamalar telegram
Advertisement

100 விரைவு ரயில்களில் 6,260 டன் ஆக்சிஜன் சப்ளை

Share
புதுடில்லி: நாடு முழுதும், 100 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' ரயில்கள் வாயிலாக, 6,260 டன் திரவ ஆக்சிஜன் 'சப்ளை' செய்யப்பட்டு உள்ளதாக, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சப்ளைக்கு, இந்திய ரயில்வே நிர்வாகம், 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' என்ற விரைவு சரக்கு ரயில்களை, கடந்த ஏப்., 19 முதல் பயன்படுத்தி வருகிறது. இதுவரை, 100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 396 'டேங்கர்'களில், மருத்துவப் பயன்பாட்டிற்கான 6,260 டன் திரவ ஆக்சிஜனை மாநிலங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளன.

வகையில், டில்லி, 2,404 டன்; உத்தர பிரதேசம், 1,680 டன்; ஹரியானா, 939 டன்; மஹாராஷ்டிரா, 407 டன்; மத்திய பிரதேசம், 360 டன்; தெலுங்கானா, 123 டன்; கர்நாடகா, 120 டன்; ராஜஸ்தான், 40 டன் திரவ ஆக்சிஜனை பெற்றுள்ளன.நேற்று முன்தினம் முதன் முறையாக, ஜார்க்கண்டில் இருந்து, 120 டன்; ஒடிசாவில் இருந்து, 50 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • ஆப்பு -

    தமிழ்நாட்டில் தயாரான ஆக்சிஜனை ஆந்திராவுக்கும், ஓடிஷா ஆக்சிஜனை தமிழகத்துக்கும், கர்னாடகா ஆக்சிஜனை காஷ்மீருக்கும் மாத்தி மாத்தி போக்குவரத்து தண்டச்செலவு பண்ணி அனுப்பி கொரோனாவை முறியடிப்போம். ஆக்சிஜன் ஸ்பெஷல் உட்டு காப்பாதுனோம்னு மெடல் வாங்கி குத்திப்போம். நாங்கல்லாம் பொருளாதாரத்தில் பி.ஹெச்.டி வாங்குனவங்க.

  • kosu moolai - nadunilaiyoor,இந்தியா

    ஆட்சி மாற்றத்தின் அருமைகளை மக்களலால் கண்கூடாக பார்க்கமுடிகிறது.

    • Vena Suna - Coimbatore,இந்தியா

      ஏப்ரல் 19...செய்தது மோடி அரசு ....ஆட்சி மாற்றம் எங்க வந்தது?

    • Truth Behind - ,

      super comedy

    • Truth Behind - ,

      super comedy

Advertisement