dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம் : ஒண்ணும் புரியலையே!

Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா தொற்று, 2019 இறுதியில் தன் ஆட்டத்தை துவக்கி, முதல் அலையை 2020ல் முடித்து, தற்போது 2021ல் இரண்டாவது அலையை வீசிக் கொண்டிருக்கிறது. இரண்டு அலையிலும், சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது. அவசியமின்றி வெளியில் சுற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. முதல் சுற்றில் பாதிக்கப்பட்டோருக்கு, சத்தான ஆகாரம் கொடுத்து ஓய்வு கொடுத்தனர். அதுவே அவர்களை, நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற போதுமானதாக இருந்தது. அதற்காக எந்த மருந்தும்,மாத்திரையும், ஊசியும் போட்டதாக தகவல் இல்லை. இறப்பு சதவீதம் குறைவாகவே இருந்தது.

முதல் அலையில் இறந்தவரின் உடலை, உறவினரிடம் ஒப்படைக்காமல் அரசே முழு பாதுகாப்புடன் அடக்கம் செய்தது. இப்போது இரண்டாவது அலையில், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இரு தவணைகளில் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது. தடுப்பூசி தான் போடப்படுகிறதே தவிர, கொரோனாவை குணமாக்கும் மருந்து, கண்டுபிடிக்கப்படும் நிலையில் தான் உள்ளது. முதல் அலையின் போது கொரோனா தாக்கி இறந்தவரின் உடலை, உறவினரிடம் காட்டக் கூட தயங்கிய அரசு, தற்போது இரண்டாவது அலையில் இறப்பவரின் உடலை, அப்படியே உறவினரிடம் ஒப்படைத்து விடுகிறது. அதுவும் இறந்தவர் உடலை, முழு பாதுகாப்புடன், 'பேக்' செய்யாமல் உறவினரிடம் ஒப்படைக்கின்றனர்.

இது ஏன் என புரியவில்லை! இரண்டாவது அலையில், நோய் தாக்கி இறந்தவரின் உடலில் இருந்து நோய் கிருமி பரவாது என, ஏதாவது ஆராய்ச்சி உறுதி செய்திருக்கிறதா? ஒண்ணுமே புரியலை... மர்மமாக இருக்கிறதே!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (36)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Corona is simply a fake ,India is reeling under severe Economic crisis, both the Central and state Governments Could not handle the current economic situation, thus worsening the economy further so every one should beg and must fulfill their livelihood. It is definitely a diverting tactics. g.s.rajan Chennai. g.

 • Muthu - Chennai,இந்தியா

  தேவை உடனடி தடை ஒட்டுமொத்த தமிழ்நாடே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இந்த சூழ்நிலையில், ஒருசில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பை நடிகர் நடிகைகளின் எதிர்ப்பையும் மீறி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும். இந்த அரசு செய்யும் என நம்புகிறேன்.

 • மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா

  முழு முடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்தி அரசின் உத்தரவுகளை மீறுகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் லாக்டவுன் கொண்டு வந்தோம்.அதே சமயம் மக்கள் கஷ்டப்பட கூடாது என்று தளர்வுகளை கொண்டு வந்தோம் ஆனால் சிலர் இந்த தளர்வுகளை மிஸ் யூஸ் செய்கிறார்கள்.

 • வணங்காமுடி திராவிடன் - அஞ்சாமை திராவிடர் உடமையடா ,இந்தியா

  பாஜக செல்வாக்குள்ள அயோத்தியில் திருப்பம்: இந்துக்கள் அதிகம் வாழும் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக முஸ்லிம் மவுலானா தேர்வு

  • ஆரூர் ரங் - ,

   ஆனா முஸ்லிம் 30 சதவீதத்துக்கு மேல் இருந்தா வேற ஆளுக்கு திமுக அதிமுக காங்கிரசு சீட்டு கொடுக்கமாட்டாங்க .

  • Truth Behind - ,

   Hindus prooving they are transparent, can Hindu win in Muslim area ? Never.

  • மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா

   திருவொற்றியூர் / THIRUTHANI / திருவண்ணாமலை/ திருச்செந்தூர் /மயிலாப்பூர் / ஸ்ரீரங்கம் / பழனி / காஞ்சிபுரம் போன்ற பல இடங்களில் DMK வென்று இருப்பது "" DMK இந்து மக்களின் எதிரி "" என்ற சிங்கி கூட்டத்தின் கதையை மக்கள் பொருட்படுத்தவில்லை என்று தெள்ள தெளிவா தெரிகிறது , எனவே இந்த கதைக்கு பதில் சொல்லி கொண்டு இருக்காமல் வளர்ச்சிக்கான வேளைகளில் ஈடுபடுவது இன்றய தேவை. this is real truth

 • vnatarajan - chennai,இந்தியா

  இந்த இரண்டாம் அலைக்கு காரணம் மக்களின் அலட்சியப்போக்கு மட்டும் அல்ல நடந்து முடிந்த மாநில தேர்தலுக்கு முன்னாள் அரசியல்வாதிகள் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டங்களும் ஒரு காரணம் தேர்தல் கமிஷன் இதை கண்டுகொள்ளவில்லை

Advertisement